Showing posts with label ஊடகங்களும் வெளியீடுகளும். Show all posts
Showing posts with label ஊடகங்களும் வெளியீடுகளும். Show all posts

Thursday, 9 July 2015

ஒரு வெளியீட்டிற்காக...

நகைச்சுவையெனக் கூகிளில் தேடிய வேளை கீழ்வரும் படம் என் கண்ணில் சிக்கியது. அதைக் கொஞ்சம் படித்த வேளை, அதனை நம்மாளுங்க பார்க்க வைக்க எண்ணினேன். விளைவு தொடர்ந்து படியுங்க.
படத்தின் உரிமம் : வேடந்தாங்கல் (http://sakthistudycentre.blogspot.com/2013/08/free-hospital.html)

படத்தைப் பாருங்க...
இலங்கை என்றால் கொழும்பு காலிமுகத்திடல் கடற்கரை என நினைவூட்டுக.
இந்தியா-தமிழ்நாடு என்றால் சென்ன மெரீனாக் கடற்கரை என நினைவூட்டுக.

அடுத்துப் படத்திலுள்ள பேச்சைப் படியுங்க...
பெண் பிள்ளை உடனே கிளம்பணும் என்கிறாள்
ஆண் பிள்ளை அப்பா, அம்மா தேடுவாங்களா என்கிறான்
மீண்டும் பெண் பிள்ளை பள்ளிக்கூடத்தால மகனும் மகளும் வந்து தேடுவாங்களே என்கிறாள்

அடுத்துப் படத்திலுள்ள ஆள்களை அடையாளப் படுத்துங்க...
இளமை பேசும் இருவரில் எவரையும் அடையாளம் காணமுடியவில்லையா?

அப்ப உள்ளத்தில் எண்ணிப் பாருங்க...
இரண்டு பிள்ளைக்கு அப்பன்காரங்க: நான் வேலைக்குப் போனதும் என் பெண்டாட்டி இப்படித்தானோ...?

வேலையில்லாதவரைக் கட்டிய பெண்டில்மார்: எந்த மாட்டையும் கன்றுகளையும் மேய்க்கப் போனாரோ...?

தெருச் செய்தி: கடற்கரையில் காதல் பண்ணும் இளசுகளை விட இளசுகள் போன்ற பெரிசுகளே அதிகமாம்...

படம் பார் பேச்சைப் படி
ஆளைப் பிடி என்று
கூகிளில் தேடிய படத்தை வைத்து
காதல் மாசடைகிறது
குடும்பம் உடைந்து போகிறது
இந்த நொடிப்பொழுதில்
நம்மாளுங்க இப்படித்தானுங்க என்று
ஒரு வெளியீட்டிற்காக...
இரண்டு பிள்ளைக்கு அப்பன்காரங்களும் 
வேலையில்லாதவரைக் கட்டிய பெண்டில்மாரும் 
உள்ளத்தில் எண்ணியதையும் தந்து
தெருச் செய்தியாக நாட்டுநடப்பையும்
சொல்லி முடித்திருக்கிறேன்! - இனி
உங்கள் எண்ணங்களை வெளியிடுங்களேன்!


Tuesday, 16 June 2015

அறிவுத் தேடலுக்கு / அறிவு பசிக்கு உதவும் தளம்

வாசிப்பவரை வாசகர் என்கிறோம். வாசகர் ஏன் வாசிக்க வருகிறார்கள்? அறிவு பசி போக்கவா? அறிவுத் தேடலுக்கு விருந்து கிடைக்குமென்றா? வாசிப்பதனால் உள/மன நிறைவு கிட்டுவதாலும் அல்லது வாசிப்பதனால் களிப்ப(மகிழ்ச்சிய)டைவதனாலும் வாசகர் வாசிப்பை விரும்புகின்றனர். வாசகர் உள்ளம் (மனம்) அறிந்து எழுதிய படைப்பாளிகளே வெற்றி பெற்றவராயினர்.

நாம் ஏன் எழுதுகிறோம்? எழுதுவதால் நாமும் களிப்ப(மகிழ்ச்சிய)டைகின்றோம். ஆயினும், எமது எழுத்து அதிக வாசகர் கண்ணில் பட்டு சிறந்த படைப்பு எனப் பாராட்டுப் பெறும் வேளை தான் உள்ளம் (மனம்) நிறைவடைகின்றது. சிறந்த படைப்பு எனப் பாராட்டுப் பெற வாசகர் களிப்ப(மகிழ்ச்சிய)டைய வேண்டுமென்பதை மறந்துவிடலாகாது. அதாவது, வாசகர் எதிர்பார்ப்பு எமது எழுத்தில் இருக்க வேண்டுமே!

வாசிப்பவரைப் படிக்காதவர் என எண்ணி எழுதுகோல் ஏந்திய சிலர் கண்டபடி கிறுக்கித் தள்ளி வாசகரிடம் சொல்லடி வேண்டிக்கட்டிய நிகழ்வுகளுக்குப் பல ஊடகங்கள் சாட்சி. எனவே, ஒவ்வொரு படைப்பாளியும் எழுதும் போது எம்மை விட வாசகர் அதிகம் படித்திருப்பார் என எண்ணிக்கொள்ள வேண்டும்.

வாசகருக்கும் படைப்பாளிக்கும் இடையே இருக்கவேண்டிய உறவு நிலையைக் கடுகளவேனும் எடுத்துச் சொல்ல இங்கு முயற்சி எடுத்திருக்கிறேன். இனி வாசகருக்கும் படைப்பாளிக்கும் உதவும் வகையில் "தமிழ் மொழி மூல இணைய வெளியீடுகள்" என்ற தலைப்பில் "தமிழ் மொழி மூல வலைப்பூக்கள், வலைத்தளங்கள்"  என்ற துணைத் தலைப்பில் பேணப்படும் தளத்திற்கு வருமாறு பணிவாக அழைக்கின்றேன்.

இத்தளம் வாசகரின் அறிவுத் தேடலுக்கும் / அறிவு பசிக்கும் உதவும் என நம்புகின்றேன். அதேவேளை சிறந்த படைப்பாளிகள் தங்கள் தளங்களையும் இணைத்துக்கொள்ளலாம். இதில் எனது பணி என்னவென்றால், எனது பத்துப் பன்னிரண்டு தளங்களூடாக இத்தளத்தை அறிமுகம் செய்து வைப்பதாகும். எல்லோருக்கும் பயன்தரும் http://tamilsites.doomby.com/ என்ற தளத்திற்கு வருமாறு பணிவாக அழைக்கின்றேன்.

Wednesday, 13 May 2015

இலக்கியத் திருட்டு - இருட்டில எவரு அழகாய் இருப்பாங்கா?

என்ர கவிதையைத் திருடி அவளு போட்டிருந்தாள்.
என்ர படத்தைத் திருடி அவனு போட்டிருந்தான்.
இப்படிப் பல இலக்கியத் திருட்டுகள் தொடருகின்றன...
கடைசியாகக் கிடைத்த செய்திகளின் படி அறிஞர் பகவான்ஜி அவர்களின் நகைச்சுவையைப் பொறுக்கி இந்திய முன்னணி நாளேடு ஒன்றில் போட்டிருக்கிறாங்களாம். நாளேடுகளே இலக்கியத் திருட்டை மேற்கொண்டால் எழுதுறவங்க பாடு திண்டாட்டம் தான்.

எவங்க ஐயா? எவங்க அம்மா?
எப்பதான்... எப்படியுங்க...
திருவிளையாடல் திரைப்படத்தில மாற்றார் கவிதையை அனுப்பி ஆயிரம் பொற்காசு வென்றெடுத்த தருமியைப் பார்த்து கவிதைக்கான விளக்கத்தைச் சொல்லு என்ற கேட்ட வேளை தருமி பட்ட பாட்டைப் பார்த்தியளோ? அப்படித்தான் இலக்கியத் திருட்டில எழுதுறவங்க பாடு திண்டாட்டம் என்கிறேன்.

உவன் யாழ்பாவாணனும் உப்படிப் பல படைப்புகளைப் பொறுக்கி இலக்கியத் திருட்டுச் செய்கிறான். முறையாகத் தருமியைப் போல சிக்கவில்லைப் போலும்...அதனால அவர் மற்றைய வலைப்பூக்களுக்குள்ளே உள்நுளைந்து பொறுக்கி எழுதிய பதிவைத் தருகிறேன். உங்களால் முடிந்தால் யாழ்பாவாணனையும் தருமியைப் போல சிக்க வைச்சிடுங்க...

அப்பதிவின் தலைப்பு:
இருட்டில எவரு அழகாய் இருப்பாங்கா?

அடுத்து அவரது பதிவைப் படியுங்க:

"இருட்டிலும் ஒளிர ரேடியமா உள்ளது பெண்களிடம்:)" என்ற 
http://www.jokkaali.in/2015/05/blog-post_71.html
அறிஞர் பகவான்ஜி அவர்களின் பதிவிலிருந்து.

''விளக்கை அணைத்தால் எல்லா பெண்களும் அழகுதான்னு 
ஷேக்ஸ்பியர் என்ன அர்த்தத்திலே சொல்லி இருப்பார்?'' என அறிஞர் பகவான்ஜி தன் நகைச்சுவையில போட்டிருந்ததை அறிஞர் வருண் படித்திருக்கிறார்.

"விளக்கை அணைப்பதே பெண்கள், ஆண்கள் அழகைப் பார்த்து "மூட் அவ்ட்" ஆகமல் இருக்கத்தான்." என்று அறிஞர் வருண் தனது கருத்தில் பதிலடி கொடுத்திருந்தார்.

அப்படியென்றால், வில்லியம் ஷேக்ஸ்பியர் இருட்டில ஆணா, பெண்ணா அழகானவங்க என்று எண்ணிப் (கற்பனை செய்து) பார்த்திருக்காங்க...

அவரவர் அழகை அடுத்தவர் கண்ணால பார்த்தாலும் அதனை உள்ளக் (மனக்) கண்ணால தான் எடை போடுறாங்க (இரசிக்கிறாங்க) என்பேன். ஆகையால், இருட்டிலும் சரி வெளிச்சத்திலும் சரி  எல்லோரும் அழகு தான்.  

இப்படி அவரது பதிவை முடித்துக் கொள்கிறார். இங்கே சின்னப்பொடியனாக யாழ்பாவாணன் இருந்துகொண்டு பகவான்ஜி, வருண் போன்றோரின் கருத்துகளை அதுவும் ஜோக்காளி தளத்தில இறங்கிச் சுழியோடிப் பொறுக்கித் தன்னுடைய பதிவை ஆக்கியிருக்கிறார். பகவான்ஜி, வருண் ஆகியோரது கருத்தில்லை என்றால் யாழ்பாவாணனின் பதிவுக்கு உயிர் இருக்காது. அப்படியாயின், யாழ்பாவாணனையும் தருமியைப் போல சிக்க வைச்சிடுங்க...

நானும் ஆளை மாட்டிவிட்டால், யாழ்பாவாணன் இனி மாற்றார் அறிவைப் பொறுக்கி தன் வலைப்பூக்களில் எழுதமாட்டார் என்று தான் எண்ணியிருந்தேன். "கருத்துச் சொந்தக்காரர் பெயர், கருத்து வெளியான தளமுகவரி, எந்தப் பதிவிலிருந்து பொறுக்கியது என எல்லாம் எழுதியிருப்பதால் இலக்கியத் திருட்டு இல்லை" என என்ர பெண்டாட்டி சொன்னாள். அது தான் "யாழ்பாவாணனையும் தருமியைப் போல சிக்க வைக்க முடியாதா?" என்று உங்களைக் கேட்கிறேன்.

எனது இனிய உறவுகளே!
எனது புதிய வலைப்பூவைப் படித்துப் பார்த்து மதியுரை தருவீர்களென நம்புகின்றேன்.
இணைப்பு: https://ial2.wordpress.com/

Saturday, 28 March 2015

கற்பழிப்புச் செய்திகளும் ஊடகங்களும்


கற்பு + அழிப்பு = கற்பழிப்பு என்று யாவரும் அறிந்ததே! கற்பு என்பது அறம் அல்லது ஒழுக்கம் என்று எல்லோரும் சொல்லுவார்கள். இதனடிப்படையில் ஊடகங்களும் தம்விருப்பிற்கு ஏற்றாற் போல கற்பழிப்புச் செய்திகளை வெளியிடுகின்றன.

