யாழ்பாவாணன் வெளியீட்டகம் ஊடாக அறிஞர்களின் வலைப்பூக்களைப் பகிரும் தொடரில் ஜோக்காளி தளம் அகப்பட்டுவிட்டது. அகப்பட்டால் சும்மா விட்டிடலாமா? சின்னப்பொடியன் யாழ்பாவாணனின் கண்ணோட்டத்தில் எப்படியிருக்குமெனப் படித்துப் பாருங்களேன்.
“உண்மை ஒன்றைக் கூட்டியோ குறைத்தோ எழுதுவதே நகைச்சுவை” என அறிஞர் ஒருவர் அகில இந்திய வானொலியில் கூறியதை வைத்துக் கிறுக்குவதே யாழ்பாவாணனின் தகுதி. ஆயினும் "சிரிப்பும் மகிழ்ச்சியும் கூடிய உணர்வை தூண்டும் கலைவடிவங்களை நகைச்சுவை (comedy) எனலாம்." என்று கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்தும் படித்திருக்கிறார். மேலும், கீழ்வரும் பதிவுகள் அவரது முயற்சி.
நகைச்சுவை எழுதலாம் வாருங்கள்
http://wp.me/pTOfc-66
அறிஞர்களின் நகைச்சுவையை அறிவோமா?
http://wp.me/pTOfc-68
சரி! கலைஞரைப் பற்றி எழுதுவதைவிட கலைப்படைப்பைப் பற்றி எழுதுவதையே யாழ்பாவாணன் வெளியீட்டகம் விரும்புகிறது. படைப்பைப் படித்தால் படைப்பாளியை அறிந்து கொள்ளலாம். அதுபோல ஜோக்காளி தளம் பற்றிப் படித்தால் அறிஞர் பகவான்ஜி அவர்களை அறிந்து கொள்ளலாம். ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பார்கள். அதுபோல ஜோக்காளி தளத்தில் இருந்து நான் பொறுக்கிக் காட்டும் எடுத்துக்காட்டுகள் அத்தளத்தை அடையாளப்படுத்தும் என நம்புகிறேன்.
ஒரு பெண் பிள்ளை ஒரு பிள்ளையைப் பெறுகின்ற நோவு இருக்கே; அதுபோலத் தான் ஒரு நகைச்சுவை எழுதி முடிக்கும் போது ஒரு படைப்பாளி நோவடைகின்றார். பிள்ளையைப் பெற்றதும் தாய் அடையும் மகிழ்ச்சியைப் போல நகைச்சுவை எழுதியதும் படைப்பாளி மகிழ்ச்சியடைகின்றார். இது எல்லாப் படைப்பாளிகளுக்கும் பொருந்தும்.
இனி அறிஞர் பகவான்ஜி அவர்களின் ஜோக்காளி தளப் பதிவுகளைக் கண்காணிப்போம்.
முதலில் "காதலில் உண்மை உண்டா?" என்ற பதிவைப் படியுங்க:
''உன்னை ஒன்று கேட்பேன், உண்மை சொல்ல வேண்டும் என்று பாடுற காதலிக்கு அட்வைஸ் பண்ணனும்!''
''என்னான்னு?''
''காதலன் சொல்றதெல்லாம் பொய்னு தெரிஞ்சும் இன்னும் ஏன் காதலிக்கிறேன்னு தான் !''
http://www.jokkaali.in/2012/11/blog-post_14.html
பொய் சொல்லுற காதலன்; எப்படி உண்மை சொல்வானென அறிஞர் இப்பதிவில் ஆய்வு செய்வதை நீங்கள் காணலாம்.
அடுத்து "வீடு பிடிக்கலைன்னா இப்பிடியா சொல்றது?" என்ற பதிவைப் படியுங்க:
''குறைந்த வாடகையிலே இந்த வீடுதான் இருக்கு ,உங்களுக்குப் பிடிக்குதா?''
''வீடா இது? பேசாம to let க்குப் பதிலா toilet னு போர்டுலே எழுதுங்க!''
http://www.jokkaali.in/2012/11/blog-post_17.html
அறிஞர் வீட்டின் கொள்ளளவை இப்பதிவில் ஆய்வு செய்வதை நீங்கள் காணலாம். நாங்க படிக்கிற காலத்தில் தெரு வழியே "To Let" க்குப் பதிலாக "Toilet" னு எழுதிப் போட்டு மறைஞ்சது இப்பதிவைப் படித்ததும் நினைவிற்கு வருகிறது.
