Tuesday, 28 October 2014
வலைப் பதிவர்களுக்குள் மோதலா? அதெப்படி?
பெருமதிப்புக்குரிய வலைப்பதிவர்களே! இப்பதிவைப் படிக்கும் போதோ படித்து முடித்த பின்னோ தங்கள் உள்ளத்தில என்ன தோன்றுகிறதோ அப்படியே பின்னூட்டத்தில் எழுதுங்கள்.
நான் தொடக்கத்தில் கருத்துக்களத்தில் (Forum) எழுதினேன். பின்னரே வலைப்பூவில் (Blog) எழுதுகிறேன். ஆயினும் கருத்துக்களத்தை (Forum) விட வலைப்பூ (Blog) சிறந்தது என்பேன். மக்களாய (சமூக) வலைத்தளங்களில் பதிவின் தலைப்பையும் இணைப்பையும் வழங்கி வருகிறேன். இது என் வலைப்பயணம்.
அண்மையில் "முகநூல் வலைப்பூவை அழிக்கிறதா? (http://valarumkavithai.blogspot.com/2014/10/blog-post_1.html) " என்ற தலைப்பில் மதிப்புக்குரிய பாவலர் நா.முத்துநிலவன் அவர்கள் ஓர் ஆய்வுக்கண்ணோட்டத்தைப் பதிந்திருந்தார். அது ஒரு சிறந்த பதிவு.
"முகநூலில் மயங்கிக் கிடப்போர்
வலைப்பக்கம் எழுத வருக.
அப்போதுதான் உங்கள்
எழுத்தாற்றல் வளரும் மிளிரும்!" என்ற
பாவலர் நா.முத்துநிலவன் அவர்களது கருத்தையே நானும் உங்களுடன் பகிருகிறேன்.
வலைப் பதிவர்களுக்குள் மோதலா? அதெப்படி? கொஞ்சம் பார்ப்போமா...
காட்சி-1
முகநூலார்: வலைப்பூவில் (Blog) எழுதுவதிலும் பார்க்க, முகநூலில் எழுதினால் சுடச்சுடக் கருத்துகள், விருப்புகள் வந்து கொண்டிருக்குமே!
வலைப்பூவார்: நாங்களும் எங்கட பதிவின் தலைப்பையும் இணைப்பையும் வழங்கி வருகிறேமே!
முகநூலார்: அதை நாங்க சொடுக்கிப் படிக்கிறதிற்கிடையே பல முகநூல் பதிவுகளைப் படித்துவிடுவோமே!
வலைப்பூவார்: சிறந்த பதிவுகளைப் படிப்போர் பதிவின் தலைப்பையும் இணைப்பையும் சொடுக்கிப் படிக்கிறாங்களே!
முகநூலார்: முகநூலை ஏன்காணும் வெறுக்கிறியள்?
வலைப்பூவார்: வலைப்பூப் பதிவுகள் (Blog Posts) ஓர் ஆவணப்படுத்தல் (Documentation) ஆக இருக்குமே!
முகநூலார்: முகநூல் பதிவுகள் அப்படி இருக்காதா?
வலைப்பூவார்: அழியும், மறையும் எனத் தெரிந்தும் இல்லாள் கோலம் போடுவது போலத் தானிருக்கும். அதாவது, நாளுக்கு நாள் முகநூல் முகப்பு மாற பழையவை மறைகின்றனவே!
முகநூலார்: அதற்காக முகநூலை விட ஏலாது. காதல் மொழி பேசும் வாலைகளும் உண்டே!
வலைப்பூவார்: காதல் மொழி பேசும் வாலைகளும் வலைப்பூவிற்கும் (Blog) வரலாம். ஆனால், இணையத்தில் எல்லோரும் போலிகளே (Fakers)!
காட்சி- 2
பதிவர் - 01 : நல்ல நல்ல பதிவர்கள் எல்லோரும் கருத்துப் (Comments) பதிவு வேண்டாமென நிறுத்திவிட்டாங்களே!