கற்பு என்பது பெண்ணுக்கு மட்டும் உரியதல்ல; ஆணுக்கும் உரியதே! ஊடகங்கள் இதனை மறந்து விடுவதாகப் பலரும் பேசுவதுண்டு. இயற்கையும் பெண்ணுக்குப் பாதிப்பைத் தருவதால் ஊடகங்களை எதிர்க்க எவருமில்லை என்ற பேச்சு உலாவுகின்றது. ஊர்திகள் மோதுண்டால் மோதிய ஊர்திக்குத் தீமூட்டும் நம்மாளுகள்; பெண்ணைச் செய்தி ஆக்கும் ஊடகங்களையோ பெண்ணின் கற்பை அழிக்கும் ஆண்களையோ தீமூட்ட முன்வராமை தான் இந்நிலை தொடரக் காரணம்.

என் நிலை என்ன வென்றால் ஊர்திக்குத் தீமூட்டும் நம்மாளுகளின் செயலைப் பெரிதாகப் பரப்பும் ஊடகங்கள்; பெண்ணின் கற்பை அழிக்கும் கற்பில்லாத ஆண்களைச் செய்தியாக்கவோ கற்பில்லாத ஆண்களின் செயலைப் பெரிதாகப் பரப்ப முன்வராமை தான் இந்நிலை தொடரக் காரணம். இந்நிலை தொடருவதால் தான் பல பெண்கள் தற்கொலை செய்துகொள்கின்றனர்.

அப்படியாயின், கற்பழிப்புச் செய்திகளை எழுதுவது எப்படி?

நள்ளிரவில் நடுவழியே முள்ளூர் ஆண் கல்லூர் பெண்ணின் கற்பை அழித்துவிட்டான். இந்நிகழ்வை இப்படியும் சிலர் எழுதலாம்.

அரைகுறை ஆடை அணிந்து சென்ற பெண்ணைக் கண்ட ஆண் அவளைக் கெடுத்துவிட்டான்.

நடுவழியே தனியே சென்ற பெண்ணை ஆண்கள் சிலர் கெடுத்துவிட்டனர்.

மது அருந்திய ஆணை நம்பி நடுவழியே சென்ற பெண், அவனாலே கெடுக்கப்பட்டாள்.

இவ்வாறு எழுதுவோர் பெண்ணின் அடையாளத்தைத் தெரிந்து கொள்ள உதவும் தரவுகளையும் எழுதுவர். இப்படி எழுதுவதால் பெண்ணின் பக்கம் தான் முழுப்பிழை என்றாகிவிடுகிறது. இதனால் ஆண்கள் சுத்தமானவர்கள், பெண்களே தவறுக்குக் காரணம் என்றாகிவிடுகிறது.

இவற்றை இப்படி மாற்றி எழுதினால் எப்படி இருக்குமென்று பாருங்களேன்.

இளமை முற்றிய ஆணோ நடுவழியே அழகு முற்றிய பெண்ணைக் கண்டதும் கெடுத்துவிட்டான்.

ஆண்கள் சிலர் நடுவழியே தனியே சென்ற ஏதுமறியாப் (அப்பாவி) பெண்ணைக் கெடுத்து விலங்குகளாயினர்.

பக்கத்து வீட்டாளை நம்பிப் பணியிடத்திலிருந்து வீடு திரும்பிய பெண் அவனாலேயே கெடுக்கப்பட்டாள். பக்கத்து வீட்டாளைக் காவற்றுறை வலைவீசித் தேடுகின்றனராம்.

இப்படி, எப்படி எழுதினாலும் கூட கற்பழிப்பு நிகழ்வுகளைத் தடுக்க முடிவதில்லையே!

எடுத்துக்காட்டாக நள்ளிரவில் நடுவழியே முள்ளூர் ஆண் கல்லூர் பெண்ணின் கற்பை அழித்துவிட்டான் என்றதும் கல்லூர் மக்கள் கல்லெறிந்தே முள்ளூர் ஆணைக் கொல்ல முயன்றனர். அவ்வழியே வந்த காவற்றுறை நிலைமையைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தது.

பள்ளிக்கூட ஆசிரியை மாணவன் ஒருவரை வீட்டிற்கு அழைத்துக் கற்றுக்கொடுப்பதாகக் கூறித் தன் பாலியல் பசிபோக்கப் பாவித்தவேளை கண்ணுற்ற அயலண்டை ஆள்கள் ஆசிரியையை மரத்தில் கட்டிவைத்து ஊரைக்கூட்டி நோகடித்தனர். அவ்வழியே வந்த காவற்றுறை நிலைமையைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தது.

இவ்வாறு கற்பழிப்பு நிகழ்வுகளைத் தடுக்கவல்ல அல்லது கற்பழிப்பு நிகழ்வுகள் தொடராமல் இருக்க உதவும் வகையில் ஊடகங்கள் கற்பழிப்புச் செய்திகளை வெளியிடலாமே!

இது பற்றிப் பெண் ஊடகவியலாளர் ஒருவர் தன்பக்கக் கருத்துகளை எப்படி எழுதுவார். ஊடகவியல் அறிஞர் மு.வி.நந்தினி அவர்களின் "கற்பழிப்பு நியூஸ் எழுதுவது எப்படி?" என்ற பதிவைப் படித்தால் உங்களுக்குப் புரியும் என்று நம்புகிறேன். கீழுள்ள இணைப்பைச் சொடுக்கிப் படித்துப் பாருங்கள்.

http://mvnandhini.com/2015/03/27/%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5/

Wednesday, 18 February 2015

நகைச்சுவை எழுதப் போய் நாடகமான கதை

''தைரியமா கொடுத்த காதல் கடிதத்தை திரும்ப வாங்குறதுக்குள்ளே உயிரே போயிடுச்சா, ஏண்டா?''
              ''அவ புருஷன் கையிலே அது போயிடுச்சுன்னா  வம்பாயிடுமே!''
என்றொரு நகைச்சுவையை நகைச்சுவையாளி (ஜோக்காளி) தளத்தில் படித்தேன்.
அதற்கான இணைப்பு இது தான்!
http://www.jokkaali.in/2015/02/blog-post_16.html

அதனைப் படித்ததும்
இப்படிக் கருத்துப் போட எண்ணினேன்.
அதனைப் படியுங்க...

என்கிட்ட இணைப்பாளி (தரகர்) வந்தாரு
இவரு யாரு என்றார்
என் மனைவி என்றேன்
ஓட்டம் பிடித்தாரு
ஏன் தான் ஓடுறீங்க என்றேன்
உங்களுக்கு மனைவி இருக்கே
அப்ப
எனக்கு வேலையே இல்லையே
என்றாரே!
ஏன் இப்படி எழுதினேனா?
"
''தைரியமா கொடுத்த காதல் கடிதத்தை திரும்ப வாங்குறதுக்குள்ளே  உயிரே போயிடுச்சா, ஏண்டா?''
              ''அவ புருஷன் கையிலே அது போயிடுச்சுன்னா  வம்பாயிடுமே!''
"
என்ற நகைச்சுவை இருக்கே
அதில
''அவ புருஷன் கையிலே
அது போயிடுச்சுன்னா
வம்பாயிடுமே!'' என்றிருக்கே
அதைப் பார்த்துத் தான்...

மேற்படி கருத்திட்ட பின் "எனக்குத் தெரியமல் போச்சே" என்று தலைப்பிட்டு இப்படி நானும் நகைச்சுவை எழுதலாமென இறங்கினேன். அதனைப் படியுங்க...

அழகி அரசி: இவ்வளவு நாளா உங்களைத் தொடருகிறேன். எப்பவாவது ஏனென்று கேட்டியளா?

ஒல்லிக் கில்லி: தேவை ஏதும் வரவில்லையே தோழீ!

அழகி அரசி: 1 4 3

ஒல்லிக் கில்லி: அப்படி என்றால்?

அழகி அரசி: I Love You

ஒல்லிக் கில்லி: அப்படி என்றால்?

அழகி அரசி: நான் உன்னைக் காதலிக்கிறேன்.

ஒல்லிக் கில்லி: அது தான் ஏன் என்று கேட்கிறேன்...

அழகி அரசி: நீங்க தாலி கட்டினா... நாங்க கூடி வாழலாமே

ஒல்லிக் கில்லி: "ஓடிப் போடி அங்கால; கூடி வாழ
நானிருக்கேனடி" என்று என் மனைவி கேட்டா என்ன செய்வாய்?

அழகி அரசி: உங்களுக்கு மனைவி இருக்கென்று தெரியாமல் போயிற்றே!

ஒல்லிக் கில்லி: ஒன்பது பெட்டைப் பிள்ளைகளைப் பெற்றுத் தந்த நல்லதங்காள் தான் என் மனைவி என்று தெரியாதா?

அழகி அரசி: அடிக்கடி பத்துப் பெண்கள் உங்களைத் தொடருவாங்களே? அவங்க யாரு?

ஒல்லிக் கில்லி: இளமையான பெண்டாட்டி..
                விரைவாக வளர்ந்திட்ட பிள்ளைகள்
                எல்லோருமே என் பெண்டாட்டி பிள்ளைங்க தான்!

அழகி அரசி: என்னை மன்னிச்சிடுங்க...

ஒல்லிக் கில்லி: அதுக்காகக் குதிக்கால் தலையில அடிக்க ஓட்டம் பிடித்தால் அழகாக இருக்காது பிள்ளோய்!

எழுதி முடியப் படித்துப் பார்த்தால், அது நாடகமாகத் தானே இருந்தது. நான் முதலில நாடக உரைநடை (Script) தான் எழுதினேன். அது என்னில் தொடருதோ என எண்ணினேன். பின்னர் தான் நகைச்சுவை என்றால் நறுக்கென நாலு வரியில இருக்க வேணுமே என எண்ணினேன்.

பிஞ்சுப் பெண்பிள்ளை: உங்க தலையில கையை வைச்சுக் கொஞ்சினது பிழையாப் போச்சே!

நெஞ்சு நிமிர்த்திய ஆண்பிள்ளை: என்னோடு பிழைக்க மாட்டீரோ?

பிஞ்சுப் பெண்பிள்ளை: இஞ்சாருங்கோ... கையெல்லாம் கறுப்பு அப்பியிருக்கே... பிஞ்சும் பழமும் இணைய முடியாதே!

நெஞ்சு நிமிர்த்திய ஆண்பிள்ளை: இத்தனை நாள் காதலித்தீரே?

பிஞ்சுப் பெண்பிள்ளை: பிஞ்சும் பிஞ்சும் இணையும் என்றே காதலித்தேன்... நரைமுடிக்கு கறுப்படித்த கிழம் என்றதும் காதல் வரமாட்டேன் என்கிறதே!

அட... சீ! பிறகும் நாடக உரைநடை (Script) தான்... எனக்கு நகைச்சுவை எழுத வராதோ என எண்ணி நான் குழம்பியதில்லையே... அறிஞர்கள் ஆக்கிய நகைச்சுவைகளை  வலைப்பூக்களில் மேய்ந்தேன்... ஆளுக்கொரு நுட்பத்தில என்னமோ மூளைக்கு வேலை வைக்கிற மாதிரி எத்தனையோ அறிஞர்கள் ஆக்கிய நகைச்சுவைகளைப் படித்தேன்... ஈற்றில நகைச்சுவையாளி (ஜோக்காளி) பகவான்ஜி அவர்களின் நடையில எழுதலாமென இறங்கினேன். அதனைப் படியுங்க...

வாலை: ஏன்டி அந்தக் காளையை வேண்டாம் என்கிறாய்?

சோலை: அவரு காளையில்லை... பழுத்த கிழமெல்லோ...

வாலை: எப்படி, அப்படிச் சொல்லுறாய்...

சோலை: அவரு முடிக்கு அடித்த கறுப்பில கொஞ்சம் காதில அப்பியிருக்காரே...

இப்ப கொஞ்சம் நகைச்சுவை வருமாப் போலே இருக்கே... என்றாலும்  நாடக உரைநடை (Script) மணம் வீசுதே... மீண்டும் எண்ணி எண்ணி எழுத முயன்றேன்...

அழகன் ஒருவன் ஆற்றில விழுந்த பின் எழுந்து வரவே தலையும் வெள்ளையாயிற்றே...
ஓ! கறுப்படித்த தலைக்காரனோ...!

இப்படி இன்னொன்றும் எழுதினேன்.

