Friday, 18 July 2014

புதிய வலைப்பதிவர்களே! கொஞ்சம் கேளுங்கோ...

புதிய வலைப்பதிவர்களே! உங்களை வைச்சு உலகெங்கும் தூய தமிழ் பேணலாமென்று தான் சின்ன உதவிக் குறிப்புத் தர எண்ணுகிறேன். முதல்ல ஒரு உடன்பாடு தேவை. தமிழுக்குள்ள ஆங்கிலம், இன்கிலிசு கலந்து தமிங்கிலம், தமிங்கிலிசு மொழிகளில் பதிவு எதனையும் மேற்கொள்ள வேண்டாம்.

கூகிள் புளக்கர், வேர்ட்பிரஸ், ரும்பிளர் தளங்களில் வலைப்பூக்களைத் தொடங்கியிருப்பீர்கள். முதலில தமிழ்மணம் திரட்டியில உங்கள் வலைப்பூவை இணையுங்கள். இதில் ரும்பிளர் வலைப்பூவை இணைப்பது சிக்கலாயிருக்கலாம். மற்றைய இரண்டில் ஒன்றிலாவது நீங்கள் வலைப்பூ தயாரித்து இணைத்து விடுங்கள்.

வலைப்பூவை தயாரித்தாச்சா? பக்கப் பார்வை (Page Visits), கருத்துகள் (Comments) ஏறுமுகமா? இவை இரண்டும் தான் உங்கள் வலைப்பூவை எடைபோட உதவுகின்றன. இவற்றை அதிகரிக்கச் செய்ய நீங்கள் தான் முயற்சி எடுக்க வேண்டும்.

புதிய பதிவுகளைத் தமிழ்மணம் திரட்டியில இணைத்துவிட்டால் போதாது, அத்திரட்டியில் வெளிவரும் பதிவர்களின் பதிவுகளைப் பார்வையிட்டுக் கருத்துக் கூறுங்கள். புளக்கரிலோ வேர்ட்பிரசிலோ விருப்பத் தெரிவாக உங்களுக்குப் பிடித்த வலைப்பூவை இணைத்து வைத்து அவற்றிலும் கருத்துக் கூறுங்கள். அவ்வேளை மற்றைய பதிவர்களும் உங்கள் வலைப்பூவைப் பார்வையிட்டுக் கருத்துக் கூறுவார்கள்.

உங்கள் வலைப்பூவைப் பார்வையிட வருவோர் எல்லோரும் கருத்துக் கூறுவார்களென எதிர்பார்க்க முடியாது. அவர்களுக்கும் நேர முகாமைத்துவச் சிக்கல் இருக்கும் என்பதை நாம் தான் உணர வேண்டும். நாம் பிறரது வலைப்பூவைப் பார்வையிட்டுக் கருத்துக் கூறுவது, எமது வலைப்பூவிற்கான வருகையாளர் எண்ணிக்கையை அதிகரிக்கவே தவிர கருத்துக் கூறுவார்கள் என்பதற்காகவல்ல என்பதை நாம் தான் உணர வேண்டும்.

எடுத்துக்காட்டாக என்னை எடுத்துக்கொள்ளுங்கள்; நான் 160 வலைப்பூக்களை புளக்கரிலும் வேர்ட்பிரசிலும் விருப்பத் தெரிவாக வைத்திருக்கிறேன். மேலும், 160 ஐ 250 ஆக உயர்த்த எண்ணியுள்ளேன்.
புளக்கரையோ வேர்ட்பிரசையோ திறந்ததும் எவர் புதிய பதிவை இட்டுள்ளாரெனப் பார்த்துக் கருத்துக் கூறுவேன். இதனாலேயே எனது வலைப்பூக்களுக்குப் பக்கப் பார்வை (Page Visits), கருத்துகள் (Comments) ஏறுமுகமாக இருக்கிறது.

அடுத்து நாம் கவனிக்கவேண்டியது நமது பதிவைத் தான். அடுத்தவர் இடாத பதிவுகளாகவும் தரமானதாகவும் சுவையானதாகவும் எவரும் விரும்பி வாசிக்கக் கூடியதாகவும் எடுத்துக்காட்டாக எதனையும் சுட்டியிருந்தால் அதற்கான இணைப்பையும் மாற்றாரைச் சுண்டியிழுக்கக்கூடிய மாறுபட்ட அழகான தலைப்பையும் நமது பதிவு கொண்டிருக்க வேண்டும். அப்ப தான் எதிர்பாராமல் எட்டிப்பார்க்க வந்தவரும் கூட சற்று நின்று படித்துச் செல்வர்.