அடுத்து "நகை உனக்கு! நங்கை நீ எனக்கு!" என்ற பதிவைப் படியுங்க:
''நகைக்கடை அதிபரோட டீலிங், விளம்பரப் படத்திலே நடிச்ச நடிகைக்கு ரொம்பப் பிடிச்சு போச்சாம்!''
''எப்படி?''
"அந்த நகைகளை நீயே வைச்சுக்கோ, உன்னே நான் வச்சுக்கிறேன்னுட்டாராம்!''
http://www.jokkaali.in/2012/11/blog-post_21.html
அறிஞர் எதைக் கொடுத்து எதை வேண்டலாமென இப்பதிவில் ஆய்வு செய்வதை நீங்கள் காணலாம். உளவியல் நோக்கில் மனித உள்ளம் எப்படி எண்ணுகிறது என்பதைப் படம் பிடித்துக் காட்டுகிறார்.
அடுத்து "ரோஜாக்கள் ஜாக்கிரதை!" என்ற பதிவைப் படியுங்க:
"ஜாக்கிரதை!" என்ற தலைப்பில்
"ரோஜாவை முத்தமிடாதே ....
உன் தாடி முள் குத்தி விடலாம்!" என்ற கவிதையைப் புனைந்திருக்கிறார்.
http://www.jokkaali.in/2012/11/blog-post_462.html
அறிஞர் கவிதை புனைந்து நகைச்சுவை ஆக்கியுள்ளார். தாடி முள், ரோஜா முள் இரண்டும் குத்துமென எச்சரிக்கை செய்கிறார். புரட்டிப் புரட்டிப் படித்தால் சிரிப்பு வரும்.
அடுத்து "ASH TRAY கேள்விக்கு பதில் ஏது?" என்ற பதிவைப் படியுங்க:
சுற்றுப்புறம் சுத்தமாய் இருக்க
என்னைக் கண்டுபிடித்த மனிதனால் ....
'தன் நுரையீரலைச் சுத்தமாக்கும் வழி ஏன் தெரியவில்லை...' எனக் கேட்டது ASH TRAY!
http://www.jokkaali.in/2012/12/ash-tray.html
இதனைப் படித்தால் அறிவியல் கேள்வி போலத் தெரிகிறது. புகைத்தவர் பணத்தைச் சாம்பலாக்கி நுரையீரலை எரிக்கிறாரே எனச் சாம்பல் பெட்டி (ASH TRAY!) கேட்கையில் சிரிப்பு வருகிறதே! அறிஞரின் அறிவியல் ஆய்வு இப்பதிவில் தெரிகிறதே!
அடுத்து "அழகான டீச்சர் முகத்தில் கோழி தெரிவதேன்?" என்ற பதிவைப் படியுங்க:
''இவ்வளவு அழகான டீச்சரைப் பார்த்தா, உனக்கு மட்டும் ஏண்டா கோழி ஞாபகம் வருது?''
''இவங்களும் முட்டைதானே போடுறாங்க!''
http://www.jokkaali.in/2013/12/blog-post_24.html
படித்தால் ஆசிரியை (டீச்சர்) மீதான ஆய்வாகத் தெரிந்தாலும் மாணவர் மீதான ஆய்வெனச் சற்றுச் சிந்தித்தால் புரியும். அறிஞரின் ஆய்வு பெற்றோருக்கு நல்வழிகாட்டல்.
அடுத்து "தாயும் சேயும் செய்யும் ஒரே காரியம்?" என்ற பதிவைப் படியுங்க:
''தூளியிலே குழந்தை கத்தி கத்தி அழுவுறதைக்கூட கேட்காம உங்கம்மா ஹால்லே என்னடா பண்ணிக்கிட்டிருக்கா?''
''டி வி மெகா சீரியலைப் பார்த்து அம்மா அழுதுகிட்டு இருக்காங்கப்பா!''
http://www.jokkaali.in/2013/11/blog-post_11.html
இன்றைய நாட்டு நடப்பை அதாவது நம்மாளுகளின் வீட்டு நிலைமையை அறிஞர் இப்பதிவில் ஆய்வு செய்வதை நீங்கள் காணலாம்.
அடுத்து " 'பிடித்தமான' புருஷனை எப்படி பிடிக்கும்?" என்ற பதிவைப் படியுங்க:
''ஒண்ணாந் தேதி வரவும் உனக்குப் பிடித்தமானவரே, பிடிக்காதவர் ஆயிட்டாரா, ஏண்டி?''