அழகி ஒருவள் ஆற்றில விழுந்த பின் எழுந்து வரவே நீண்ட முடியும் குறுகியதோ...
ஓ! இணைச்சு வைச்ச முடிக்காரியோ...!

இவ்விரண்டையும் தான் நகைச்சுவை என நான் கருதுகிறேன். ஆனால், உங்கள் கருத்து முரண்படலாம்.. நீங்கள் தெரிவித்தால் தானே; நானென்ற சின்னப்பொடியன், பெரியாளாக முடியும்.

இப்பதிவை நகைச்சுவை எழுதப்பழக்கிற பதிவு என்று நினைத்திருந்தால் தவறு. நான் இவ்வாறு எழுத வந்த நோக்கத்தையே சொல்லி முடிக்கிறேன். அதாவது, புதிய படைப்பாளிகள் கருத்திற் கொள்ளவேண்டிய சில தேவைகளை உணர்த்தவே இதனை எழுதினேன். அவற்றைக் கீழே படிக்கவும்.

1. நாம் எழுதியது தகுதியான பதிவு என நாமே முடிவு செய்யக்கூடாது.
2. நாம் எழுதியதைத் தகுதியான பதிவாக மாற்ற அறிஞர்களின் படைப்புகளை மேய்தல் வேண்டும்.
3. அறிஞர்களின் படைப்புகளைப் படியெடுக்கக் கூடாது. படியெடுத்தால் அப்படைப்பை ஆக்கியோரது விரிப்பு வழங்கப்பட வேண்டும்.
4. அறிஞர்களின் நுட்பங்களை எவரும் கையாளலாம். ஆயினும், வாசகர்கள் கண்ணதாசன் நடையில, மூ.மேத்தாவின் நடையில எழுதுகிறாரெனக் கண்டுபிடிப்பார்கள்.
5. நாம் எழுதும் வேளை நமக்கென ஓர் எழுத்து நடையைப் பின்பற்றலாம்.
6. அறிஞர்களின் படைப்புகளுக்குக் கருத்துக் கூறுவதன் மூலமும் எம்மை அடையாளப்படுத்த முடியும்.
7. அறிஞர்களின் படைப்புகளுக்குக் கருத்துக் கூறுமுன் படைப்புகளுக்கான கோட்பாடு, இலக்கணம், இலக்கியத்தன்மை தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
8. அது எழுத வராது... இது எழுத வராது... உது எழுத வராது... என பின்னேறாமல்; இயன்றவரை முயன்று பார்ப்போமென முன்னேற வேண்டும்.
9. பெயர் சுட்டித் தாக்குவதோ பிறரைக் குறைத்து மதிப்பிடுவதோ நல்லதல்ல. ஆளுக்கு ஆள் ஆற்றல் வேறுபடுமென உணரவேண்டும்.
10. பிறரை நோகடிக்காமல் பிறருக்கு நிறைவு தரும் வகையில் எழுதவேண்டும்.

வாசித்து முடித்த உள்ளங்களே! மேற்காணும் பத்தில ஏதாச்சும் என் பதிவில நான் பின்பற்றி இருக்கிறேனா? பத்துக் கருத்துக் கூறுமுன் என் பதிவை நான் சரி பார்க்க வேண்டுமல்லவா? உங்கள் கையில் தான் இதற்கான பதிலோ முடிவோ இருக்கின்றது!



Sunday, 4 January 2015

பதிவர் ஓடித் தலைமறைவு

நண்பர் ஒருவரின் பதிவிற்கு
நண்பர்கள் பலர்
கருத்துரைத்த போதும்
பதில்க் கருத்தைக் காணாமையால்
"பதில் கருத்துக்கு அஞ்சி
பதிவர் ஓடித் தலைமறைவு" என
நாளேடு ஒன்றில்
செய்தி போடவேண்டி வருகிறதே!
உண்மையும் தான்
திறனாய்வாளரின் கேள்விக்கு
பதிலளிக்கத் தவறினால்
உங்கள் மீது
வாசகர் மதிப்பு வைக்கமாட்டார்களே!
நண்பர்களே!
உங்கள் பதிவுக்கு
பிறர் கருத்துத் தெரிவித்தால்
உடனுக்குடன்
பதில் கருத்தைத் தெரிவியுங்களேன்!
ஒவ்வொருவரும்
தங்கள் பதிவினைப் பதிந்த பின்
ஒதுங்கி இருக்க முடியாதே...
ஒரு பதிவு
எப்போது நிறைவடைகிறது?
அதற்கான
எதிற்கணைகளுக்குப் பதில்
வழங்கப்பட்டிருந்தால் மட்டுமே!
பதிற்கணைகளுக்குப் பொறுப்புக்கூற
அஞ்சும் பதிவர்களே
எப்படித்தான்
உங்கள் எழுதுகோல்
உங்களுக்கு   ஒத்துழைக்கிறதோ
எனக்கும் தான் தெரியவில்லையே!
நானொரு பதிவினைப் பதிந்தால்
பதிந்த பதிவுக்குக் கிட்டும்
பதில்களையே பார்த்து
பதில் கூறி மகிழ்வடைவதனாலேயே
எனக்கும்
என் எழுதுகோல் ஒத்துழைக்கிறதே!
 
(இதழியல் நோக்கில் "எழுதிய எழுத்துக்கு எழுதியவரே பதில் கூற வேண்டும்" என்பதை வெளிப்படுத்தவே இப்பதிவினை மேற்கொண்டேன்.)

Tuesday, 28 October 2014

வலைப் பதிவர்களுக்குள் மோதலா? அதெப்படி?


பெருமதிப்புக்குரிய வலைப்பதிவர்களே! இப்பதிவைப் படிக்கும் போதோ படித்து முடித்த பின்னோ தங்கள் உள்ளத்தில என்ன தோன்றுகிறதோ அப்படியே பின்னூட்டத்தில் எழுதுங்கள்.

நான் தொடக்கத்தில் கருத்துக்களத்தில் (Forum) எழுதினேன். பின்னரே வலைப்பூவில் (Blog) எழுதுகிறேன். ஆயினும் கருத்துக்களத்தை (Forum) விட வலைப்பூ (Blog) சிறந்தது என்பேன். மக்களாய (சமூக) வலைத்தளங்களில் பதிவின் தலைப்பையும் இணைப்பையும் வழங்கி வருகிறேன். இது என் வலைப்பயணம்.

அண்மையில் "முகநூல் வலைப்பூவை அழிக்கிறதா? (http://valarumkavithai.blogspot.com/2014/10/blog-post_1.html) " என்ற தலைப்பில் மதிப்புக்குரிய பாவலர் நா.முத்துநிலவன் அவர்கள் ஓர் ஆய்வுக்கண்ணோட்டத்தைப் பதிந்திருந்தார். அது ஒரு சிறந்த பதிவு.
"முகநூலில் மயங்கிக் கிடப்போர்
வலைப்பக்கம் எழுத வருக.
அப்போதுதான் உங்கள்
எழுத்தாற்றல் வளரும் மிளிரும்!" என்ற
பாவலர் நா.முத்துநிலவன் அவர்களது கருத்தையே நானும் உங்களுடன் பகிருகிறேன்.

வலைப் பதிவர்களுக்குள் மோதலா? அதெப்படி? கொஞ்சம் பார்ப்போமா...

காட்சி-1

முகநூலார்: வலைப்பூவில் (Blog) எழுதுவதிலும் பார்க்க, முகநூலில் எழுதினால் சுடச்சுடக் கருத்துகள், விருப்புகள் வந்து கொண்டிருக்குமே!

வலைப்பூவார்: நாங்களும் எங்கட பதிவின் தலைப்பையும் இணைப்பையும் வழங்கி வருகிறேமே!

முகநூலார்: அதை நாங்க சொடுக்கிப் படிக்கிறதிற்கிடையே பல முகநூல் பதிவுகளைப் படித்துவிடுவோமே!

வலைப்பூவார்: சிறந்த பதிவுகளைப் படிப்போர் பதிவின் தலைப்பையும் இணைப்பையும் சொடுக்கிப் படிக்கிறாங்களே!

முகநூலார்: முகநூலை ஏன்காணும் வெறுக்கிறியள்?

வலைப்பூவார்: வலைப்பூப் பதிவுகள் (Blog Posts) ஓர் ஆவணப்படுத்தல் (Documentation) ஆக இருக்குமே!

முகநூலார்: முகநூல் பதிவுகள் அப்படி இருக்காதா?

வலைப்பூவார்: அழியும், மறையும் எனத் தெரிந்தும் இல்லாள் கோலம் போடுவது போலத் தானிருக்கும். அதாவது, நாளுக்கு நாள் முகநூல் முகப்பு மாற பழையவை மறைகின்றனவே!

முகநூலார்: அதற்காக முகநூலை விட ஏலாது. காதல் மொழி பேசும் வாலைகளும் உண்டே!

வலைப்பூவார்: காதல் மொழி பேசும் வாலைகளும் வலைப்பூவிற்கும் (Blog) வரலாம். ஆனால், இணையத்தில் எல்லோரும் போலிகளே (Fakers)!

காட்சி- 2

பதிவர் - 01 : நல்ல நல்ல பதிவர்கள் எல்லோரும் கருத்துப் (Comments) பதிவு வேண்டாமென நிறுத்திவிட்டாங்களே!

பதிவர் - 02 : யாழ்பாவாணன் போன்றவர்கள் "ஆ, ஊ, ஹா, ஷா, உஸ், ம்" என ஓரெழுத்துகளாலா கருத்துப் (Comments) போடுவதாலோ...

பதிவர் - 01 : சின்னப்பொடியன் யாழ்பாவாணன்  ஒரு சொல், இரு சொல் கருத்துத் (Comments) தானே போடுறார்... அதை விடுவோம், கருத்துப் (Comments) போடுறதென்றால் மின்னஞ்சலில் போடு என்று தானே கருத்துப் (Comments) பதிவை நிறுத்தி இருக்காங்களே!

பதிவர் - 02 : அப்படியா சங்கதி! அவங்கட உறவுகள் கருத்துப் (Comments) போட்டால் காணுமாக்கும். சரி! அதை விடுவோம், ஒருவரும் கருத்துப் (Comments) போடாமையால் இப்ப பலருக்கு வலைப்பூவில (Blog) நாட்டம் இல்லையாமே!

பதிவர் - 03 : படம் பார்த்து இலக்கமிடு (Verification code), பின்னூட்டப் படிவம் (Feedback Form), கருத்துப் பெட்டி(Comments box) எனப் பல இழுபறிகளை வைத்துக்கொண்டு கருத்துப் (Comments) போடு என்றால் எப்படிப் போடுறது?

பதிவர் - 04 : பட்டென்று வந்து
             சட்டென்று படித்து
             நறுக்கென்று கருத்திட
             வழி விடாமல் எவர் மீதும்
             பழி போடாதீர்கள்!

பதிவர் - 02 : கொஞ்சம் நில்லுங்கோ...
             பதிவரின் அனுமதி (After Approval)) இன்றி
             கட்டுப்பாடு ஏதுமின்றி
             கருத்துப் (Comments) போடும் வசதி இருந்தும்
             கருத்துப் (Comments) போட எவருமில்லையே!

பதிவர் - 01 : உன்னைப் போல் அயலானையும் விரும்பு (நேசி)!

பதிவர் - 03 : அப்படி என்றால், பிறருக்குக் கருத்துப் (Comments) போட்டால் தான் எங்களுக்கும் பிறர் வந்து போடுவாங்களோ!

பதிவர் - 04 : யாழ்பாவாணன் போல ஓரெழுத்தால கருத்துப் (Comments) போட்டால் எவரும் திரும்பிப் பார்க்காயினம். உருப்படியாப் படித்து உருப்படியாக் கருத்துப் (Comments) போட்டால் தான் எவராச்சும் திரும்பிப் பார்ப்பினம்.

பதிவர் - 05 : உந்தத் தலையிடிகளைத் தாங்கேலாமல் தான் நம்மாளுகள் முகநூல் (Face book) பக்கம் தலையைக் காட்டுறாங்களோ... ஆனால், அங்கே கண்ணை மூடிக்கொண்டு விருப்புப் (Like) போடுறவங்க இருப்பதாலோ...

பதிவர் - 01 : விடியப் போட்ட கோலம் பொழுது சாய மறையுமாப் போல இருக்கிற முகநூலை (Face book) விட வலைப்பூ (Blog) எவ்வளவோ மேல்...