அடுத்து அடுத்தவரது சிறந்த பதிவை நமது வலைப்பூவில் மீள்பதிவு (Reblog) செய்யக்கூடாது. அதற்குப் பதிலாக அடுத்தவரது சிறந்த பதிவை நமது வலைப்பூவில் சிறப்பாக அறிமுகம் செய்து வைக்கலாம். அதனால் வருகையாளர் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புண்டு. இவை தான் எனது சிறு குறிப்புகள். இவை வலைப்பூ நடாத்தி முன்னிலைக்கு வர உங்களுக்கு உதவுமென நம்புகிறேன்.

நண்பர் முரளிதரன் தனது பதிவொன்றில் தற்போது தமிழ்மணத்தில் புதிய பதிவுகள் குறைந்து வருவதாக மதிப்பீடு செய்திருந்தார். அதுவே இப்பதிவை எழுதத் தூண்டியது. புதிய வலைப்பதிவர்கள் மட்டுமல்ல எல்லோரும் எனது சிறு குறிப்புகளைப் பாவித்துத் தமிழ்மணத்தில் புதிய பதிவுகளை அதிகரிக்கச் செய்வதோடு நமது வலைப்பூக்களைச் சிறப்பாகப் பேணுவோம்.

16 comments:

  1. ஐயா.. பதிவுக்கு நன்றி. குறித்து கொண்டேன். ஆனாலும் சில வேளைகளில் ஆங்கிலத்தில் நடந்த உரையாடலை அப்படியே சொன்னால் தான் அங்கே அர்த்தம் விளங்குகிறது. எழுத்தாளர் சுஜாதாவின் "பிரிவோம்- சந்திப்போம்" மற்றும் "விசு-சுரேஷ்" நாவல்களில் அவர் நிறைய ஆங்கிலத்தில் எழுதுவார். அதை படித்த பாதிப்பு என்னிடம் அதிகம். இருந்தாலும்.. ஏழைக்கு ஏற்ற எள் உருண்டை போல், துணித்து விட்டேன், எழுதுகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் பணியைத் தங்களுக்கு ஏற்றால் போல் தொடருங்கள்.

      தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      Delete
  2. நல்ல குறிப்புகள் தந்து உள்ளீர்கள் !

    ReplyDelete
  3. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
    தமிழ் மணத்தில் இணைக்கிறேன்.
    மிக்க நன்றி.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      Delete
  4. புதிய பதிவர்களுக்கு மட்டுமல்ல எல்லா பதிவர்களுக்குமே உங்கள் ஆலோசனைகள் பயன்படும். நன்றி!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      Delete
  5. நல்லதகவலுக்கு நன்றி நண்பரே.....

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      Delete
  6. புதியவர்களுக்கு மட்டுமல்ல! அனைவருக்கும் பொருந்தும் நல்ல ஆலோசனைகள்! பகிர்வுக்கு மிக்க நன்றி!

    ReplyDelete
  7. பயனுள்ள கருத்துகள்! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      Delete
  8. மிக்கத்தெளிவு மற்றும் அருமையான அறிவுரையை சிறப்பாக,எளிதாக தெரிவித்தமைக்கு நன்றி அண்ணா!! உங்களின் முதல் அறிவுரையான மற்ற வலைப்பதிவர்களின் தளத்தில்,கருத்துரை இடுவதை இங்கிருந்து நானும் தொடங்குகிறேன்.தூய தமிழில் எழுதவேண்டும் எனும் ஆக்கமும் ஊக்கமும்,சிந்தனையும்,முயற்சியும் என்னிடத்தில் இருப்பினும்,அது படிக்கும் தமிழர்களுக்கு தெளிவாக எடுத்துரைக்குமோ?என்ற பயமும்,புரியாமல் போய்விடுமோ என்ற எண்ணமும் இருப்பதனால் சிறுக சிறுக தமிழன்னையை என் தளத்தில் அழகுடுத்திக்கொண்டு வருகிறேன்.தங்களின் வழிகாட்டுதலுக்கு மிக்க நன்றியுடன்

    - மெக்னேஷ் திருமுருகன்

    ReplyDelete
    Replies
    1. மதிப்புக்குரிய அறிஞரே!
      தங்கள் விருப்பம் நிறைவேற எல்லோரும் ஒத்துழைப்பார்கள்.
      நாம் எல்லோருடனும் இணைந்து தமிழைப் பேணுவோம்.
      மிக்க நன்றி.

      Delete
  9. பதிவிட்டமைக்கு நன்றி

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      Delete

தங்கள் கருத்துகளை வரவேற்கிறேன்.
உங்கள் யாழ்பாவாணன்.