Thursday 23 April 2015

நீங்கள் படைப்பாளிகளா?

படைப்பாளிகளே!
படைப்புகளை எப்படி ஆக்குவீர்?
அதற்கான
சூழ்நிலை எப்படி அமைந்துவிடுகிறது?
படைப்பாளி ஒருவரின்
படைப்பாக்க முயற்சிக்கு ஏற்ற
சூழ்நிலை தான் - அந்த
படைப்பின் வெற்றியைத் தீர்மானிக்கின்றது!

கதையோ கவிதையோ வா வாவென்று
எழுதக் குந்தினால்
ஒழுங்காய் எழுத வராது
கதையோ கவிதையோ
உள்ளத்திலே கருவுற்று எழுத வரும் வேளை
எழுதிப்பார்த்தீர்களா? - அவ்வேளை
எழுதிய படைப்பே - நீங்கள்
எதிர்பார்க்காத அளவுக்கு
சிறப்பாக அமைந்திருப்பதை உணருவீர்களே!

எழுதியதை வெளியீடு செய்வது என்பது
இலகுவான ஒன்றல்ல - அதுவும்
புதியவர்கள் வெளியீடு செய்வது என்றால்
எத்தனை சிக்கல்கள்?
அத்தனைக்கும் முகம்கொடுத்து
வெளியிட்ட பின்னர் - அதனை
வாசகர் கையிற்குக் கொண்டுபோய்
சேர்த்த பின்னரே வெற்றி என்பேன்!

இதெல்லாம்
அறிஞர் கரந்தை ஜெயக்குமார் எழுதிய
"மகளுக்காக" என்ற பதிவைப் படித்தால்
புரிந்துகொள்ள முடியும் என்பேன்!
நீங்கள் படைப்பாளிகளா? - அப்ப
படைப்பாக்கம், வெளியீடு பற்றி
எண்ணிப் பார்த்ததுண்டா? - அப்ப
கீழ்வரும் இணைப்பைச் சொடுக்கி
http://karanthaijayakumar.blogspot.com/2015/04/blog-post_22.html
அறிஞர் கரந்தை ஜெயக்குமாரின்
"மகளுக்காக" என்ற பதிவைப் படித்த பின்
என் கருத்தில்
தவறிருந்தால் சொல்லுங்களேன்!

18 comments:

  1. இன்று காலை எழுந்தவுடன், தமிழ்மணத்தில் நல்லதோர் சிந்தனையாக உங்களது கட்டுரையைக் கண்டேன்.

    // கதையோ கவிதையோ வா வாவென்று
    எழுதக் குந்தினால்
    ஒழுங்காய் எழுத வராது //

    என்று படைப்பாளிகளின் அவஸ்தையை நன்றாகவே சொன்னீர்கள். அன்பு ஆசிரியர் கரந்தை ஜெயக்குமார் அவர்களது "மகளுக்காக" என்ற பதிவை சூழ்நிலை காரணமாக உடனே படிக்க இயலவில்லை. இனிமேல்தான் படிக்க வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      Delete
  2. தங்களின் அன்பு கண்டு நெகிழ்ந்து போனேன்
    நன்றி ஐயா

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      Delete
  3. உங்கள் தளத்திலும் அறிமுகம் செய்தமைக்கு பாராட்டுக்கள்... நன்றிகள்...

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      Delete
  4. தகவலுக்கும் கருத்துக்கும் நன்றி!!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      Delete
  5. நல்லதொரு கவிதை! இணைப்பிற்கு சென்று பார்க்கிறேன்!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      Delete
  6. அருமையான சிந்தனைக்குறிய விடயம் நண்பரே வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      Delete
  7. தங்கள் கேள்வியில் பல அர்த்தங்கள் பொதிந்திருக்கின்றன கவிதை உணர்வுகளின் ஊற்று அது எந்நேரமும் வெளிப்படுவதில்லை ..உண்மைதான் அருமையா சொன்னீர்கள் வாழ்த்துக்கள் !

    தமிழ்மணம் வாக்கு ஒன்று

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      Delete
  8. வணக்கம் சகோதரரே.

    தங்கள் பதிவைக் கண்டேன். அனைத்து வார்த்தைகளும் உண்மை. எத்தனை பேருக்கு நினைத்ததை உடனே எழுத முடிகிறது. ? அதற்கென்று இறைவன் அருளிருந்தால்தான் எதுவுமே கை௬டிவரும். அருமையாக ௬றியுள்ளீகள். நீங்கள் குறிப்பிட்ட தளம் சென்று படிக்கிறேன். நன்றி.

    என் தளம் வந்து கருத்திட்டமைக்கு நன்றிகள். தொடர்ந்து வந்து பதிவினை படித்து கருத்திட வேண்டுகிறேன்.

    நன்றியுடன்,
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      Delete
  9. நமது படைப்புகள் யாவுமே அப்படியே வருவதுதான்....மண்டையைக் குடைந்து சுரண்டி தோன்றுவது அல்ல...அது இயற்கையாக காதல் எப்படி வருகின்றதோ அது போன்று இயற்கையாக வர வேண்டும்...அருமையான பதிவு நண்பரே! நண்பர் கரந்தையாரின் அறிமுகமும் அருமை!

    எழுதியதை வெளியீடு செய்வது என்பது
    இலகுவான ஒன்றல்ல - அதுவும்
    புதியவர்கள் வெளியீடு செய்வது என்றால்
    எத்தனை சிக்கல்கள்?
    அத்தனைக்கும் முகம்கொடுத்து
    வெளியிட்ட பின்னர் - அதனை
    வாசகர் கையிற்குக் கொண்டுபோய்
    சேர்த்த பின்னரே வெற்றி என்பேன்!

    உண்மையான வரிகள்!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      Delete

தங்கள் கருத்துகளை வரவேற்கிறேன்.
உங்கள் யாழ்பாவாணன்.