பதிவர் - 05 : எவ்வளவுக்கு  எவ்வளவு இதெல்லாம் நம்மாளுங்க புரிந்து கொள்கிறாங்களோ, அவ்வளவுக்கு  அவ்வளவு வலைப்பூ (Blog) உலகில் நாங்க மின்னுவோம் பாருங்கோ!

மேற்படி இரண்டு காட்சிகளை அமைத்து என் உள்ளத்தில் தோன்றிய எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்துள்ளேன். முகநூலை (Face book) நட்பை ஆக்குவது போல வலைப்பூ (Blog) இலும் நட்பை ஆக்கலாம். நட்புகளின் ஒத்துழைப்புடன் பகிர்வு (Share), அறிமுகம் (Introduce), கருத்திடல் (Comments)  என எல்லாம் ஒருவருக்கொருவர் மேற்கொண்டு வலைப்பூ (Blog) உலகில் நானும் மின்னலாம் என எண்ணுகிறேன்.

இதெல்லாம் உங்களுக்கு முன்கூட்டியே தெரிந்தமையால் நீங்க முன்னேறி விட்டீர்கள். எடுத்துக்காட்டாக ஜோக்காளி தளம் முதலாமிடம் வரக் காரணம் யாழ்பாவாணனைப் போல நன்றி மட்டும் சொல்லாமல் கருத்து (Comments) இட்டவர்களை மகிழ்வூட்டும் பதில்களை அறிஞர் பகவான்ஜி வழங்குவதாலும் தான். நான் கூட அவரது பதிலில் கட்டுண்டு ஒரு பதிவுக்கு இருண்டு முறை {முதலாவது கருத்து (Comments) இட, இரண்டாவது நகைச்சுவையான பதிலறிய} பார்ப்பேன்.

முடிவாகச் சொல்ல ஒன்றுன்டு. கருத்து (Comments) இடுதல் பற்றி எண்ணும் நாம்; கருத்து (Comments) இட்டவர்களை மகிழ்வூட்டும் பதில்களையும் தர முயற்சி செய்யலாம், வலைப்பூ (Blog) நடாத்தியவாறு முகநூலையும் (Face book) பேணலாம். வலைப்பூ (Blog) உலகில் முன்னேற உதவுமெனச் சில எண்ணங்களை நான் பகிர்ந்தாலும் உங்களிடம் பல எண்ணங்கள் இருக்கிறதே, அவற்றை இங்கு பின்னூட்டமாகத் தரலாமே!

Saturday, 25 October 2014

உங்கள் படைப்புக்கள் அதிக வாசகர்களைச் சென்றடைய என்ன செய்வீர்கள்?

எழுதிய படைப்புக்கள் அதிக வாசகர்களைச் சென்றடைவதிலேயே அதற்குப் பெறுமதி அதிகம் கிடைக்கிறது. அப்படியாயின் தாங்கள் என்ன செய்வீர்கள் என்பதைப் புதிய பதிவர்களுக்குக் கூறுங்களேன். என் சிற்றறிவுக்கு எட்டிய சில வழிகளைக் கீழே தருகின்றேன்.


  1. கை எழுத்துப் படிகளாக நண்பர்களுக்குக் கொடுப்பது.
  2. அச்சு இதழ்களில் வெளியிடுவது.
  3. மின் இதழ்களில் வெளியிடுவது.
  4. முகநூல்(Facebook), தமிழ்நண்பர்கள்.கொம் போன்ற தளங்களில் வெளியிடுவது.
  5. சொந்தமாக வலைப்பூக்கள் (blogs) நடாத்தி வெளியிடுவது.
  6. சொந்தமாகக் கருத்துக்களங்கள் (forums) நடாத்தி வெளியிடுவது.
  7. சொந்தமாக இணையத்தளம் (webs) நடாத்தி வெளியிடுவது.
  8. அச்சுப் பொத்தகமாக அல்லது மின் பொத்தகமாக வெளியிடுவது.


மேலுள்ள வழிகளில் எவ்வழியால் உங்கள் படைப்புக்களை அதிக வாசகர்களுக்குச் சென்றடைய வைக்கலாம்? உதவிக்கு உங்கள் நண்பர்களையும் இழுத்து வந்து புதிய பதிவர்களுக்கு நல்வழிகாட்ட முன்வாருங்கள்.

Tuesday, 21 October 2014

வலைத் திரட்டிகளில் பாலியல் (Sex) இணைப்புகளா?


பாலியல் (Sex) ஒன்றும் கெட்டதல்ல... ஆனால், இல்லற வாழ்வில் இறங்கிய பின் அது பற்றிச் சிந்திக்கலாம். அது பற்றி அலட்டுவதற்கு எனக்கு விருப்பமில்லை. ஏனென்றால் பாலியல் (மன்மதக்கலை-Sex) என்பது சொல்லித் தெரிவதில்லை; மணமுடித்த இணையர்கள் தாமாகவே புரிந்து கொள்வதாகும். இந்த உண்மைக்குப் பின்னாலே பாலியல் (Sex) வெளியீடுகள் தேவை இல்லையே!

ஆயினும், எனது http://mhcd7.wordpress.com/ தளத்தில் உளவியலுடன் பாலியலும் (Sex) கலந்த மதியுரைகளே வழங்குகின்றேன். அதில் பாலியல் (Sex) உணர்வுகளைத் தூண்டி இளசுகளைக் கெடுக்கும் அல்லது தவறான வழிகளில் செல்ல வழிவிடும் பதிவுகள் இல்லையே! இவ்வாறான தளங்கள் வலைத் திரட்டிகளில் மின்னுவதால் தவறில்லை என்பேன்.

ஆனால், இன்று எந்த வலைத் திரட்டிகளைப் பார்த்தாலும் நிலைமை கவலைக்கு இடம் என்பேன். ஆங்காங்கே பாலியல் (Sex) உணர்வுகளைத் தூண்டி இளசுகளைக் கெடுக்கும் அல்லது தவறான வழிகளில் செல்ல வழிவிடும் பதிவுகள் கொண்ட தளங்கள் வலைத் திரட்டிகளில் மின்னுவதைப் பார்த்தால் நல்லதுக்கு இல்லைக் காணும்.

உண்மையில் பாலியல் (Sex) தளங்களை வலைத் திரட்டிகளில் இருந்து ஏன் ஒதுக்க வேண்டும்? அறிஞர்கள் பலர் நல்லறிவைப் புகட்ட, படைப்பாளிகள் பலர் நல்ல இலக்கியங்களைப் படைக்க எனப் பயன்தரும் நல்ல நோக்கங்களைக் கொண்ட வலைப்பூக்களை (Blogs) நிரல்படுத்தும் வலைத் திரட்டிகளில் பாலியல் (Sex) தளங்களை நிரல்படுத்தினால் தீமைகள் தான் அதிகம்.

அறிஞர்களின், படைப்பாளிகளின் நல்ல நோக்கங்களைக் கொண்ட பதிவுகளைக் குப்பையிலே கொட்டிப்போட்டு, குப்பையிலே கிடக்க வேண்டிய பாலியல் (Sex) சார்ந்த பதிவுகளை நிரல்படுத்தினால் நல்ல நோக்கங்களைக் கொண்ட பதிவுகளைப் படிக்க வரும் வாசகர்கள் வலைத் திரட்டிகளை நாடமாட்டார்களே! இதனால், நல்ல நோக்கங்களைக் கொண்ட பதிவுகளை வெளியிடுவோரைக் குப்பையிலே கொட்டிவிடுவதாக எண்ணலாம்.

எனவே, நல்ல நோக்கங்களைக் கொண்ட பதிவுகளை வெளியிடும் பதிவர்களுக்கான வலைத் திரட்டி எது? பாலியல் (Sex) சார்ந்த பதிவுகளை நிரல்படுத்தாத வலைத் திரட்டிகளே அவை! முடிவாக வலைத் திரட்டிகளும் வலைப் பதிவர்களும் இது பற்றிச் சிந்தித்தால் மட்டுமே நல்ல நோக்கங்களைக் கொண்ட பதிவுகளைப் படிக்க வரும் வாசகர்களுக்கு நிறைவு (திருப்தி) தரச் செய்யலாம். இல்லையேல் எல்லோருக்கும் கேடு தான் நிகழும்.

Thursday, 2 October 2014

எழுத்துக்கு உயிர் கொடுங்கள்


எழுதுபவர் எல்லோரும்
எழுத்தாளர் என்று நினைப்பதால்
எழுத்தே சாகிறதைப் பாரும்!
தேர்வில் மதிப்பெண் குறைந்தால்
வேலைவெட்டி இல்லாதவன் என்றால்
காதலி/துணைவி மாற்றானை மணமுடித்தால்
காதலன்/துணைவன் மாற்றாளை மணமுடித்தால்
இப்படி எதையெதையோ சொல்லி
தற்கொலைக்கும்
மது அருந்துவதற்கும்
புகை பிடிப்பதற்கும்
காரணம் கூறும் படைப்புகளை எழுதுவதால்
சாவது
ஆணோ பெண்ணோ அல்ல
எழுத்தல்லவா சாகிறது!
தேர்வில் மதிப்பெண் குறைந்தால்
மீண்டும் முயற்சி செய்
சிறந்த பயற்சி செய் என்றோ
வேலைவெட்டி இல்லாதவன் என்றால்
கைத்தொழில் ஒன்றைக் கற்றோ
புதிய நுட்பங்களைக் கற்றோ
சுய தொழிலைச் செய்
நல்ல தொழிலை நாடு என்றோ
காதலி/துணைவி மாற்றானை மணமுடித்தால்
காதலன்/துணைவன் மாற்றாளை மணமுடித்தால்
ஒழுக்கம் பேணியோ ஊர் ஒத்துழைப்புடனோ
மறுகாதல், மறுமணம் பற்றி
எண்ணிப் பார்க்கலாமே
உன்னை வெறுத்தவருக்காக
உன்னை அழிக்காமல்
உன்னை விரும்புபவருக்கு வாழ்வு கொடு
அதிலே தான்
உன் வாழ்வின் மகிழ்ச்சியே
தேங்கிக் கிடக்கிறது என்றோ
வழிகாட்டும் படைப்புகளால் தான்
எழுத்துக்கே உயிர் கிடைக்கிறதே!
தற்கொலையையோ
மது அருந்துவதையோ
புகை பிடிப்பதையோ
தூண்டி எழுதுவதால்
அரசுக்கு வருவாய் தமிழனுக்கோ சாவு
அப்படியான
எழுத்து இருந்தென்ன பயன்?
எழுதுங்கள்...
எழுதுபவர் எல்லோரும்
எழுத்தாளர் ஆகலாம் எழுதுங்கள்...
ஒவ்வொரு உயிரையும்
வாழவைக்கும் எழுத்துகளாக எழுதுங்கள்...
அதுவே
எழுத்துக்கு உயிர் கொடுக்கும்
எங்கள் பணியாகவே இருக்கட்டும்!

Tuesday, 23 September 2014

பதிவர்களும் பதிவுகளும்

என்னைப் பாடச் சொன்னால்
என்னென்னமோ பாடுவேன்
ஆனால்,
என்னை எழுதச் சொன்னால்
என்னென்னமோ எழுதுவேன்
எப்படியோ
பாடினால் பொருள் இருக்காது
எழுதினால் தமிழ் இருக்காது
அதுக்குத் தானே
வலைப்பக்கங்கள் (Web Pages)
வலைப்பூக்கள் (Blogs)
கருத்துக்களங்கள் (Forums)
அப்படி எழுத உதவுகிறது என்பேன்!
ஆனாலும் கூட
அச்சு ஊடகங்களில் எழுதுவோரை விட
மின் ஊடகங்களில்
சிறப்பாக எழுதுவோரும் இருப்பதை
எவரும் மறுப்பதற்கு இல்லையே!
அதனால் தான் பாருங்கோ
எடுத்துக்காட்டுக்கு
"நன்றி அஆ வலைப்பூ" என
அச்சு ஊடகங்கள்
சிறந்த பதிவர்களின் பதிவை
மீள்பதிவு செய்கின்றனவே!
ஆனாலும் பாருங்கோ
சில பதிவர்கள்
அச்சு ஊடகப் பதிவுகளை
மின் ஊடகங்களில் பதிகின்றனரே!

Friday, 12 September 2014

யாழ்பாவாணன் ஓர் இலக்கியத் திருடனா?

