Friday, 24 October 2014

தமிழகத்துத் தமிழா ஒன்றுபடு


"முல்லை பெரியாறு என்றால் - அது
திருநெல்வேலிகாரர்களின் பிரச்னை என்றும்
பாலாறு என்றால் - அது
செங்கல்பட்டுகாரர்களின் பிரச்னை என்றும்
காவிரி என்றால் - அது
தஞ்சாவூர்காரர்களின் பிரச்னை என்றும்
அணுஉலை ஆபத்து என்றால் - அது
கூடங்குளம் பிரச்னை ஆச்சே என்றும்
நச்சுப்புகை தரும் ஸ்டெர்லைட் என்றால் - அது
தூத்துக்குடி பிரச்னை என்றும்" என
"தமிழாய் நிமிர்ந்திடு!.." என்ற பாவில்
(http://tamilnanbargal.com/node/38552)
நண்பர் இழவழுதி
"தமிழா ஒன்றுபடு" என நினைவூட்டுகிறாரே!

"ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு
ஒற்றுமை நீங்கில் அனைவரும் தாழ்வு" என
முன்னோர்கள் முன்மொழிந்தார்களே...
இது
தமிழக மக்களுக்காக எழுதப்பட்டதல்ல
உலகெங்கும் வாழும் தமிழருக்காக
எழுதப்பட்டது என்பேன்!
ஆபிரிக்கா தொட்டு அவுஸ்ரேலியா வரை
வாழ்ந்த தமிழர் - என்றோ
ஈழத்தமிழரும் அழிந்து விட்டால்
தமிழகத்தில் மட்டுமே இருக்கலாம்...
"தமிழாய் நிமிர்ந்திடு
தமிழனாய் வாழ்ந்திடு" என்று
நண்பர் இழவழுதி சொல்வதில்
தப்பில்லைக் காணும்!

தமிழரின் ஒற்றுமையின்மைக்கு
எத்தனையோ எடுத்துக்காட்டுகள் இருப்பினும்
ஈழத் தமிழரின் போர் வீழ்ச்சிக்கும்
ஒற்றுமையின்மையே ஆணிவேர்
"அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு" போல
தமிழகத்துத் தமிழா ஒன்றுபடு
உலகத் தமிழரையும் ஒற்றுமைப்படுத்து
தமிழகத்தை மட்டுமல்ல
தமிழன் உலகையே ஆளலாம்
தமிழையே
உலகெங்கும் பரப்பிப் பேணலாம்
ஒற்றுமையின் பெறுமதியை உணர்ந்து
தமிழ் மக்கள் இடையே
ஒற்றுமையை வலுப்படுத்துவோம் வாருங்கள்!

4 comments:

  1. உங்கள் அழைப்பின் நோக்கம் வெற்றி பெறட்டும் !சாதி மதங்களை மறந்து தமிழ் மக்கள் ஒற்றுமை வளரட்டும் !

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்.
      மிக்க நன்றி.

      Delete
  2. அதெப்படி..நாங்கள் ஆண்ட பரம்பரை தமிழன், சாதிவெறித் தமிழன், வன்னிய குல சத்திரிய தமிழன், சாதி மாறி காதலித்தால் கொல்லும் காட்டு மிராண்டி தமிழனாய்.. இப்படியாய் சாதியத் தமிழ..நாய் உயர்ந்து இருக்கும்போது...ஒன்று பட்டால் எங்கள் சாதி குலப் பெருமை என்னாவது.....

    ReplyDelete
    Replies

    1. தங்கள் விழிப்புணர்வுக் கருத்தை வரவேற்கிறேன்.
      மிக்க நன்றி.

      Delete

தங்கள் கருத்துகளை வரவேற்கிறேன்.
உங்கள் யாழ்பாவாணன்.