Saturday 28 March 2015

கற்பழிப்புச் செய்திகளும் ஊடகங்களும்


கற்பு + அழிப்பு = கற்பழிப்பு என்று யாவரும் அறிந்ததே! கற்பு என்பது அறம் அல்லது ஒழுக்கம் என்று எல்லோரும் சொல்லுவார்கள். இதனடிப்படையில் ஊடகங்களும் தம்விருப்பிற்கு ஏற்றாற் போல கற்பழிப்புச் செய்திகளை வெளியிடுகின்றன.

கற்பு என்பது பெண்ணுக்கு மட்டும் உரியதல்ல; ஆணுக்கும் உரியதே! ஊடகங்கள் இதனை மறந்து விடுவதாகப் பலரும் பேசுவதுண்டு. இயற்கையும் பெண்ணுக்குப் பாதிப்பைத் தருவதால் ஊடகங்களை எதிர்க்க எவருமில்லை என்ற பேச்சு உலாவுகின்றது. ஊர்திகள் மோதுண்டால் மோதிய ஊர்திக்குத் தீமூட்டும் நம்மாளுகள்; பெண்ணைச் செய்தி ஆக்கும் ஊடகங்களையோ பெண்ணின் கற்பை அழிக்கும் ஆண்களையோ தீமூட்ட முன்வராமை தான் இந்நிலை தொடரக் காரணம்.

என் நிலை என்ன வென்றால் ஊர்திக்குத் தீமூட்டும் நம்மாளுகளின் செயலைப் பெரிதாகப் பரப்பும் ஊடகங்கள்; பெண்ணின் கற்பை அழிக்கும் கற்பில்லாத ஆண்களைச் செய்தியாக்கவோ கற்பில்லாத ஆண்களின் செயலைப் பெரிதாகப் பரப்ப முன்வராமை தான் இந்நிலை தொடரக் காரணம். இந்நிலை தொடருவதால் தான் பல பெண்கள் தற்கொலை செய்துகொள்கின்றனர்.

அப்படியாயின், கற்பழிப்புச் செய்திகளை எழுதுவது எப்படி?

நள்ளிரவில் நடுவழியே முள்ளூர் ஆண் கல்லூர் பெண்ணின் கற்பை அழித்துவிட்டான். இந்நிகழ்வை இப்படியும் சிலர் எழுதலாம்.

அரைகுறை ஆடை அணிந்து சென்ற பெண்ணைக் கண்ட ஆண் அவளைக் கெடுத்துவிட்டான்.

நடுவழியே தனியே சென்ற பெண்ணை ஆண்கள் சிலர் கெடுத்துவிட்டனர்.

மது அருந்திய ஆணை நம்பி நடுவழியே சென்ற பெண், அவனாலே கெடுக்கப்பட்டாள்.

இவ்வாறு எழுதுவோர் பெண்ணின் அடையாளத்தைத் தெரிந்து கொள்ள உதவும் தரவுகளையும் எழுதுவர். இப்படி எழுதுவதால் பெண்ணின் பக்கம் தான் முழுப்பிழை என்றாகிவிடுகிறது. இதனால் ஆண்கள் சுத்தமானவர்கள், பெண்களே தவறுக்குக் காரணம் என்றாகிவிடுகிறது.

இவற்றை இப்படி மாற்றி எழுதினால் எப்படி இருக்குமென்று பாருங்களேன்.

இளமை முற்றிய ஆணோ நடுவழியே அழகு முற்றிய பெண்ணைக் கண்டதும் கெடுத்துவிட்டான்.

ஆண்கள் சிலர் நடுவழியே தனியே சென்ற ஏதுமறியாப் (அப்பாவி) பெண்ணைக் கெடுத்து விலங்குகளாயினர்.

பக்கத்து வீட்டாளை நம்பிப் பணியிடத்திலிருந்து வீடு திரும்பிய பெண் அவனாலேயே கெடுக்கப்பட்டாள். பக்கத்து வீட்டாளைக் காவற்றுறை வலைவீசித் தேடுகின்றனராம்.

இப்படி, எப்படி எழுதினாலும் கூட கற்பழிப்பு நிகழ்வுகளைத் தடுக்க முடிவதில்லையே!

எடுத்துக்காட்டாக நள்ளிரவில் நடுவழியே முள்ளூர் ஆண் கல்லூர் பெண்ணின் கற்பை அழித்துவிட்டான் என்றதும் கல்லூர் மக்கள் கல்லெறிந்தே முள்ளூர் ஆணைக் கொல்ல முயன்றனர். அவ்வழியே வந்த காவற்றுறை நிலைமையைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தது.