நண்பர் கிங்ராஜ் தளத்தில்
http://kingrajasc.blogspot.com/2014/09/blog-post_10.html
"ஒரு கடி" என்ற தலைப்பில்
“அந்தக் கப்பல் ஏன் ரொம்ப ஆடி ஆடி வருது?”
“அதுவா அது ‘சரக்கு கப்பல்’ அதுதான் ஆட்டம் அதிகம் இருக்கு”

என்றவாறு எழுதியிருந்ததைப் படித்ததும் இப்படி எழுத எனக்கும் தோன்றிச்சு! அதைக் கொஞ்சம் படித்த பின் கருத்துப் பகிர்வோமா...

நெடுநேரம் எண்ணிப் பார்தேன்
தென்னை மரம் ஏன் ஆடுது என்று
பின்னர் தான் தெரிந்து கொண்டேன்
அது தானே கள்ளையும் தருகிறது என்று

இப்படி நான் எழுதியதைப் படித்த பெரியோர் "யாழ்பாவாணன் ஓர் இலக்கியத் திருடன்" என்பார்கள். உண்மையில் இதனைப் பாவரசர் கண்ணதாசன் தனது புத்தகமொன்றில் பதிவு செய்திருப்பதை படித்த பெரியோர் அறிந்தமையால் அப்படிச் சொல்ல முடிந்திருக்கிறது. அடுத்தவர் ஒப்புதல் இன்றி அடுத்தவர் பதிவை நேரடியாகப் பதிவு செய்தல் இலக்கியத் திருட்டு என்றே கூறவேண்டும்.

என்ன காணும் வலைப்பதிவு உலகில் யாழ்பாவாணன் தானே அடுத்தவர் பதிவை இடையிடையே புகுத்தி எழுதுகிறார்; இன்னும் பிறர் கண்ணில் சிக்கவில்லையா என்கிறீர்களா? அதற்கு முன் அங்கே படித்தேன்; அதில, இதில, உதில ஏட்டில் இருந்தது; அந்த, இந்த, உந்த இணைப்பில் இருந்தது என்றெழுதித் தப்பிக்கிறார் போலும்.

வலைப்பதிவர்களே! அடுத்தவர் பதிவுக் குறிப்புகளைத் தங்கள் பதிவுகளில் சான்றுக்காக இடையிடையே புகுத்தலாம். ஆயினும், புகுத்திய பதிவுக் குறிப்பை எழுதியவர் அல்லது வெளியிட்டவர் விரிப்பைச் சுருக்கிச் சுட்டியிருப்பின் இலக்கியத் திருட்டு இல்லை என்பேன். இல்லையேல் அடுத்தவர் எண்ணத்தைத் தங்கள் வண்ணங்களில் வெளிப்படுத்த முன்வாருங்கள். எடுத்துக்காட்டாகப் பாவரசர் கண்ணதாசன் எண்ணத்தை என் வண்ணத்தில் காட்டுகிறேன் பாரும்.
1
நல்ல நண்பர் வந்தார்
மெல்லத் தள்ளாடியே வந்தார்
சொல்லத் தடுமாறினார் - அவர்
மதுக்கடையில் இருந்து வந்ததை...
2
அங்குமிங்கும் ஆடும் பனையைப் பார்த்து
காற்றோடு பனை மரம் மோதுகிறதா
காற்றும் வேகமாய் அடித்து வீசுகிறதா
என்றெல்லாம் எண்ணிய பின்
பனையும் கள்ளைத் தருமெனப் படித்தேன்!
3
ஆடி ஆடித் தள்ளாடி வந்தால்
பாடிப் பாடிப் பாவாணனும்
அரை வயிற்றிற்கு உள்ளே தள்ளுவார்
நரைக் கிழவி விற்கும் குடிதண்ணீரென
என் காதலி
தன் தோழிக்குச் சொன்னாளாம்!

என் பாவண்ணத்தில் பாவரசர் கண்ணதாசன் எண்ணத்தைப் படித்தீர்களா? நண்பர் கிங்ராஜின் கப்பல் கடியைப் படித்தீர்களா? எவரது எண்ணத்தையும் எவரும் தங்கள் கைவண்ணத்தில் எழுதலாம். அது இலக்கியத் திருட்டு அல்ல. அப்படி என்றால், வலைப்பதிவர்களே உங்கள் கைவண்ணத்தைக் காட்டுங்களேன்.

அடுத்தவர் ஒப்புதல் இன்றி அடுத்தவர் பதிவை நேரடியாகப் பதிவு செய்து இலக்கியத் திருடனென்று பெயரெடுக்காமல், அடுத்தவர் எண்ணத்தைத் தங்கள் கைவண்ணத்தில் ஆக்கிச் சிறந்த படைப்பாளி ஆக முன் வாருங்கள். இதற்குத் தான் பிறரது படைப்புகளைத் தேடித் தேடிப் படிக்க வேண்டுமென எனக்கு வழிகாட்டிய படைப்பாளிகள் சொன்னார்கள்.

Friday, 15 August 2014

படியெடுக்கலாம்! ஆனால், இப்படியுமா?


உறவுகளே! முதலில் கீழ்வரும் இணைப்பைச் சொடுக்கிப் படியுங்கள். அடுத்து எனது பதிவைப் படிக்கத் தொடருங்கள்.
http://sivamgss.blogspot.com/2014/08/blog-post_69.html

என்னைப் பெத்தவளுக்குத் தான் தெரியும்
என்னை ஈன்ற போது - தான்
பட்ட துன்ப துயரங்கள்...
பாப் புனைந்தவருக்குத் தான் தெரியும்
பாப் புனைந்த போது - தான்
பட்ட துன்ப துயரங்கள்...
கதை புனைந்தவருக்குத் தான் தெரியும்
கதை புனைந்த போது - தான்
பட்ட துன்ப துயரங்கள்...
நடிகை, நடிகருக்குத் தான் தெரியும்
நடித்து முடித்த போது - தான்
பட்ட துன்ப துயரங்கள்...
சிற்பிக்குத் தான் தெரியும்
சிலையை வடித்த போது - தான்
பட்ட துன்ப துயரங்கள்...
மொத்தத்தில எண்ணிப் பார்த்தால்
பிள்ளையை ஈன்ற தாய் - தான்
பட்ட துன்ப துயரங்களைப் போல தான்
படைப்பொன்றை ஆக்கி முடிக்கையிலே
படைப்பாளி ஒருவரும்
பட்டிருப்பார் என்பதைக் கூட
படியெடுப்போர் அறிந்திருக்க வாய்ப்பில்லையே!
"சின்ன வீடு தந்த சுகமிருக்கே - அது
காவற்றுறை தந்த கம்படியில
காணாமல் போயிட்டுதே!" என்று
எழுதியிருக்கிறியே
சின்ன வீட்டை நாடி
காவற்றுறையில சிக்கினதை எழுதினால்
உன்னை எவர் மதிப்பாரென
நண்பர் ஒருவர் கேட்க - அது
யாழ்பாவாணன் எழுதியது - நானோ
படியெடுத்துப் பகிர்ந்தேன் என்று
படியெடுத்தவர் பகிரும் போது தான்
பதிவின் உண்மைத் தன்மை அறியாதவர்
எல்லோரும் இப்படித்தான் சிக்குவாரென
அறிய முடிகிறதே! - நான்
கட்டிய மனைவியின் சுகத்தை விட
சின்ன வீட்டின் சுகம் கேடென எழுதியதை
வெளிப்படுத்த முடியாதமையால்
படியெடுத்தவர் சிக்கினார் என்பதைச் சொன்னேன்!
படியெடுக்கலாம்! ஆனால், இப்படியுமா?
படியெடுத்துப் பகிர்ந்ததை விளக்க முடியாமலா?
இதழியல், ஊடகவியல் பற்றி
எள்ளளவு தெரிந்ததை வைத்துச் சொல்கிறேன்
படியெடுத்துப் பகிர்வதற்குச் சட்டமில்லை
குற்றம் என்று உரைக்கின்றேன்...
எவருடையதெனச் சான்றுப்படுத்தி
எதற்காகப் பகிருவதாகச் சுட்டி
படியெடுத்துப் பகிரலாம் என்பதையும்
எல்லோரும் ஏற்பீர்களென
நானும் நம்புகின்றேன்!


Thursday, 24 July 2014

விளம்பரங்கள் வடிவமைக்கலாம் வாங்க...


"விளம்பரம் இன்றேல் வணிகம் இல்லை" என்பது ஊடகத்துறையினர் பேணும் பொன்மொழி. குறித்த பொருளோ பணியோ (சேவையோ) மக்களிடம் சென்றடைய விளம்பரம் ஓர் ஊடகமாகும். இதனடிப்படையில் எல்லா நிறுவனங்களும் விளம்பரங்களை நாடுவதால் எத்தனையோ விளம்பர நிறுவனங்கள் சிறப்பாக (விசேடமாக) விளம்பரங்களை வடிவமைத்துக் கொடுக்கின்றன.

அவுஸ்ரேலியாவில் விளையாட்டரங்கின் குறுக்காக துடுப்பாட்டம் தொடங்குமுன் ஆணொருவர் ஆடைகளைக் களைந்துபோட்டு ஓடுகையில் காவற்றுறையில் சிக்கினார;. பத்திரிகையில் தன்னைப் பற்றிச் செய்தி வரவேண்டும் என்பதற்காக நிர்வாணமாகக் குறுக்கே ஓடியதாகக் குறித்த ஆண் காவற்றுறை விசாரணையின் போது தெரிவித்தார். விளம்பரத்திற்காக நிர்வாணமாக ஓட வேண்டுமா?

மறுபுறம் பார்த்தால் அழகர், அழகிகள் (Modelling) பயிற்சி நிலையங்கள் கூட இயங்குகின்றது. ஏன் தெரியுமா? விளம்பரங்களில் அரைகுறை ஆடையுடன் அல்லது முக்கால் நிர்வாணமாக நடிக்கவோ அழகை காட்டவோ இவர்களைப் பயன்படுத்தத்தான். இவை நமது பண்பாட்டைச் சீரழிக்கத் தூண்டும் பயற்சி நிலையங்களே!

எப்படியாயினும் விளம்பரங்கள் செய்யப்படும் போது சில ஒழுக்க நெறிகளைப் பின்பற்றத்தான் வேண்டும். மற்ற நிறுவனங்களை அல்லது மாற்று உற்பத்திகளை குறைத்தோ தூற்றியோ விளம்பரம் செய்ய முடியாது. பிறருடனோ பிற பொருட்களையோ பிற பணிகளையோ ஒப்பிட்டுத் தங்களுடையதை மிகைப்படுத்தி விளம்பரம் செய்ய முடியாது. போலியான தகவல், போலியான அடையாளங்கள் அல்லது பிறருடையதைப் போன்ற சாயல் உள்ள விளம்பரங்கள் தகுதியற்றவையாகும்.

விளம்பர வடிவமைப்பில் சான்றுப்படம், நிறுவன அடையாளப்படம், நிறுவனக் கோட்பாடு, தரக்கட்டுப்பாட்டு நிறுவனச்சான்றிதழ் இலக்கம், நிறுவனப் பதிவு எண் ஆகியவற்றுடன் சுருங்கிய தகவலாகப் படிக்காதவரும் புரியக்கூடியதான கருத்துக்களுடன் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி தெளிவாக இருக்கக் கூடியதாக அமையப் பேணப்படும். இவ்விளம்பரங்கள் தெருவெளி, உயர்ந்த பார்வைக்கு உரிய தளங்கள், அச்சு ஊடகம், இலத்திரனியல் ஊடகம் ஆகிய அனைத்திலும் இடம் பெறலாம்.

மக்களை மயக்கி வீழ்த்தும் அல்லது மக்களை ஈர்த்துக் கொள்ளும் அல்லது மக்களைக் குழப்பத்துக்குள் உள்ளாக்கும் விளம்பர உள்ளடக்கங்கள் இல்லாதவாறு வடிவமைக்க வேண்டும். அரை குறை ஆடை அல்லது முக்கால் நிர்வாணம் (ஏன் முழு நிர்வாணம் கூட) ஆகத் தோன்றும் படங்களை அல்லது பெண்ணினத்தையோ ஆணினினத்தையோ இழிவுபடுத்தும் படங்களை அல்லது இவற்றை ஒத்த கருத்துக்களை உள்ளடக்காமல் பேணும் விளம்பரங்களே சிறந்தது.

