Wednesday 16 April 2014

கணினி முரண்டு பிடித்ததால்...

இனிய சித்திரைப் புத்தாண்டு வருமுன்
என் கணினிக்கு நோய் (பழுது) வந்தாச்சு
விரும்பிகளுக்கு, நட்புகளுக்கு, உறவுகளுக்கு
புத்தாண்டு வாழ்த்துக் கூட
வெளிப்படுத்த முடியாமல் போக
கணினி முரண்டு பிடித்தமையே
என் சாட்டு என்பேன்!
என் கணினி நலமாக
நானும்
உஙகளுடன் வலம் வருவேனென
இனிய சித்திரைப் புத்தாண்டில்
எல்லோரும் எல்லாமும் பெற்று
வெற்றியடைய வாழ்த்துகள்!

Wednesday 9 April 2014

மூங்கில்காற்று : நிறம் வெளுத்துப் போகும் நிஜம்

பத்துக் குறள் வடிவப் பாக்கள்

அத்தனையும்

எங்கள் உறவுகள்

கற்றுக்கொள்ள வேண்டிய

பதிவு நுட்பங்கள் / இதழியல் விழிப்புணர்வு என்று

என் உள்ளம் உணர்த்திடவே

அறிஞர் டி.என்.முரளிதரன் அவர்களின் பதிவை

உங்களுடன் பகிர முன்வந்தேன்!

கவிதை இருக்கே - அதிலும்

இனிய கவிதை இருக்கே - அதை

அடிக்கடி நம்மாளுகள் படிப்பதை மறவேன்...

ஈரடிப் பாவால் வெளிப்படுத்திய அழகில

இதழியல் விழிப்புணர்வை

ஏடெடுத்துப் படித்தோரும் பின்பற்ற வேண்டுமென

நானுரைப்பேன் பதிவர்களே!

இனி

கீழுள்ள இணைப்பைச் சொடுக்கிப் படியுங்களேன்!


டி.என்.முரளிதரன்- மூங்கில்காற்று : நிறம் வெளுத்துப் போகும் நிஜம்

Saturday 5 April 2014

Kaviyakavi: நன்றி சொல்ல வார்த்தை இல்லை

அறிஞர் இனியா அவர்களின் தளத்தைப் (http://kaviyakavi.blogspot.com/) பார்த்த போது,  "நன்றி சொல்ல வார்த்தை இல்லை" என்ற பதிவை நானும் எனது வாசகருடன் பகிர எண்ணினேன். "தமிழ் வளர்க்க எண்ணும் ரூபனும், பாண்டியனும் இணைந்து நடாத்திய போட்டியில், அவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்காகவே இப் போட்டியில் நான் பங்குபற்றி இருந்தேன்." என்று அறிஞர் இனியா அவர்கள் தெரிவித்திருப்பதை நானும் வரவேற்கிறேன். நானும் அதே நோக்கிலேயே பங்கு பற்றினேன்.

உறவுகளே! வெற்றி பெறவேண்டுமெனப் போட்டிகளில் கலந்து கொள்வதை விட, போட்டிகளில் கலந்து கொள்வதற்காக முயற்சி எடுப்பதோ பங்கெடுப்பதோ வெற்றி தான். எனவே, தீபாவளி, தைப்பொங்கல், சித்திரைப் புத்தாண்டென அறிஞர்கள் நடாத்தும் போட்டிகளில் கலந்து கொள்ள வேண்டுமென இப்பதிவைப் பகிருகிறேன். போட்டி நடத்துவதில் எத்தனை சிக்கல் இருக்கும் என்பதை யாவரும் அறிவர். ஆயினும், அப்போட்டிகளின் வெற்றி என்பது பங்கெடுப்போரின் எண்ணிக்கையிலே தங்கியிருக்கிறது.

உறவுகளே! அறிஞர்கள் நடாத்தும் போட்டிகள் ஊடாகச் சிறந்த படைப்பாளிகளை இனம் காண முடிந்தாலும் சிறந்த தமிழ்ப் படைப்புகளை அடையாளம் காணமுடியுமே! எனவே, எமது தமிழை அழியாது பேண எல்லோரும் போட்டிகளில் பங்கெடுக்க முன்நிற்க வேண்டும். மேலும், படைப்பாளிகள் எல்லோரும் இப்படி இணையும் போது உலகெங்கும் தமிழைப் பரப்பிப் பேண முடியுமே!

"எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்நன்றி கொன்ற மகற்கு.                 (110)
விளக்கம்:
எந்ந நன்மையை அழித்தவர்க்கும் தப்புதற்கு வழி உண்டாகும்: ஆயின், ஒருவர் செய்த உதவியை மறந்து அழித்தவனுக்கு உய்வே கிடையாது." என்றவாறு http://thirukural4u.blogspot.com/2009/05/11.html என்ற தளத்தில் நன்றி பற்றிக் குறிப்பிட்டிருப்பதைப் பொறுக்கி கீழுள்ள அறிஞர் இனியா அவர்களின் "நன்றி சொல்ல வார்த்தை இல்லை" என்ற பதிவைத் தங்களுடன் பகிருவதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.

Kaviyakavi: நன்றி சொல்ல வார்த்தை இல்லை