Monday 19 January 2015

பரிசு பெற்ற பதிவுகள் மின்நூலாக வெளிவரும்!

உலகத் தமிழ் வலைப்பதிவர்களே!
வலைப்பூக்கள் வழியே ரூபன் குழுவினர் அடுத்தடுத்து இலக்கியப் போட்டிகளை நடாத்துவது யாவரும் அறிந்ததே! இவ்வாறான போட்டிகளில் முதல் பத்துப் பதிவுகள் தெரிவு செய்யப்படுவது வழக்கம். 2015 தைப்பொங்கல் நாளை முன்னிட்டுச் சிறுகதைப் போட்டியும் நடாத்துகிறார்களே!

யாழ்பாவாணன் வெளீயீட்டகம் ஆகிய நாம் ஒவ்வொரு போட்டியிலும் தெரிவு செய்யப்பட்ட முதல் பத்துப் பதிவுகளை ரூபன் குழுவினருடன் இணைந்து ஒவ்வொரு மின்நூலாக வெளியிட எண்ணியுள்ளோம். அவற்றை மின்நூலகமாக (Cloud Drive இல்) பேணி உலகெங்கும் பரப்ப எண்ணியுள்ளோம். ஒவ்வொரு மின்நூலிலும் உங்கள் பதிவு இடம் பெற வேண்டுமாயின் ரூபன் குழுவினர் நடாத்தும் ஒவ்வொரு போட்டியிலும் பங்குபற்றி முதல் பத்து இடத்திற்குள் தங்கள் பதிவு இடம் பெற்றிருக்க வேண்டும்.

கடந்த இரண்டு ஆண்டுகளில் நடாத்திய போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுடன் நீங்களும் இணைந்து 2015 தைப்பொங்கல் நாளை முன்னிட்டு நடாத்தப்படும் சிறுகதைப் போட்டிகளில் பங்கெடுக்க முன்வாருங்கள். மேலதிகத் தகவலைப் பெறக் கீழ்காணும் படத்தைச் சொடுக்குக.

உலகம் தழுவிய மாபெரும் சிறுகதைப் போட்டி

இப்போட்டிகள் யாவும் வருவாய் நோக்கமின்றி பொதுப்பணியாகவே (சேவையாகவே) நடாத்தப்படுகிறது. இதன் இலக்கு சிறந்த பதிவர்களை அடையாளப்படுத்தவும் தமிழை உலகெங்கும் பரப்பவுமே! உலகெங்கும் வாழும் வலைப்பதிவர்கள் ஒன்றிணைந்து இப்பொதுப்பணி வெற்றி பெற உழைப்போம் வாருங்கள்.


Thursday 15 January 2015

தை பிறந்தாச்சு வெளியீடுகள் என்னவாச்சு

உலகத்தார் தமிழ் கற்று
உலகெங்கும் தமிழ் வாழ
உலகெங்கும் தமிழர் உலாவி வர
வலைத்தளம்,
வலைப்பூ, கருத்துக்களம் என
இணையம் வழியே தமிழ் பரப்பும்
மதிப்புக்குரிய
படைப்பாளிகள், வாசகர் எல்லோருக்கும்
இனிய தைப்பொங்கல் வாழ்த்துகள்!
தை பிறந்தாச்சு - இனி
வெளியீடுகள் என்னவாச்சு என்பீர்...
எம்மைப் போல
எல்லோரும் இனிதே வாழ
எம் உள்ளத்து வெளியீடுகளை
எல்லோருக்கும் பகிருவோம்!

Sunday 4 January 2015

பதிவர் ஓடித் தலைமறைவு

நண்பர் ஒருவரின் பதிவிற்கு
நண்பர்கள் பலர்
கருத்துரைத்த போதும்
பதில்க் கருத்தைக் காணாமையால்
"பதில் கருத்துக்கு அஞ்சி
பதிவர் ஓடித் தலைமறைவு" என
நாளேடு ஒன்றில்
செய்தி போடவேண்டி வருகிறதே!
உண்மையும் தான்
திறனாய்வாளரின் கேள்விக்கு
பதிலளிக்கத் தவறினால்
உங்கள் மீது
வாசகர் மதிப்பு வைக்கமாட்டார்களே!
நண்பர்களே!
உங்கள் பதிவுக்கு
பிறர் கருத்துத் தெரிவித்தால்
உடனுக்குடன்
பதில் கருத்தைத் தெரிவியுங்களேன்!
ஒவ்வொருவரும்
தங்கள் பதிவினைப் பதிந்த பின்
ஒதுங்கி இருக்க முடியாதே...
ஒரு பதிவு
எப்போது நிறைவடைகிறது?
அதற்கான
எதிற்கணைகளுக்குப் பதில்
வழங்கப்பட்டிருந்தால் மட்டுமே!
பதிற்கணைகளுக்குப் பொறுப்புக்கூற
அஞ்சும் பதிவர்களே
எப்படித்தான்
உங்கள் எழுதுகோல்
உங்களுக்கு   ஒத்துழைக்கிறதோ
எனக்கும் தான் தெரியவில்லையே!
நானொரு பதிவினைப் பதிந்தால்
பதிந்த பதிவுக்குக் கிட்டும்
பதில்களையே பார்த்து
பதில் கூறி மகிழ்வடைவதனாலேயே
எனக்கும்
என் எழுதுகோல் ஒத்துழைக்கிறதே!
 
(இதழியல் நோக்கில் "எழுதிய எழுத்துக்கு எழுதியவரே பதில் கூற வேண்டும்" என்பதை வெளிப்படுத்தவே இப்பதிவினை மேற்கொண்டேன்.)