விளம்பரம் வடிவமைக்க இத்தனை வழிகாட்டல் போதாதா? கணினி நுட்பம், நல்ல எழுத்து நடை, வெளிப்படுத்தும் ஆற்றல், உளவியல் நோக்கிலான அணுகுமுறை ஆகியன உங்களிடம் இருந்தால் விளம்பர வடிவமைப்பில் உங்களை வெல்ல எவர் வருவார். முயற்சி உடையோர் விளம்பர வடிவமைப்பில் இறங்கி வெற்றியடையலாம். ஆனால், தமிழர் கலை, பண்பாண்டைச் சீரழிக்காத விளம்பர வடிவமைப்பே, இன்றைய எமது தேவையாகும்.

Friday, 18 July 2014

புதிய வலைப்பதிவர்களே! கொஞ்சம் கேளுங்கோ...

புதிய வலைப்பதிவர்களே! உங்களை வைச்சு உலகெங்கும் தூய தமிழ் பேணலாமென்று தான் சின்ன உதவிக் குறிப்புத் தர எண்ணுகிறேன். முதல்ல ஒரு உடன்பாடு தேவை. தமிழுக்குள்ள ஆங்கிலம், இன்கிலிசு கலந்து தமிங்கிலம், தமிங்கிலிசு மொழிகளில் பதிவு எதனையும் மேற்கொள்ள வேண்டாம்.

கூகிள் புளக்கர், வேர்ட்பிரஸ், ரும்பிளர் தளங்களில் வலைப்பூக்களைத் தொடங்கியிருப்பீர்கள். முதலில தமிழ்மணம் திரட்டியில உங்கள் வலைப்பூவை இணையுங்கள். இதில் ரும்பிளர் வலைப்பூவை இணைப்பது சிக்கலாயிருக்கலாம். மற்றைய இரண்டில் ஒன்றிலாவது நீங்கள் வலைப்பூ தயாரித்து இணைத்து விடுங்கள்.

வலைப்பூவை தயாரித்தாச்சா? பக்கப் பார்வை (Page Visits), கருத்துகள் (Comments) ஏறுமுகமா? இவை இரண்டும் தான் உங்கள் வலைப்பூவை எடைபோட உதவுகின்றன. இவற்றை அதிகரிக்கச் செய்ய நீங்கள் தான் முயற்சி எடுக்க வேண்டும்.

புதிய பதிவுகளைத் தமிழ்மணம் திரட்டியில இணைத்துவிட்டால் போதாது, அத்திரட்டியில் வெளிவரும் பதிவர்களின் பதிவுகளைப் பார்வையிட்டுக் கருத்துக் கூறுங்கள். புளக்கரிலோ வேர்ட்பிரசிலோ விருப்பத் தெரிவாக உங்களுக்குப் பிடித்த வலைப்பூவை இணைத்து வைத்து அவற்றிலும் கருத்துக் கூறுங்கள். அவ்வேளை மற்றைய பதிவர்களும் உங்கள் வலைப்பூவைப் பார்வையிட்டுக் கருத்துக் கூறுவார்கள்.

உங்கள் வலைப்பூவைப் பார்வையிட வருவோர் எல்லோரும் கருத்துக் கூறுவார்களென எதிர்பார்க்க முடியாது. அவர்களுக்கும் நேர முகாமைத்துவச் சிக்கல் இருக்கும் என்பதை நாம் தான் உணர வேண்டும். நாம் பிறரது வலைப்பூவைப் பார்வையிட்டுக் கருத்துக் கூறுவது, எமது வலைப்பூவிற்கான வருகையாளர் எண்ணிக்கையை அதிகரிக்கவே தவிர கருத்துக் கூறுவார்கள் என்பதற்காகவல்ல என்பதை நாம் தான் உணர வேண்டும்.

எடுத்துக்காட்டாக என்னை எடுத்துக்கொள்ளுங்கள்; நான் 160 வலைப்பூக்களை புளக்கரிலும் வேர்ட்பிரசிலும் விருப்பத் தெரிவாக வைத்திருக்கிறேன். மேலும், 160 ஐ 250 ஆக உயர்த்த எண்ணியுள்ளேன்.
புளக்கரையோ வேர்ட்பிரசையோ திறந்ததும் எவர் புதிய பதிவை இட்டுள்ளாரெனப் பார்த்துக் கருத்துக் கூறுவேன். இதனாலேயே எனது வலைப்பூக்களுக்குப் பக்கப் பார்வை (Page Visits), கருத்துகள் (Comments) ஏறுமுகமாக இருக்கிறது.

அடுத்து நாம் கவனிக்கவேண்டியது நமது பதிவைத் தான். அடுத்தவர் இடாத பதிவுகளாகவும் தரமானதாகவும் சுவையானதாகவும் எவரும் விரும்பி வாசிக்கக் கூடியதாகவும் எடுத்துக்காட்டாக எதனையும் சுட்டியிருந்தால் அதற்கான இணைப்பையும் மாற்றாரைச் சுண்டியிழுக்கக்கூடிய மாறுபட்ட அழகான தலைப்பையும் நமது பதிவு கொண்டிருக்க வேண்டும். அப்ப தான் எதிர்பாராமல் எட்டிப்பார்க்க வந்தவரும் கூட சற்று நின்று படித்துச் செல்வர்.

அடுத்து அடுத்தவரது சிறந்த பதிவை நமது வலைப்பூவில் மீள்பதிவு (Reblog) செய்யக்கூடாது. அதற்குப் பதிலாக அடுத்தவரது சிறந்த பதிவை நமது வலைப்பூவில் சிறப்பாக அறிமுகம் செய்து வைக்கலாம். அதனால் வருகையாளர் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புண்டு. இவை தான் எனது சிறு குறிப்புகள். இவை வலைப்பூ நடாத்தி முன்னிலைக்கு வர உங்களுக்கு உதவுமென நம்புகிறேன்.

நண்பர் முரளிதரன் தனது பதிவொன்றில் தற்போது தமிழ்மணத்தில் புதிய பதிவுகள் குறைந்து வருவதாக மதிப்பீடு செய்திருந்தார். அதுவே இப்பதிவை எழுதத் தூண்டியது. புதிய வலைப்பதிவர்கள் மட்டுமல்ல எல்லோரும் எனது சிறு குறிப்புகளைப் பாவித்துத் தமிழ்மணத்தில் புதிய பதிவுகளை அதிகரிக்கச் செய்வதோடு நமது வலைப்பூக்களைச் சிறப்பாகப் பேணுவோம்.

Thursday, 10 July 2014

ஊடகங்களும் எழுத்துப் பிழைகளும்


அன்று;
நான் பிறக்கும் முன்
எனது யாழ்ப்பாணத்தில்
ஒர் எழுத்துப் பிழைக்கு
ஒரு "25 சதம்" வழங்கியது
ஒரு பத்திரிகை நிறுவனம்!
வாசிப்பதும்
பிழை பிடிப்பதும்
அறிவைப் பெருக்குவதும்
பணம் ஈட்டுவதும்
அன்றைய
வாசகரிடமும் இருந்ததே!
இன்றைய பத்திரிகைகள்
எழுத்துப் பிழைகளால்
நிரம்பி இருந்தாலும்
வாசகரும் பொருட்படுத்துவதில்லை
பத்திரிகை ஆசிரியரும் கவனிப்பதில்லை
எங்கட பிள்ளைகள் தான்
முட்டாள் ஆகின்றனரே!
நாளேடுகள் (பத்திரிகை), ஏழல் ஏடுகள்,
சிறப்பு ஏடுகள் (நூல்கள்) எல்லாம்
எழுத்துப் பிழைகளோடு தான்
கடைத் தெருக்களில் தொங்குகின்றன
சில தொங்கினாலும்
திறந்து படிக்க இயலாதவாறு
கண்ணாடித் தாள்களால் மூடப்பட்டிருக்கும்
விரும்பியோர்
வேண்டிப் படிக்கலாம் என்று தான்!
வானொலி, தொலைக்காட்சி எல்லாம்
எழுத்துப் பிழை, உச்சரிப்புப் பிழை உடன்
நிகழ்ச்சி நடத்துறாங்க
கண்டுக்க யாருமில்லையா?
விரும்பியோர்
கேட்கலாம்; பார்க்கலாம் என்றா
நடத்துறாங்க!
ஆயிரத்திற்கும் மேலான - தமிழ்
வலைப்பூக்கள் (Blogs) உள்ளனவாம்
உண்மையில் எத்தனையோ
எழுத்துப் பிழைகளோடு தான்
உலாவி வருகின்றனவாம்
உலாவும் கருத்துபதிவரும்
கண்டு கொள்ளாமையால்
எழுத்துப் பிழைகள் மலிந்த
வலைப்பூக்கள் உலாவ வழியாயிற்றோ!
நல்ல ஊடகங்களின் சிறப்பு
எழுத்துப் பிழைகளற்ற வெளியீடே...
வெளியீட்டின் பின் எண்ணி
எழுத்துப் பிழைகள் சீராகாது
வெளியீட்டின் முன் பண்ணி
எழுத்துப் பிழைகள் வாராது
ஊடகக்காரர் தான் பாருங்கோ
எங்கட பிள்ளைகள் முட்டாளாகாமல்
பார்த்துக் கொள்ள வேண்டுமே!



Tuesday, 1 July 2014

பதிவுலகில் பால் வேறுபாடு வேண்டாம்!


நான் 2010 இலிருந்து தமிழ் நண்பர்கள்.கொம் தளத்தில் இருக்கிறேன். பல நண்பர்கள் சிறந்த மதியுரைகளை வழங்கி என்னைச் சிறந்த பதிவர் ஆக ஆக்கியுமுள்ளனர். தற்போது தமிழ் நண்பர்கள் தளத்தில் இருப்பதோடு ஐந்து வலைப்பூக்களையும் நடாத்தி வருகிறேன். அத்தளப் பதிவுகளை எனது தமிழ் நண்பர்கள் தளச் சுவர் (Wall) பகுதியில் பார்க்கலாம். நான் ஏன் இதனை உங்களுக்குச் சொல்ல வேண்டும்? நான் தமிழ் நண்பர்கள்.கொம் தளமூடாகவே இணைய உலகில் பேசப்பட்டேன் (பிரபலமானேன்) எனச் சொல்ல வந்தேன்.

வாசகர் விருப்பறிந்து எழுதுவதிலேயே ஓர் எழுத்தாளர் அல்லது படைப்பாளி வெற்றி பெறுகிறார். நண்பர்கள் ஒவ்வொருவரும் சுட்டும் பிழைகளைப் பணிவாக ஏற்றுத் திருத்திக்கொண்டதாலேயே நான் முன்னிலைக்கு உயர்ந்தேன். அதைவிட நானோர் ஆணாக இருந்தும் அதிக பெண் நண்பர்கள் தான் எனது எழுத்துப் பிழை, சொற்பிழை, பொருட்பிழை எல்லாம் திருத்தினார்கள். அத்தனை ஆள்களையும் ஆணாகவோ பெண்ணாகவோ நண்பர்களாகவோ பார்க்காமல் எனது உறவுகள் என்னை முன்னேற, முன்னேற்ற உதவுகிறார்களென என நம்பிப் பின்பற்றினேன்; வெற்றியும் கண்டேன்.

நான் ஏன் இதனை உங்களுக்குச் சொல்ல வேண்டும்? உண்மையில் புதிய பதிவர்கள் பாலியல் நோக்கில் வேறுபட்டு அல்லது முரண்பட்டு பிழை சுட்டுபவர்கள் மீது வெறுப்பைக் காண்பிக்கலாம். அந்நிலையில் தாழ்வு உளப் (மனப்) பாங்கின்றி நம் முன்னேற்றத்தைக் கருத்திற் கொண்டு பிழை சுட்டுபவர்களின் (பால் வேறுபாடின்றி) கருத்தைப் பணிவாக ஏற்றுக்கொள்ளலே சிறந்தது. அதேவேளை ஆண் சார், பெண் சார் பதிவுகளின் உண்மைத் தன்மை அறியாமல் சிலர் கருத்துகளைப் பகிரும் போது வேறுபட்டு அல்லது முரண்பட்டு இருக்கலாம். அதாவது படைப்பாளி எண்ணும் போது தன் சார்ந்த சூழலைக் கருத முடிகிறது. அந்நிலையில் இருந்து சொல்ல வருகின்ற செய்தியை மட்டுமே பெற வேண்டும்.