பதிவர் - 02 : யாழ்பாவாணன் போன்றவர்கள் "ஆ, ஊ, ஹா, ஷா, உஸ், ம்" என ஓரெழுத்துகளாலா கருத்துப் (Comments) போடுவதாலோ...
பதிவர் - 01 : சின்னப்பொடியன் யாழ்பாவாணன் ஒரு சொல், இரு சொல் கருத்துத் (Comments) தானே போடுறார்... அதை விடுவோம், கருத்துப் (Comments) போடுறதென்றால் மின்னஞ்சலில் போடு என்று தானே கருத்துப் (Comments) பதிவை நிறுத்தி இருக்காங்களே!
பதிவர் - 02 : அப்படியா சங்கதி! அவங்கட உறவுகள் கருத்துப் (Comments) போட்டால் காணுமாக்கும். சரி! அதை விடுவோம், ஒருவரும் கருத்துப் (Comments) போடாமையால் இப்ப பலருக்கு வலைப்பூவில (Blog) நாட்டம் இல்லையாமே!
பதிவர் - 03 : படம் பார்த்து இலக்கமிடு (Verification code), பின்னூட்டப் படிவம் (Feedback Form), கருத்துப் பெட்டி(Comments box) எனப் பல இழுபறிகளை வைத்துக்கொண்டு கருத்துப் (Comments) போடு என்றால் எப்படிப் போடுறது?
பதிவர் - 04 : பட்டென்று வந்து
சட்டென்று படித்து
நறுக்கென்று கருத்திட
வழி விடாமல் எவர் மீதும்
பழி போடாதீர்கள்!
பதிவர் - 02 : கொஞ்சம் நில்லுங்கோ...
பதிவரின் அனுமதி (After Approval)) இன்றி
கட்டுப்பாடு ஏதுமின்றி
கருத்துப் (Comments) போடும் வசதி இருந்தும்
கருத்துப் (Comments) போட எவருமில்லையே!
பதிவர் - 01 : உன்னைப் போல் அயலானையும் விரும்பு (நேசி)!
பதிவர் - 03 : அப்படி என்றால், பிறருக்குக் கருத்துப் (Comments) போட்டால் தான் எங்களுக்கும் பிறர் வந்து போடுவாங்களோ!
பதிவர் - 04 : யாழ்பாவாணன் போல ஓரெழுத்தால கருத்துப் (Comments) போட்டால் எவரும் திரும்பிப் பார்க்காயினம். உருப்படியாப் படித்து உருப்படியாக் கருத்துப் (Comments) போட்டால் தான் எவராச்சும் திரும்பிப் பார்ப்பினம்.
பதிவர் - 05 : உந்தத் தலையிடிகளைத் தாங்கேலாமல் தான் நம்மாளுகள் முகநூல் (Face book) பக்கம் தலையைக் காட்டுறாங்களோ... ஆனால், அங்கே கண்ணை மூடிக்கொண்டு விருப்புப் (Like) போடுறவங்க இருப்பதாலோ...
பதிவர் - 01 : விடியப் போட்ட கோலம் பொழுது சாய மறையுமாப் போல இருக்கிற முகநூலை (Face book) விட வலைப்பூ (Blog) எவ்வளவோ மேல்...
பதிவர் - 05 : எவ்வளவுக்கு எவ்வளவு இதெல்லாம் நம்மாளுங்க புரிந்து கொள்கிறாங்களோ, அவ்வளவுக்கு அவ்வளவு வலைப்பூ (Blog) உலகில் நாங்க மின்னுவோம் பாருங்கோ!
மேற்படி இரண்டு காட்சிகளை அமைத்து என் உள்ளத்தில் தோன்றிய எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்துள்ளேன். முகநூலை (Face book) நட்பை ஆக்குவது போல வலைப்பூ (Blog) இலும் நட்பை ஆக்கலாம். நட்புகளின் ஒத்துழைப்புடன் பகிர்வு (Share), அறிமுகம் (Introduce), கருத்திடல் (Comments) என எல்லாம் ஒருவருக்கொருவர் மேற்கொண்டு வலைப்பூ (Blog) உலகில் நானும் மின்னலாம் என எண்ணுகிறேன்.