''அவரோட சம்பளம் எல்லாப் பிடித்தமும் போக ஒண்ணும் தேறலையே!''
http://www.jokkaali.in/2013/11/blog-post.html
இன்றைய நாட்டு நிலைமையை அதாவது நம்மாளுகளின் வீட்டிற்குள்ளே போய்ப் பார்த்தால் தெரியுமென அறிஞர் இப்பதிவில் ஆய்வு செய்வதை நீங்கள் காணலாம். என் வீட்டிலும் இப்படித்தான் போகிறது.
இறுதியாக "காதலன், காதலி என்றால் ஓகே!" என்ற பதிவைப் படியுங்க:
இல்லறப் பூட்டுக்களை கெடுப்பது
கள்ளச் சாவிகள் தான்!
http://www.jokkaali.in/2013/05/blog-post_28.html
திரைப்படங்களில மட்டுமல்ல நம்ம வீடுகளிலும் இதே நிலை தான். நடிகை, நடிகர் மட்டுமல்ல நம்மாளுகளும் அப்படித்தான். காதலன், காதலி என்றால் மணமானவருக்கும் மணமாகாதவருக்கும் இடையில காதலாகலாமோ? கள்ளச் சாவிகள் இவர்களென அறிஞர் இப்பதிவில் ஆய்வு செய்வதை நீங்கள் காணலாம்.
மேலோட்டமாக ஜோக்காளி தளத்தை ஊடுருவிப் பார்த்ததில் பொறுக்கிய எடுத்துக்காட்டுகளை வைத்து அறிஞர் பகவான்ஜி அவர்களைப் பற்றி என்ன தான் நான் கூறுவேனா? இத்தனை பதிவுகளும் அவரது திறமைக்குச் சான்று! எந்தவொரு குறுகிய வட்டத்திற்குள்ளும் ஒளிந்திருக்கவில்லை. அதாவது, இவரது தேடல் எல்லாச் சூழ்நிலையையும் தொட்டிருக்கிறது. எனக்கொரு கவலை, பிறமொழிச் சொல்களைக் குறைத்து தமிழ்வளம் பெருக்கியிருக்கலாம்.
நகைச்சுவை என்பது மூளைக்கு வேலை கொடுக்க வேண்டும். சிந்திக்கும் போது மூளையுடன் தொடர்புடைய நாடி, நரம்பு சுறுசுறுப்பாக இயங்க வேண்டும். உடலெங்கும் செந்நீர்/குருதி ஓட்டம் பிடிக்க உடலுறுப்புகள் சீராக இயங்க வேண்டும். அப்போது தான் "வாய் விட்டுச் சிரித்தால் நோய் விட்டுப் போகும்" எனலாம். அறிஞர் பகவான்ஜி அவர்களின் நகைச்சுவைகள் அதனைச் சரியாகச் செய்கிறது. நான் அவரது தளத்திற்குச் செல்வதே, அவரது புதுப்புது நுட்பங்களை அறியலாம் என்று தான். மொத்தத்தில் அவர் ஒரு சிறந்த படைப்பாளி.
என்னங்க... அறிஞர் பகவான்ஜி அவர்கள் நகைச்சுவைப் படைப்பாளி என்று குறுகிய நோக்கத்தில் எண்ண வேண்டாம். அவரது கவிதைகள், கதைகள், கட்டுரைகள் எனப் பலதுறைப் படைப்பாளி என்பதற்கு சான்று கூறுகின்றன. எனக்கொரு விருப்பம், அறிஞர் பகவான்ஜி அவர்கள் பலதுறைப் படைப்பாளியாக மின்ன வேண்டுமென்பதே!
முடிவாக ஜோக்காளி தளம் வாசகருக்கு நிறைவத் தரும் நல்ல தளம் என்று கூறி முடிக்கிறேன். ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் போல நான் சுட்டிக்காட்டிய பதிவுகளே அதற்குச் சான்றாகும்.
பகவான்ஜி பற்றிய சிறப்பு அலசலுக்கு நன்றி ஐயா... அவருக்கும் வாழ்த்துக்கள்...
ReplyDeleteவாழ்த்துக்கு நன்றி தனபாலன் ஜி !
Deleteஇனியெல்லாம் ஜோக்காளி தளம் தமிழ்மணம் வீச மின்னும் என நம்புகிறேன்.