படைப்பாக்கத்தில், ஊடகங்களில், இதழியலில் பால்நிலை வேறுபாடு கிடையாது. ஆணுக்கும் பெண்ணுக்கும் சம நிறை (1400 கிராம்) மூளையே உண்டு. ஆளுக்கு ஆள் எண்ணங்கள் வேறுபடலாம்; எழுத்துநடை வேறுபடலாம்; சொல்ல வருகின்ற செய்தி ஒன்றே! அப்படியாயின் ஆண் பதிவர்கள், பெண் பதிவர்கள் வேறுபாடு எதற்கு? ஓர் எழுத்தாளர் அல்லது படைப்பாளி தனது படைப்பை வாசகர் விரும்புவாரா என்று மட்டுமே எண்ணிப் பார்க்க வேண்டும்.

வாசகர் என்றால் இரு பாலாரும் இருப்பினம். எழுத்தாளர் அல்லது படைப்பாளி என்றால் இரு பாலாரும் இருப்பினம். ஆனால், எழுதுதல்/படைத்தல் - வாசித்தல்/பயனீட்டல் என்ற உறவுக்குப் பால் வேறுபாடு கிடையாதே! அறிவைப் பரிமாறல் செய்கிறோம். இதற்கேன் பால் வேறுபாடு? எழுத்துப் பிழை எல்லோருக்கும் பொதுவானது தான். எழுத்துப் பிழை வராதவாறு எழுதுவோர் தான் கவனிக்க வேண்டும்.

வாசகன் உள/ மன நிறைவடைவதாலேயே வாசிக்க விரும்புகிறான். அதேவேளை எழுதுவோரும் உள/ மன நிறைவிற்காகவே எழுதுகின்றனர். ஆண்டவன் ஆணையும் பெண்ணையும் படைத்தது தனது படைப்பை மேம்படுத்தவே! ஆயினும் ஓர் எழுத்தாளர் அல்லது படைப்பாளி தனது படைப்பைப் பெருக்கிக்கொள்ள வாசகர் விருப்பறிந்து எழுதுவதிலேயே தங்கியிருக்கிறார்.

நண்பர்களே! எழுதுகோல் ஏந்திய நீங்கள் எழுத்தாளர் அல்லது படைப்பாளி என்ற தனி வகுப்பினர். உங்களுக்குள் ஆண், பெண் வேறுபாடு இருக்க முடியாதே! வாசகர் என்போரும் தனி வகுப்பினர்; அவர்களுக்குள்ளும் ஆண், பெண் வேறுபாடு இருக்க முடியாதே! எனவே, பால் வேறுபாடு பார்ப்பதை நிறுத்திவிட்டு வாசகர் உள்ளத்தைக் கொள்ளையடிக்க நண்பர்கள் ஒவ்வொருவரும் சுட்டும் எழுத்துப் பிழை, சொற்பிழை, பொருட்பிழை எல்லாம் திருத்தி முன்னேற முன்வாருங்கள்.

பதிவர்களின் / படைப்பாளிகளின் நோக்கம் சிறந்த பதிவை / படைப்பை ஆக்குதலாக இருக்க வேண்டும். அதேவேளை வாசகர்களும் பதிவர்கள் / படைப்பாளிகள் ஆக்கிய பதிவை / படைப்பை அவர்களது சூழலில் (ஆண் சார், பெண் சார்) இருந்து சொல்லப்படுகின்ற செய்தியை உள்வாங்கலாம். சிறந்த பதிவைப் / படைப்பைப் பேணும் நோக்கில் பிழை சுட்டுபவர்களின் (பால் வேறுபாடின்றி) கருத்தைப் பதிவர்களோ / படைப்பாளிகளோ பணிவாக ஏற்றுக்கொள்ளலே சிறந்தது. "பதிவுலகில் பால் வேறுபாடு வேண்டாம்!" என்ற தலைப்பில் இத்தனையும் "பதிவர்கள் மத்தியில் பால் வேறுபாடு தோன்றிவிடக்கூடது" என்ற நோக்கம் கருதியே எழுதினேன்.

Sunday, 22 June 2014

வலைப்பதிவர்களே கருத்துப்பகிர்வு (Comment) தேவைதானா?

உறவுகளே! ஊடகங்களைப் பொறுத்தவரையில் படைப்பை ஆக்குவோர் படைப்பாளி என்றும் படைப்பை மதிப்பீடு செய்வோர் திறனாய்வாளர் என்றும் படைப்பை படிப்போர் / வாசிப்போர் / கேட்போர் / பார்ப்போர் தான் படைப்பின் வெற்றி, தோல்வியைத் தீர்மானிக்கும் வாசகர் எனலாம். வலைப்பூ ஊடகத்தில் வலைப்பதிவர், கருத்துப்பதிவர், வாசகர் ஆகிய மூவரையும் காணலாம்.

ஊடகங்களில் திறனாய்வுக்கும் வலைப்பூக்களில் கருத்துப்பகிர்வுக்கும் இடையில் என்ன உறவு இருக்கும்? படைப்பை வாசகர் பக்கம் கொண்டு போய்ச் சேர்க்கத் திறனாய்வு உதவுகிறது. படைப்பின் பயன், தரம், சுவை எனச் சுட்டி வாசகர் வாசிக்கத் தூண்டவும் படைப்பாளி சிறந்த படைப்பை ஆக்கத் தூண்டவும் திறனாய்வு உதவணும்.

வலைப்பூக்களில் கருத்துப்பகிர்வு (Comment) என்றாலும் இதே நோக்கில் தான் அமைய வேண்டும். ஊடகங்களில் வாசகர் எப்படிப்பட்டவராக இருப்பர்? வலைப்பூக்களில் வாசகர் எப்படிப்பட்டவராக இருப்பர்?  வாசகர் பார்வைக்கு வாசகரை நாடும் அல்லது வாசகருக்கு அண்மையில் உள்ள ஊடகங்களை நுகரும் வாசகர்களே ஊடகங்களில் காணலாம். ஆனால், வலைப்பூக்களில் ஒரு வலைப்பூப் பதிவருக்கு மற்றைய வலைப்பூப் பதிவரே வாசகராக இருப்பர். மாறாகத் தேடுபொறிகளூடாகத் (Google) தகவல் தேடுவோரும் வாசகராக இருக்கலாம்.

இந்நிலையில் வலைப்பூக்களில் கருத்துப்பகிர்வு (Comment) தேவைதானா? ஆம்! தேவைதான்! கருத்துப்பகிர்வைக் கண்ட பிறரும் குறித்த பதிவைப் படிக்க வாய்ப்பு அதிகம். ஆகையால், பதிவை வாசகர் பார்வையிடவும் குறித்த வலைப்பதிவர் சிறந்த பதிவுகளை ஆக்கவும் கருத்துப்பகிர்வு (Comment) உதவுகிறதே! எவர் தனது வலைப்பூப் பதிவுகளிற்கு அதிக கருத்துப்பகிர்வு (Comment) பெற்றிருக்கிறாரோ அவர் வலைப்பூப் பதிவர்களிடையே முன்னணிப் (பிரபல) பதிவராக மின்னுகிறார் என்று பொருள்கொள்ளலாம்.

வலைப்பூக்களில் வலைப்பதிவர்கள் தமது தளத்தில் பதிவிடுவதோடு நட்புக்காகப் பிற வலைப்பூக்களில் கருத்துப்பகிர்வதும் வழமை. ஆயினும், அறிவுப்பசி உள்ள வலைப்பதிவர்கள் இதற்கப்பாலும் சென்று பல வலைப்பதிவர்களின் வலைப்பூக்களில் கருத்துப்பகிர்வை மேற்கொள்கின்றனர். எதிர்பாராத விதமாகச் சிறந்த பதிவைக் கண்டாலோ கருத்து முரண்பாட்டைக் கொண்ட பதிவைக் கண்டாலோ அதன்பால் விருப்புக் கொண்ட வலைப்பதிவர்கள் கருத்துப்பகிர்வதும் உண்டு.

ஆயினும், சில வலைப்பதிவர்கள் பிறர் தமது வலைப்பூக்களில் கருத்துப் பகிர்ந்தாலும் தாம் பிறரது வலைப்பூக்களில் கருத்துப்பகிர முன்வருவதில்லை. நாம் பிறரது வலைப்பூக்களில் கருத்துப் பகிருவதால் என்ன நன்மை? முதலில் நாம் சிறந்த கருத்தைப் பகிருவதால் எம்மை அடையாளப்படுத்துகிறோம். இரண்டாவது குறித்த வலைப்பதிவரை ஊக்கப்படுத்துகிறோம். மூன்றாவதாக பலரது வலைப்பூக்களுக்குச் செல்வதால் எமது வலைப்பக்களுக்கான வாசகர் எண்ணிக்கையைக் கூட்டுகிறோம்.

எனவே, வலைப்பூக்களை நடாத்தும் நாம் தேடுபொறிகளூடாக (Google) வரும் வாசகர் படித்தால் போதும் என பிறரது வலைப்பூக்களுக்குச் சென்று கருத்துப்பகிராமல் இருப்பது தவறு என்பேன். நமது வலைப்பூக்களின் முதல் வாசகர் பிற வலைப்பதிவர்களே என்றுணர்ந்து பிறரது வலைப்பூக்களுக்குச் சென்று கருத்துப்பகிர்தலே நன்று என்பேன்.

கருத்துப்பகிரும் (Comment) போது எமது விளம்பரங்களைப் போட்டுத்தள்ள வேண்டாம். உங்கள் வலைப்பூக்களது பிந்திய பதிவின் இணைப்பை உங்கள் கருத்தின் கீழ் நுழைப்பதில் தவறில்லை. ஆயினும் குறித்த வலைப்பதிவரை நோகடிக்கும்படி கருத்துப் பகிர வேண்டாம்.

உங்களுக்கே தெரியும் முன்னணிப் பதிவர்கள் எல்லோரும் உங்கள் வலைப்பூவில் கருத்துப் பகிரும்போது "நல்ல பதிவுக்கும் பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள்" எனத் தனது கருத்தின் கீழ் இடுவார்கள். அதேவேளை "இந்த இடத்தில் இப்படி வர வாய்ப்புண்டா? எனக்கேதோ தவறு போன்று தெரிகிறது. ஆயினும் தங்கள் பக்கத்தில் வேறு விளக்கங்கள் இருக்கலாம், அதுபற்றி எனக்கு விளக்கம் தாருங்கள்!" என்று வலைப்பதிவரைக் குத்திக் குதறாமல் நோகடிக்காமல் பிழை சுட்டுபவர்களும் உள்ளனரே!

எனவே வலைப்பூக்களில் கருத்துப்பகிர்வு (Comment) மிகவும் தேவையான ஒன்று தான். தங்களை அடையாளப்படுத்தவோ தங்களது வலைப்பூக்களுக்கான வாசகர் எண்ணிக்கையைக் கூட்டவோ பிறரது வலைப்பூக்களுக்குச் சென்று நடுநிலைமையுடன் (பதிவர் பக்கத்திற்கும் வாசகர் பக்கத்திற்கும் இடையே நின்று) பதிவை மதீப்பீடு செய்யலாம். குறித்த பதிவில் சுட்டப்பட்ட செயல்களை முன்மொழியப்பட்ட கருத்துக்களை மதீப்பீடு செய்யலாம். அதாவது தங்கள் கருத்து  வாசகர்களையும் பதிவரையும் நிறைவடையச் செய்ய வேண்டும்.

ஆயினும், ஆகக்குறைந்த சொல்களால் “சிறந்த பகிர்வு, பயனுள்ள தகவல், பகிர்வுக்கு நன்றி, தொடருங்கள், சுவையான பதிவு” என்றவாறு கூட உங்கள் கருத்தைப் பகிரலாம். "எடே யாழ்பாவாணா" என்பதை "அடேய் யாழ்பாவாணா" என்று திருத்தி உதவுங்கள் எனப் பிழைகளையும் நோகாமல் சுட்டிக்காட்டலாம். எப்படியோ வலைப்பூக்களை முன்னணிக்குக் கொண்டுவரவோ பின்னுக்குத் தள்ளவோ நாம் வழங்கும் கருத்துப் பகிர்விலேயே (Comment) தங்கியிருக்கிறது என்பதை மறந்து விடவேண்டாம்.