இதெல்லாம் உங்களுக்கு முன்கூட்டியே தெரிந்தமையால் நீங்க முன்னேறி விட்டீர்கள். எடுத்துக்காட்டாக ஜோக்காளி தளம் முதலாமிடம் வரக் காரணம் யாழ்பாவாணனைப் போல நன்றி மட்டும் சொல்லாமல் கருத்து (Comments) இட்டவர்களை மகிழ்வூட்டும் பதில்களை அறிஞர் பகவான்ஜி வழங்குவதாலும் தான். நான் கூட அவரது பதிலில் கட்டுண்டு ஒரு பதிவுக்கு இருண்டு முறை {முதலாவது கருத்து (Comments) இட, இரண்டாவது நகைச்சுவையான பதிலறிய} பார்ப்பேன்.
முடிவாகச் சொல்ல ஒன்றுன்டு. கருத்து (Comments) இடுதல் பற்றி எண்ணும் நாம்; கருத்து (Comments) இட்டவர்களை மகிழ்வூட்டும் பதில்களையும் தர முயற்சி செய்யலாம், வலைப்பூ (Blog) நடாத்தியவாறு முகநூலையும் (Face book) பேணலாம். வலைப்பூ (Blog) உலகில் முன்னேற உதவுமெனச் சில எண்ணங்களை நான் பகிர்ந்தாலும் உங்களிடம் பல எண்ணங்கள் இருக்கிறதே, அவற்றை இங்கு பின்னூட்டமாகத் தரலாமே!
Subscribe to:
Post Comments (Atom)
உங்களின் அறிவார்ந்த பதிவை ரசித்து படித்துக் கொண்டே வந்தால் ,கடைசியில் என் தளத்தையே உதாரணம் காட்டி இருப்பதற்கும் ....
ReplyDeleteஎன் 'பதிவு நாலு வரி ,பின்னூட்டப் பதில் நாற்பது வரி'பாணியை ரசித்து சொல்லி இருப்பதற்கும் ...
மனங்கனிந்த நன்றி !
தங்கள் பதிவைப் படித்தோ தங்கள் கருத்தைப் பின்பற்றியோ நானும் அறிவைப் பெற்றுள்ளேன். தங்கள் செயலாற்றலைப் புதிய பதிவர்கள் பின்பற்றி வெற்றிகாண வேண்டுமென்பதற்காக உண்மையைத் தான் பதிவு செய்தேன்.
Deleteமிக்க நன்றி.
நல்ல பதிவு வித்தியாசமாக எழதி இருக்கிறீர்கள் முகநூலையும் வலைபதிவையும் ஒப்பிடக் கூடாது.
ReplyDeleteமுகநூல் பாஸ்ட் புட் போன்றது. வலைப் பதிவு முழு சாப்பாடுப் போன்றது.
எனது ஒட்டு வலைப் பூவிற்கே. அது படைப்பாளிகள் அல்லாதோர் எல்லோருக்கும் பொதுவானது. வலைப்பூ எழுத நல்ல படைப்பாற்றல் வேண்டும்.
Delete"முகநூல் பாஸ்ட் புட் போன்றது. வலைப் பதிவு முழு சாப்பாடுப் போன்றது." என்பதும் உண்மை தான்!
"வலைப்பூ எழுத நல்ல படைப்பாற்றல் வேண்டும்." என்ற கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்.
மிக்க நன்றி.
வலைப்பதிவு பெறுமதியானது.
ReplyDeleteஆவணம் போன்றது.
முகநூல் அப்படியல்ல.
அழிவது.
இது இருக்க
இப்போதெல்லாம்
எனக்கு இரண்டுபேர் கருத்திடுவினம்
அப்படி கருத்து வறுமையாகிவிட்டது என்பக்கத்தில்
நல்ல கருத்து அலசல்
நன்றி.
