Thursday 20 March 2014

தமிழ் நண்பர்கள் இதனைப் படிக்கவும்


http://www.tamilpriyan.com/ தள ஆசிரியர் ரீகன் ஜோன்ஸ் அவர்கள் சிறந்த முறையில் மதிப்பீட்டுரை ஒன்றை வெளியிட்டிருக்கின்றார். அவரது வழிகாட்டல்கள் சிறந்த பதிவர்களாக நம்மாளுகள் முன்னேற உதவுமென நம்புகின்றேன்.

"தவறான செய்திகளைப் பரப்பக் கூடாது.
இயன்றவரைத் தமிழிலேயே இருக்க வேண்டும்.
பிற மதங்களையோ பிற இனங்களையோ புண்படுத்துவதாக இருக்கக் கூடாது.
எல்லாம் தமது சொந்தப் படைப்புகளாகவே இருக்க வேண்டும்." எனச் சில வழிகாட்டல்களைத் "தமிழ் நண்பர்கள் இதனைப் படிக்கவும்" என நம்மாளுகளுக்குத் தெரிவிக்கின்றார்.

http://www.tamilpriyan.com/ தள ஆசிரியர் ரீகன் ஜோன்ஸ் அவர்களின் வழிகாட்டல்களை ஏற்றுக்கொள்வதோடு "இலக்கியக் களவு செய்தீர்கள்" என்பதைச் சொல்வதே எனது நோக்கம். அதாவது, பிறர் பதிவிலிருந்து எடுத்துக்காட்டாகச் சில வரிகள் பொறுக்கி எடுத்துக் காட்டினாலும் அப்பதிவுக் காரரின் அடையாளம் / URL தெரிவிக்கப்படாவிடின் 'இலக்கியக் களவு' என்பேன். இனி நண்பரின் பதிவைப் படிக்கக் கீ்ழ்வரும் இணைப்பைச் சொடுக்குக.

தமிழ் நண்பர்கள் இதனைப் படிக்கவும் | தமிழ் பிரியன்

Thursday 13 March 2014

திறனாய்வு (விமர்சனம்) பற்றி...

ஒரு படைப்பாளியையோ ஒரு படைப்பையோ எடைபோடத் திறனாய்வு (விமர்சனம்) தேவைப்படுகிறது. அதாவது, சிறந்த படைப்பாளியை அல்லது சிறந்த படைப்பை அடையாளப்படுத்த உதவுகிறது எனலாம்.

அந்த வகையில் வலைப் பதிவர்களின் தமிழ் பக்கங்களிற்கு (http://tamilsites.doomby.com/) வலைப்பூக்களைத் திரட்டும் நோக்கில் வலைவிரித்த போது சாதாரணமானவனின் மனது (கற்பனை கலக்காத கதைகள் - visaran.blogspot.com) பக்கத்தைப் படிக்க முடிந்தது.

அதில் விமர்சிப்பவன் எதிரியா? (http://visaran.blogspot.com/2014/03/blog-post_12.html) என்ற பதிவைப் பார்க்க முடிந்தது. எனது வாசகர்களுக்குப் பயன்படும் என்று கருதி இப்பதிவில் அறிமுகம் செய்கிறேன்.

திறனாய்வு (விமர்சனம்) பற்றி ஒவ்வொரு படைப்பாளியும் அறிந்திருந்தால், தன்னைச் சிறந்த படைப்பாளியாக்கவோ தன்னால் சிறந்த படைப்புகளையாக்கவோ முடியுமென நம்புகின்றேன்.