Monday, 9 June 2014

வலைப்பூக்களும் வலைப்பதிவர்களும்


நான் 1987 இருந்து எழுத்துலகில் காலடி வைத்ததாலும் 25/09/1990 இலே எனது முதல் கவிதை பத்திரிகையில் வெளிவந்தது. அதுபோல 1995 இல் கணனியைப் படித்தும் 2010 இலிருந்தே இணைய வழியாக எனது இலக்கியங்களை வெளிக்கொணர முயன்றேன். அப்படியிருந்தும் 2012 இலேதான் வலைப்பூப் பக்கம் தலையைக் காட்டியிருக்கிறேன். இந்த இழி நிலைத் தகுதியோடு மேற்காணும் தலைப்பில் என் உள்ளத்தில் தோன்றிய எண்ணங்களைப் பகிர முனைகின்றேன்.

வலைப்பதிவர்கள் வலைப்பூவை நடாத்தத் தொடங்கியதும் தமது பதிவுகளை இட்டு நிரப்பியதும் முடிந்துவிட்டதாக இருந்துவிட முடியாது. அப்பதிவினை வாசிப்போர் கண்ணுக்குக் காட்டிக்கொள்ள வேணடியிருக்கிறது. அதற்காக லிங்டின், டுவிட்டர், கூகிள், பேஸ்புக் எனப் பல மக்களைய (சமூக) வலைத்தளங்களில் இட்டுப் பரப்புகிறோம். மேலும் தமிழ்மணம், தேன்கூடு, தமிழ்நண்பர்கள், தமிழ்வெளி, இன்ட்லி எனப் பல திரட்டிகளிலும் பதிவிடுகின்றோம். இத்தனையும் செய்த பின்னும் எத்தனை வாசகரைப் பெருக்கினோம் என்றால் மிக மிகக் குறைவே!

வாசகரைப் பெருக்கிக்கொள்ள முடியாமைக்கு வலைப்பதிவர்கள் தான் காரணம் என்பேன். ஏனோ தானோ என்று எப்படியாவது பதிவிட்டால் போதுமென்று இருப்பது, பிற அறிஞர்களின் பதிவை மீள் பதிவு செய்வது, பதிவுகளுக்கு இடையே நீண்ட இடைவெளி விடுதல், பிறரது பதிவுகளிலிருந்து பொறுக்கித் தமது பதிவுகளில் நுழைத்தல் போன்ற குறைபாடுகளைச் சரி செய்ய வேண்டும்.

பொறுப்புள்ள பதிவாரக மிகச் சிறந்த பதிவுகளை ஆக்கிப் பதிவிடலாம். பிறரது பதிவுகளில் இருந்து பொறுக்கிய வரிகளின் பின்னே குறித்த வலைப்பூ முகவரியை இடலாம். பிறரது பதிவை மீள்பதிவு செய்வதைவிட தங்கள் திறமையை வெளிப்படுத்தி அறிமுகம் செய்யலாம். எப்படியாயினும் ஏழலில் (வாரத்தில்) ஒரு பதிவு அல்லது பதினைந்து நாட்களுக்கு ஒரு பதிவு அல்லது மாதத்திற்கு மூன்று பதிவு என்ற போக்கில் பதிவுகளை இடலாம். இத்தனையும் செய்தால் உங்கள் வலைப்பூ தரமானதாக மேம்படுத்தலாம். ஆனால் வாசகர் எண்ணிக்கை பெருக்கவோ பதில் கருத்துத் (Comments) திரட்டவோ முடியாது என்பேன்.

ஆமாம்! பிறரிடம் எதிர்பாரப்பதை நாமே முதலில் வழங்கினால் முடியும் என்பேன். எடுத்துக்காட்டாக நண்பர் திண்டுக்கல் தனபாலன் அவர்கள் இம்முயற்சியில் வெற்றி பெற்றவராவார். இதுவரை 891 பதிவர்கள் அவரது தளத்தில் பதிவிட்டுள்ளனர். (சான்று : http://dindiguldhanabalan.blogspot.com/p/followers.html) அப்படியாயின் அவர் ஆயிரக்கணக்கான வலைப்பூக்களை நாடித் தனது கருத்துகளைப் பதிவிட்டிருக்கிறார் என்று நான் கருதுகின்றேன். வலைப்பூ நடத்தும் போது ஏனைய வலைப்பூக்களுக்குச் சென்று அவரவர் சிறப்பைக் கற்றுக்கொண்டு கருத்துப்பகிர வேண்டும். அப்போதுதான் சிறந்த வலைப்பதிவராக முன்னேற வாய்ப்புண்டு.

என்னைப் பொறுத்தவரையில் தமிழ்மணம் திரட்டி ஒன்றே போதும். அதே வேளை கூகிள் பிளக்கர், வேர்ட்பிரஸ் Reading List இல் இணைத்த தளங்களுக்குச் சென்று கருத்துப் பகிர்ந்தால் போதுமென நம்புகிறேன். எப்படியிருப்பினும் நண்பர் திண்டுக்கல் தனபாலன் அவர்களைப் போன்று அதிக எண்ணிக்கையிலான வலைப்பூக்களுக்குச் சென்று கருத்துப் பகிர வேண்டும். அப்போது தான் எமது வலைப்பூ அறிமுகம் பலருக்குக் கிட்டும். வலைப்பூ பற்றிய நுட்பங்களை அறிய கீழ்வரும் இணைப்பை சொடுக்குக.

வலைத்தள நுட்பம் (திண்டுக்கல் தனபாலன்)

வலைப்பூ தொடங்குவதும் பதிவிடுவதும் இலகு தான். அதனை வாசகர் பார்வைக்குக் கொண்டு செல்வதிலேயே வெற்றியும் தோல்வியும் தீர்மானிக்க முடியும். புதிய பதிவர்கள் மூத்த பதிவர்களின் வழிகாட்டலின்படி முன்னேற முயற்சி எடுக்கவும். அப்போதுதான் வலைப்பூக்களூடாக உலகெங்கும் தூய தமிழ் பரப்பலாம்.

Saturday, 31 May 2014

ஊடகங்களுக்குப் படிப்பிக்கலாம் வாங்க!

அச்சு ஊடகங்கள், மின் ஊடகங்கள் என எடுத்துக்கொண்டாலும் அவை தமிழுக்கோ படைப்புக்களுக்கோ முதன்மை நிலைமையைக் காட்டாமல் விளம்பரங்களையே முதன்மைப்படுத்துகின்றன. அதுவும் நமது பண்பாட்டைச் சீரழிக்கும் விளம்பரங்களை வெளியிடுவதால் நாளைய தலைமுறைக்குக் கேடு விளைவிக்கின்றன.

அச்சு ஊடகங்களை எடுத்துக் கொண்டால் படைப்பாளிகளுக்கு ஊக்கத்தொகை எதுவும் வழங்குவதில்லை. வெளியிடப்படும் படைப்புகளுக்கு இடையே விளம்பரங்களைப் புகுத்தி விடுவார்கள். சிறந்த படைப்புகள் கிடைக்காமல் வெளியாகிய பொத்தகங்களிலிருந்து பகுதி பகுதியாகப் பொறுக்கிச் சில ஏடுகள் வெளியிடுகின்றன. மொத்தத்தில் தமிழ் அச்சு ஊடகங்கள் என்று சொன்னாலும் பிறமொழிக் கலப்போ ஆங்கில உள்ளீடோ தான் மலிந்திருக்கும்.

இனி மின் ஊடகங்கள் என்றதும் தொலைக்காட்சி, வானொலி, வலைப்பூக்கள், வலைத்தளங்கள், மின்நூல்கள், திரைப்படங்கள், ஒளியும் ஒலியும், இசைத்திரட்டு எனப் பல உள்ளடக்கலாம். இவை எதிலும் தமிழை முதன்படுத்தும் செயலைக் காணமுடியாதே. பிறமொழி விளம்பரங்களே அடிக்கடி இவற்றில் தலையை நீட்டுகின்றது. வானொளி, தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் யாவும் ஆங்கிலப் பெயரிலேயே இருக்கிறது.

சிமான் இயக்கி மாதவன் நடித்த “வாழ்த்துகள்” படத்தில் தமிழ் சொல்கள் மட்டும் பயன்படுத்தப்பட்டிருந்தது. பெரும்பாலும் எல்லாத் திரைப்படங்களுமே தமிழ்நாட்டு அரசின் வரிவிலக்கிற்காகத் தமிழ் தலைப்பை இட்டாலும் தமிழை முதன்மைப்படுத்தாத, தமிழ் பண்பாட்டைப் பொருட்படுத்தாத ஊடகமாகவே வெளிவருகின்றன.

வலைப்பூக்கள், வலைத்தளங்களிலும் பிறமொழிக் கலப்பு, ஆங்கில மொழித் தலைப்பு எனத் தமிழுக்கு முதன்மையளிப்பது மிகக்குறைவு. தமிழுக்கு முதன்மை இடமளித்துப் பல பதிவர்கள் வலைப்பூ நடத்தினாலும் வலைப்பூ வழங்குநர்களின் விளம்பரங்கள் குறுக்கே நிற்குமே! எப்படி இருப்பினும் தமிழ் வலைப்பூக்களில் பிறமொழிப் பதிவுகளை உள்ளடக்காமல் இருப்பது நன்று. பிறமொழி வெளியீட்டுக்குப் பிறமொழியில் வலைப்பூ நடாத்தலாம். மொழியைப் பண்பாட்டைப் பேணச் செறிவான சிறந்த அறிவுரைகளைக் கருத்துக்களைச் சொல்லச் சிலர் வலைப்பூ நடத்தினாலும் பொழுதுபோக்கிற்காகப் பயன்தரா வலைப்பூக்களையும் பலர் நடாத்துகின்றனரே.

மேலோட்டமாகப் பொதுவாகச் சில கருத்துக்களைச் சுட்டிக் காட்ட முடிந்தாலும் விரிவாக இங்கு அலச விரும்பவில்லை. ஆயினும் ஊடகங்கள் தாய் மொழியைப் பேணுவதோடு, பண்பாட்டைப் பேணுவதோடு, மக்களாய (சமூக) மேம்பாட்டைக் கருத்திற்கொண்டு நாடு, இன, மத வேறுபாட்டைக் களைந்து ஒற்றுமையை உறுதிப்படுத்தவும் நல்வழிகாட்டலையும் மதியுரையையும் வழங்கவும் முன்நிற்க வேண்டுமே!

உலகெங்கும் தமிழைப் பரப்பிப் பேண ஊடகங்களுக்குப் படிப்பிக்கலாம் வாங்க. உங்கள் வலைப்பூக்களில் கீழ்வரும் தலைப்புக்களில் பதிவுகளை இட்டு ஊடகங்களுக்கு படிப்பிக்கப் பாருங்களேன்.

1. தமிழ் ஊடகமாயின் தம் பெயரைத் தமிழில் வைக்கலாமே!
2. தமிழ் ஊடகமாயின் நிகழ்ச்சித் தலைப்பையோ பதிவுத்தலைப்பையோ தமிழில் வைக்கலாமே!
3. தமிழ் ஊடகமாயின் நிகழ்ச்சிகளையோ பதிவுகளையோ தமிழில் வெளிப்படுத்தலாமே!
4. தமிழ் ஊடகமாயின் தமிழர் வரலாற்றையும் பண்பாட்டையும் முதன்மைப்படுத்தலாமே!
5. தமிழ் ஊடகமாயின் தமிழின் தொன்மை, சிறப்பு என எல்லாவற்றையும் கருத்திற் கொண்டு பிறமொழிகளில் தமிழைக் கற்பிக்கும் நிகழ்ச்சிகளையோ பதிவுகளையோ வெளியிடலாமே!
6. தமிழ் ஊடகமாயின் பழந் தமிழ் இலக்கியங்களை இன்றைய தலைமுறைக்கு அறிமுகம் செய்யும் நிகழ்ச்சிகளையோ பதிவுகளையோ வெளியிடலாமே!
7. தமிழ் ஊடகமாயின் உலக இலக்கியங்களை பிறமொழி, பிறநாட்டுச் சிறப்புகளை செந்தமிழில் வெளியிடலாமே!

என் உள்ளத்தில் தோன்றிய ஏழு எண்ணங்களைப் பகிர்ந்தேன். உங்களுக்குத் தெரிந்த எண்ணங்களையும் பகிருங்கள். அப்ப தான் வணிக நோக்கில் மூழ்கியிருக்கும் ஊடகங்களைத் தட்டி எழுப்பலாம்.