வேதா. இலங்காதிலகம்
தற்போது வலைப்பூப் (Blog) பதிவுகளும் தமிழ்மணத்தில் குறைந்து வருகிறது. காலப்போக்கில் கருத்து (Comments) இட வருவோர் அதிகரிக்கலாம்.
Deleteதங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
மிக்க நன்றி.
வித்தியாசமான ஆழமான சுவாரஸ்யமான அலசல்
ReplyDeleteபகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்
தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
Deleteமிக்க நன்றி.
வலைப்பூ என்னும் தோட்டத்தில்தான்
Deleteஎன் உள்ளத்தில் பாதுகாத்து வைத்திருந்த
பல ஆயிரக்கணக்கான விதைகள் முளைத்து
தளிர்விட்டு,பூத்து ,மலர்ந்து மணம் வீசியது
முகர்ந்தவர்கள் வெகு சிலரே எனினும்
அது மனதிற்கு மகிழ்ச்சியை அளித்தது.
முகத்தில் உணர்ச்சிகள் மாறுவதுபோல்
முகநூலின் போக்கு மாறிக்கொண்டே இருக்கும்
தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
Deleteமிக்க நன்றி.
எது நமக்கு உதவியாகவும் பயனள்ளதாகவும் இருக்கிறதோ..அதை் தொடருவதான் நல்லது.. வவ்வாள் தொன்னூறு பொச்சுக்கு ஆசைப்பட்டு,பிறகு ஒன்னுமே இல்லாமல் வாய் வழியாக கழிப்பது மாதிரி இல்லாமல் இருந்தால மெத்தச் சரி என்பதே என்னுடைய கருத்து.
ReplyDeleteதங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
Deleteமிக்க நன்றி.
ஆகா வேறொரு கோணத்திலிருந்து அழகாக எழுதியிருக்கிறீர்கள் அய்யா.
ReplyDeleteதலைப்பைப் பார்த்ததும் கொஞ்சம் பயந்துபோய்வி்ட்டேன் என்பதும் உண்மைதான்.
சரியான முடிவுக்கே வந்திருக்கிறீர்கள். என் பதிவையும் மேற்கோளிட்டதற்கு நன்றி
தங்கள் வழிகாட்டலை முதன்மைப்படுத்தி உள்ளேன்.
Deleteதங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
மிக்க நன்றி.
வலைப்பூ தான் என்னுடைய பேவரிட்! நானும் தமிழ் கருத்துக்களத்தில் எழுதி இருக்கிறேன்! முகநூலில் பதிவுகளை பகிர்ந்தாலும் நிறைய எழுதுவது இல்லை! பின்னூட்டங்களுக்கு பதில் சொல்வது என்ற உங்கள் ஆலோசனை நன்றாக உள்ளது செயல்படுத்தி பார்க்கிறேன்! நன்றி!
ReplyDeleteநமது வலை உறவுகள் பெருகப் பெருக எமது வலைப்பூ (Blog) முன்நிலைக்கு வருமே!
Deleteதங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
மிக்க நன்றி.
வளர்ந்து வரும் என்போன்றோர்களின் எளிய படைப்புகளை ஊக்குவிக்க அனுபவமிக்க வலைப் பூ சூடிய ஜாம்பவான்கள் கருத்து சொல்ல வர மறுப்பதன் மர்மம் என்ன? தமிழில் முதுநிலை /ஆசிரியர் கல்வி பட்டம்/ முதுநிலை இதழியல்(journalism and mass communicaion) படித்த எனக்கு வலைப் பூவுக்குரிய இலக்கணம் என்ன என்பதை தங்களைப் போன்றவர்கள் விளக்கினால் அடியேணும் அறிந்து கொண்டு செயல் படுவேன் அய்யா!( ஏனென்றால் வலைப் பூ வாசம் வீச என்னால் இயன்ற முயற்சியை செய்வேன்)
ReplyDeleteநன்றியுடன்,
புதுவை வேலு
நானோ உங்கள் அறிவை விடச் சிறியன்.
