Friday 3 April 2015

மின்நூல் - தாலியுடன் தனிமரம் போலத் தவிக்கின்றேன்

என் இனிய பதிவுலக உறவுகளே!

எனது எண்ணங்களை வெளியிட வலைப்பூக்களை நடத்துவதோடு மின்நூல்களை வெளியிட யாழ்பாவாணன் வெளியீட்டகமூம் கணினித் தீர்வுகளை வெளியிட யாழ் மென்பொருள் தீர்வுகள் என்றும் இறங்கி நானே முழுமையான பணியை வெளிக்கொணர முடியாத வேளை அறிஞர் நேசனின் வேண்டுதலை ஏற்று அவரது மின்நூலை வெளியிட வேண்டியதாயிற்று. நேரம் கிடைக்கின்ற வேளை இவ்வாறு பிற அறிஞர்களின் மின்நூல்களை வெளியிடும் எண்ணம் எனக்குண்டு.

பிற அறிஞர்களின் மின்நூல்களை வெளியிடும் போது அவர்கள் சொல்ல வரும் செய்தி, அவர்களது எழுத்தாளுமை, அவர்களது மக்களாயப் (சமூகப்) பொறுப்புணர்வு, அவர்களது மக்களாய (சமூக), நாட்டு முன்னேற்ற எண்ணங்கள் எனப் பலவற்றை நான் எண்ணிப்பார்க்க வேண்டியிருக்கிறது. அறிஞர் நேசனின் மின்நூலை வெளியிடும் போதும் இவற்றையே பொருட்படுத்தினேன்.

அறிஞர் நேசனை நேரில் கண்டதுமில்லை. ஸ்கைப், வைபர் எதிலும் முகம் பார்த்துக் கதைத்ததுமில்லை. அவரது எழுத்தை நம்பியே இம்மின்நூலை வெளியிடுகிறேன். அவரைப் பற்றியோ அவரது மின்நூலைப் பற்றியோ நானே அடுக்கிச் சென்றால் அழகிருக்காது. அவரது மின்நூலைப் படித்தால் அழகாக அத்தனையும் நீங்களே அறிய வாய்ப்புண்டு.

யாழ்பாவாணன் வெளியீட்டகமூடாகத் தனிமரம் வலைப்பூ நடாத்தும் அறிஞர் நேசனின் "தாலியுடன் தனிமரம் போலத் தவிக்கின்றேன்" என்ற மின்நூலை வெளியிட்டு, உங்கள் பார்வைக்கு முன்வைக்கின்றேன். அதனைப் படித்த பின் அறிஞர் நேசனை ஊக்கப்படுத்துவதோடு நின்றுவிடாமல் எனது வெளியீட்டு முயற்சி பற்றிய தங்கள் எண்ணங்களையும் பகிர முன்வாருங்கள்.

இதோ அவரது மின்நூலைப் பதிவிறக்கத் தேவையான இணைப்பு
http://www.thanimaram.org/2015/04/blog-post_2.html

எனது வெளியீட்டு முயற்சியோடு அறிஞர் நேசனின் "தாலியுடன் தனிமரம் போலத் தவிக்கின்றேன்" என்ற மின்நூல் வெளியிடு பற்றியும் அறிஞர்களாகிய நீங்கள் உங்கள் வலை ஊடகங்களில் உங்களது திறனாய்வை (விமர்சனத்தை) வெளியிடலாம். தவறுகள் ஏதுமிருப்பின் தப்பாமல் சுட்டுங்கள். கிட்டவுள்ளோர் என் தலைக்குக் கல்லெறியலாம். தூரவுள்ளோர் என் தலைக்குச் சொல்லெறியலாம். யாழ்பாவாணன் வெளியீட்டகம் வெளிக்கொணரும் வெளியீடுகள் வாசகர் பக்கம் செல்லவோ செல்லாமல் இருக்கவோ உங்களது திறனாய்வு (விமர்சனம்) உதவும் என நம்புகிறேன்.

14 comments:

  1. நல்லதொரு சேவை... வாழ்த்துகளும் நன்றிகளும் பல...

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்.
      மிக்க நன்றி.

      Delete
  2. தங்களது சேவை பாராட்டுக்குறியது நண்பரே...
    சுட்டிக்குப் போகிறேன்,

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்.
      மிக்க நன்றி.

      Delete
  3. மிக மிக நல்லதொரு சேவை நண்பரே! வாழ்த்துகள்! நிச்சயமாக வாசிக்கின்றோம்...

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்.
      மிக்க நன்றி.

      Delete
  4. தங்களின் சேவை தொடர வாழ்த்துக்கள்.!!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்.
      மிக்க நன்றி.

      Delete
  5. தங்களின் பல்வேறு பணிகளுக்கிடையிலும் தமிழ் வளர்க்கும் ஆசையில் சாமானிய ஒரு வழிப்போக்கன் தனிமரத்தின் ஆக்கத்துக்கு ஊக்கம் தந்து அளப்பரிய சேவை செய்து தாங்கள் அறிந்த தொழில்நூட்ப வித்தை ஊடாக என் வலையில் எழுதிய தொடரை மின்நூல் ஆக்கித்தந்தமைக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள் ஐயா. இந்தப்பணி இன்னும் தொடரவேண்டும் தங்களின் வெளியீட்டகம் மூலம் இன்னும் பலர் வெளியுலகை அறியமுடியும்.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்.
      மிக்க நன்றி.

      Delete
  6. தாலியோடு தனிமரம் போல தவிக்கின்றேன் மின்நூல் ஆக்கம் முழுமைபெற ஐயாவின் பொன்னான நேரம் அதிகம் தமிழ்மீது கொண்ட ஆர்வத்தினால் !புலம்பெயர்ந்து இருக்கும் தனிமரம் முகம் அறியாது மின்னஞ்சல் மூலம் தொடர்பினைப்பேனிய அவரின் சேவை தொடர வாழ்த்திய வலையுலக உறவுகள் அனைவருக்கும் என் நன்றிகளும் வாழ்த்துக்களும்.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்.
      மிக்க நன்றி.

      Delete
  7. மிக்கநன்றி. பணி தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்.
      மிக்க நன்றி.

      Delete

தங்கள் கருத்துகளை வரவேற்கிறேன்.
உங்கள் யாழ்பாவாணன்.