பள்ளிக்கூட ஆசிரியை மாணவன் ஒருவரை வீட்டிற்கு அழைத்துக் கற்றுக்கொடுப்பதாகக் கூறித் தன் பாலியல் பசிபோக்கப் பாவித்தவேளை கண்ணுற்ற அயலண்டை ஆள்கள் ஆசிரியையை மரத்தில் கட்டிவைத்து ஊரைக்கூட்டி நோகடித்தனர். அவ்வழியே வந்த காவற்றுறை நிலைமையைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தது.

இவ்வாறு கற்பழிப்பு நிகழ்வுகளைத் தடுக்கவல்ல அல்லது கற்பழிப்பு நிகழ்வுகள் தொடராமல் இருக்க உதவும் வகையில் ஊடகங்கள் கற்பழிப்புச் செய்திகளை வெளியிடலாமே!

இது பற்றிப் பெண் ஊடகவியலாளர் ஒருவர் தன்பக்கக் கருத்துகளை எப்படி எழுதுவார். ஊடகவியல் அறிஞர் மு.வி.நந்தினி அவர்களின் "கற்பழிப்பு நியூஸ் எழுதுவது எப்படி?" என்ற பதிவைப் படித்தால் உங்களுக்குப் புரியும் என்று நம்புகிறேன். கீழுள்ள இணைப்பைச் சொடுக்கிப் படித்துப் பாருங்கள்.

http://mvnandhini.com/2015/03/27/%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5/

Sunday 22 March 2015

நன்றி மறவேன்! நாளும் தொடர்வேன்!

என் நிறம், மணம், குணம் ஏதுமறியாது
எனது அடி, நுனி, அத்தனையும் அறியாது
2010 இலிருந்து
தமிழ்நண்பர்கள்.கொம் இலிருந்து
என்னுடைய எழுத்தில்
என்னை அடையாளம் கண்டு
என்னையும் ஒரு பதிவராகக் கணக்கிலெடுத்து
உறவைப் பேணி வரும்
பதிவர்கள் எல்லோருக்கும் நன்றி!
எங்கிருந்தோ என் பதிவை நாடி - தங்கள்
எண்ணங்களைக் கருத்து வண்ணங்களாக
பின்னூட்டமிட்டும் - எனது
பதிவுகளைப் பகிர்ந்தும் - எனது
தளங்களை அறிமுகம் செய்தும்
சின்னப்பொடியன் (யாழ்பாவாணன்) என்னை
வலைப்பதிவராக (Blogger) உயர்த்திய
பதிவர்கள் எல்லோருக்கும் நன்றி!
உங்கள் ஒத்துழைப்பும் வழிகாட்டலும்
என்னை வளப்படுத்தி, நெறிப்படுத்தி
எனது திறமைகள் எல்லாவற்றையும்
ஏழாம் எண் ஆளென - தமிழில்
ஏழு வலைத் தளங்களூடாக
(நடைபேசியில் http://tik.ee/kasig1)
வெளியிடப் பின்னூட்டியாக (Feedback) இருந்து
என்னை ஆளுமை செய்கிறது என்பதை
நன்றியுடன் கூறிக்கொள்ள விரும்புகிறேன்!
http://eluththugal.blogspot.com/
http://yppubs.blogspot.com/
http://paapunaya.blogspot.com/
https://mhcd7.wordpress.com/
http://yarlpavanan.wordpress.com/
https://ial2.wordpress.com/ 
(கட்டியமைக்கிறேன், விரைவில் அறிமுகம் செய்வேன்)
http://www.yarlsoft.com/
(கட்டியமைக்கிறேன், விரைவில் அறிமுகம் செய்வேன்)
ஆகிய வலைத் தளங்களின்
வடிவமைப்பை நிறைவு செய்யும் நோக்கில்
அடிக்கடி தங்கள் பதிவை நாடி
என் கருத்துகளை பின்னூட்டமிட முடியாமை
எனக்குத் துயரம் தான்...
ஆயினும் - தங்கள்
வலைப்பூக்களை - தங்கள்
பதிவுகளை நாடி வருவேன்!
நன்றி மறவேன்! நாளும் தொடர்வேன்!