Deleteஜோக்காளி தளத்தை அக்கு வேறு ஆணி வேறாக பிரித்து மேய்ந்து உள்ளீர்கள் ,மிக்க மகிழ்ச்சி !
ReplyDeleteபிற மொழிச் சொற்கள் குறைத்துக் கொள்ள வேண்டுமென்கிற உங்கள் ஆலோசனையை கவனத்தில் கொள்கிறேன் !
உங்கள் தள தமிழ் மண வாக்குப் பெட்டியை யாரும் தூக்கிக் கொண்டு சென்று விட்டார்களா ?கண்டு பிடியுங்கள் நண்பரே !
நன்றி
"பிற மொழிச் சொற்கள் குறைத்துக் கொள்ள வேண்டுமென்கிற உங்கள் ஆலோசனையை கவனத்தில் கொள்கிறேன்!" என்பதே எனக்கு நிறைவு. நாம் எல்லோரும் ஒன்றுபட்டுத் தூய தமிழ் பேணுவோம். மேலும் கவிதைகள், கதைகள், கட்டுரைகள் எனப் பல வழியிலும் உங்கள் திறமையை வெளிப்படுத்துங்கள். தமிழ்மணம் உறவுகள் என்றும் தங்களுக்கு ஒத்துழைப்புத் தருவார்கள்.
Deleteஜோக்காளியைப்பற்றி ஜோக்காகவே எழுதியிருக்கீங்க,,, வாழ்த்துக்கள், அவருக்கும்தான்.
ReplyDeleteஜோக்காளி தளத்தில் வெளியான நகைச்சுவைகளைப் பொறுக்கி எழுதினேன். நான் ஒன்றும் நகைச்சுவை எழுதவில்லை.
Deleteநன்றி கில்லர் ஜி !
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteவணக்கம்
ReplyDeleteஅண்ணா
நம்மட தலைவர் பகவான்ஜி பற்றி மிக அருமையாக எடுதுரைத்துள்ளீர்கள் நிச்சயம் பலபேருக்கு சென்றடையும் என்பது உறுதி பகிர்வுக்கு நன்றி.
வாழ்க ஜி...........வாழ்கஜி......வளர்க.....ஜி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
Deleteமிக்க நன்றி.
சரியான அலசல். எனக்கு பகவான்ஜி தளம் சமீபத்தில்தான் அறிமுகமானது. இப்படி தொடர்ச்சியாக நகைச்சுவைகள் வெளியிடுவது சுலபமான காரியம் அல்ல. பாராட்டுகள்.
ReplyDeleteதங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
Deleteமிக்க நன்றி.
ஜோக்காளி தளத்தைப் பற்றிய அலசல் அருமை! நண்பரே! பகவான் ஜி! பக'வான்' ஜி தான்! அவரது நகைச் சுவைத் துணுக்குகள் ஒவ்வொன்றும் ஒருவிதம்! அவரை நாம் எல்லோரும் வாழ்த்துவோம்! நண்பரே!
ReplyDeleteதங்களுக்கும் வாழ்த்துக்கள்! தொடருங்கள்!
தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
Deleteமிக்க நன்றி.
பகவான் ஜி அவர்களின் பதிவுகளை சிறப்பாக ஆய்வு செய்து பகிர்ந்தமைக்கு வாழ்த்துக்கள்! அவரின் பதிவுகளை தொடர்ந்து வாசித்து வருகிறேன்! நன்றி!
ReplyDeleteபகவான்ஜி அவர்களின் தளம் பற்றி தங்களின் விரிவான பார்வை அருமை...
ReplyDeleteபகவான்ஜிக்கும் தங்களுக்கும் வாழ்த்துக்கள்.
தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
Deleteமிக்க நன்றி.
ரூபன் ஜி ,ஸ்ரீ ராம் ஜி .துளசிதரன் ஜி ,சுரேஷ் ஜி ,குமார் ஜி அவர்களே ,உங்கள் வாழ்த்திற்கு நன்றி !
ReplyDeleteபகவான்ஜி நல்ல படைப்பாளர் நகைச்சுவை மட்டுமின்றி மற்ற படைப்புகளையும் தர வேண்டும் என்பது என் விருப்பம்.
ReplyDeleteயாராக இருப்பினும் படைப்புகளை ஊக்குவிக்கும் தங்கள் பண்பு பாராட்டுக்குரியது
தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
Deleteமிக்க நன்றி.