Deleteஆயினும், சொல்கிறேன்...
வலைப்பூ (Blog) என்பது பொதுவான கட்டமைப்பில் (Standard Structure) தகவல் சேமிப்புத் தளமாகும். இதன் உள்ளடக்கம் இணையப் பக்கத்தில் (Web Site) வெளியிடப்படுகிறது. வலைப்பூ (Blog) முகவரியை உலாவியில் (Browser) தட்டச்சு செய்து நாம் பார்ப்பது போல, அனுபவமிக்க வலைப்பூ சூடிய ஜாம்பவான்கள் மட்டுமல்ல எல்லோரும் இவ்வாறு பார்வையிட வழியமைத்தலே வலைப்பூ வாசம் வீச இடமளிக்கும்.
இதற்கு முதலில் நாம் மக்களாயத் (சமூகத்) தளங்களான கூகிள்பிளஸ், முகநூல், டுவிட்டர், லிங்டின் போன்றவற்றில் கணக்கைத் திறந்து, அறிஞர்களை மற்றும் நமக்குத் தெரிந்தவர்களை நண்பர்களாக இணைத்துக்கொள்ள வேண்டும். பின்னர் அவற்றின் முகப்புப் பதிவில் (Wall Post) நாம் வலைப்பூ (Blog) இல் இட்ட புதிய பதிவின் தலைப்பையும் முகவரியையும் (url) பதிந்து பகிருவதன் மூலம் அத்தனை நண்பர்களுக்கும் தெரியப்படுத்தலாம். இதனால் தங்கள் வலைப்பூ (Blog) இற்கான வருகையாளர் பெருக்லாம்.
இரண்டாவதாக தமிழ்மணம், தேன்கூடு, இன்ட்லி, தமிழ்வெளி போன்ற வலைத் திரட்டிகளில் எமது வலைப்பூவை (Blog) இணைத்துக்கொள்ள வேண்டும். இவற்றிலும் எமது புதிய பதிவின் தலைப்பையும் முகவரியையும் (url) பதிந்து கொள்வதன் மூலம் வருகையாளரைப் பெருக்லாம்.
இது பற்றிய மேலதிகத் தொழில்நுட்பப் பதிவுகளை நண்பர் திண்டுக்கல் தனபாலன் அவர்களின் தளத்தில் படிக்கலாம். அதற்கான இணைப்பைக் கீழே தருகின்றேன்.
http://dindiguldhanabalan.blogspot.com/search/label/%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B3%20%E0%AE%A8%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D
மிக்க நன்றி பாவலரே!
ReplyDeleteஅருஞ்சொல்லால் பெருந்தகவல் தந்துள்ளீர்கள்!
தங்களது தமிழ்த் தொண்டோடு சமூகத் தொண்டினையும் செய்து வருவது போற்றுதலுக்குரியது.
அன்புடன்,
புதுவை வேலு
நாம் எல்லோரும் ஒன்றிணைந்து வலைப்பூ (Blog) வழியே உலகெங்கும் நற்றமிழ் பேண முயல்வோம். அதற்காக நான் என்றும் எவருக்கும் ஒத்துழைத்தே செல்கிறேன். என்றும் எனது பங்களிப்புத் தங்களுக்கு இருக்கும்.
Deleteமிக்க நன்றி.
மிகவும் வித்தியாசமான பதிவு! இரண்டுமே வேறு வேறு தளங்கள்!
ReplyDeleteஎங்கள் ஆதரவு வலைப்பூவிற்கே! இங்குதான் நமது எழுத்தாற்றலை வெளிப்படுத்த முடியும்.....
ரசித்தோம் பதிவை1
தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
Deleteமிக்க நன்றி.
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும், சுற்றத்தாருக்கும் எங்கள் மனமார்ந்த இனிய தமிழர்/உழவர் திருநாள் வாழ்த்துக்கள்!
ReplyDeleteஇனிய தைப்பொங்கல் வாழ்த்துகள்
Delete