Friday 6 March 2015

தமிழ் நண்பர்கள் மின் இதழ் வாழ்க


எழுதுகோல் பிடிக்கத் தெரிந்தவர்கள்
பழுதின்றி எழுதத் தெரிந்தவர்கள்
எழுதியதை வாசிக்கத் தெரிந்தவர்கள்
வாசித்ததைப் புரிந்து கொண்டவர்கள்
எல்லோரும் தான்
தமிழ் மீது பற்றுள்ள எல்லோரும் தான்
எவ்வேளையும் மீட்டுப் பார்க்க வந்ததே
எங்கள் தமிழ் நண்பர்கள் தளத்தின்
மாதாந்த மின் இதழ்!
வாழ்க தமிழ் நண்பர்கள் மின் இதழ்!
உலகம் தமிழ் படிக்க வழிகாட்டும்
தமிழ் நண்பர்கள் மின் இதழே வாழ்க!
தூங்கிக்கொண்டிருக்கும்
உலகத் தமிழினத்தைத் தட்டியெழுப்ப
வந்திருக்கும் மின் இதழுக்கு
படைப்பெழுதிய எல்லோருக்கும்
மின் இதழாக்கிய மேலாளர்களுக்கும்
தமிழை விரும்பும் ஒவ்வொருவருக்கும்
பயனளிக்கத் தொடர்ந்து வரும் மின் இதழை
வரவேற்பதோடு வாழ்த்துகிறேன்!
வாழ்க தமிழ் நண்பர்கள் தள மேலாளர்கள்!
வாழ்க தமிழ் நண்பர்கள் தளப் படைப்பாளர்கள்!
வாழ்க தமிழ் நண்பர்கள் மின் இதழ் வாசகர்கள்!
வாழ்க தமிழை விரும்பும் ஒவ்வொருவரும்!
தமிழ் நண்பர்கள் மின் இதழைக் கண்ட மகிழ்வில்
என்னுள்ளத்தில் எழுந்த வரிகளை
தங்களுடன் பகிர்ந்தமைக்கு உதவிய
என் தமிழுக்கு நானடிமை!

தமிழ் நண்பர்கள் - மின் இதழ்கள்
https://mega.co.nz/#F!YcIBmAzB!YD0Ot8974jY2VdKQa0gTIw

மேற்காணும் இணைப்பைச் சொடுக்கி இதுவரை வெளிவந்த தமிழ் நண்பர்கள் - மின் இதழ்களைப் பதிவிறக்கிக் கொள்ளலாம்.

Sunday 1 March 2015

அ... ஆ... ஆள்களின் செய்தீகள்


"அ-மனிதர்கள்!" என்றதும்
"அ" இற்குப் பொருள் தேடியே
படிக்கின்ற வேளை...
"ஆ" என்று ஆட்டுவித்த - அந்தந்த
நிகழ்வுகளைப் படம் பிடித்துக் காட்டிய
அருமையான பதிவை - நானும்
படித்தமையால் பகிர்கிறேன் - நீங்களும்
படிக்க மறந்துவிடாதீர்கள்...
.
1990 இல் பாவலர் முத்துநிலவன் எழுதிய
பாவொன்றே பதிவின் கருப்பொருள்

இலங்கையிலே செத்ததுவும் மனிதர், அஸ்ஸாம்
      எரிந்ததிலே செத்ததுவும் மனிதர், பஞ்சாப்
கலங்கையிலே செத்ததுவும் மனிதர், டெல்லிக்
      கலவரத்தில் செத்ததுவும் மனிதர், காஷ்மீர்
குலுங்கையிலே செத்ததுவும் மனிதர், பாபர்
      கோவிலிலே செத்ததுவும் மனிதர், அறிவு
மழுங்கையிலே செத்ததெல்லாம் சிவந்த ரத்த
      மனிதர்கள்! மனிதர்கள்! மனிதர் கள்தான்!

கருப்பொருள் புரிந்தால்
ஒருகணம் எண்ணிப்பாருங்கள்
வரலாறு நம்மாளுகளை திருத்தும்
என்பது பொய்யாகி
நம்மாளுகள் வரலாற்றைத் திருத்தும்
இழிசெயலை எண்ணிப்பாருங்கள்
அதற்கு முன்
"அ-மனிதர்கள்!" பதிவைப் படிக்க
கீழ்வரும் இணைப்பைச் சொடுக்குங்கள்!
http://valarumkavithai.blogspot.com/2015/02/blog-post_28.html

"வரலாறு என்பது
அழிக்க முடியாத ஒன்றே - அந்த
வரலாற்றையே அழிக்க முடிந்தால்  - அந்த
புதிய வரலாறே - அதற்கு
முன்னைய வரலாற்றின் சான்று!" என்று
"அ-மனிதர்கள்!" எவரையாவது கண்டால்
காதிற்கு எட்டும்படி சொல்லிவையுங்கள்!