Sunday 20 July 2014

யாழ்பாவாணனின் முயற்சிகளைப் பார்க்கலாம் வாங்க!

என்னைப் பற்றி நான் சொல்வதை விட எனது வெளியீடுகளே என்னைப் பற்றிச் சொல்வதை விரும்புகிறேன். "கற்றது கைப்பிடி மண்ணளவு கற்காதவை உலகளவு" எனப் பெரியோர் வழிகாட்டுவர். ஆயினும், நான் கற்றது சிறிதாக முளைத்த சின்னிவிரல் நகத்தளவு என்பேன். நான் கற்காதவை உலகளவு இருக்கும் என்பதைத் தாங்களும் அறிவீர்கள். ஆயினும், எனது இணையவழி முயற்சிகளைப் பற்றிச் சொல்ல விரும்பியதால் இப்பதிவை எழுதுகிறேன்.

1987 இலிருந்து எழுதுகிறேன். ஈழத்து ஏடுகளான வீரகேசரி வாரமலர், ஈழநாதம், அறிவுக்கதிர் போன்றவற்றில் எனது படைப்புகள் வெளியாகின. அரங்குகளிலும் நான் கவிதை பாடினேன். ஈழத்துப் போர்ச் சூழலால் பல நூறு படைப்புகள் அழிந்து போயின. ஆயினும், 2010 இலிருந்து வலைப்பக்கம் ஊடாக எனது இலக்கிய முயற்சிகளைத் தொடர்ந்தேன். இன்று இயலக்கூடிய அளவு எனது முயற்சிகளை ஒழுங்குபடுத்தி முடித்திருக்கிறேன். ஆனால் இவை முடிவல்லத் தொடக்கமே! இவற்றைத் தொடர்ந்து பேணுவதால் என்னால் இயலக்கூடிய எல்லாப் பணிகளையும் வழங்க முடியுமென நம்புகிறேன்.

இன்றும் நான் இலங்கைப் படைகளின் கண்காணிப்புகளுக்கு உள்ளாகி இருப்பதால் அரசியல் நிலைமைகளை எழுத முடியாதிருக்கிறேன். ஆயினும், எனது ஏனைய முயற்சிகளைத் தொடருகிறேன். உளநலம், நற்றமிழ், பாபுனைதல், எழுத்துகள், வெளியீடுகள் ஆகிய ஐந்து இலக்குக் குறித்துத் தமிழில் ஐந்து வலைப்பூ நடாத்துகிறேன். ஆங்கிலத்திலும் சிங்களத்திலும் போதிய அறிவின்மை இருந்தும் எனது கிறுக்கல்களை வெளியிட இரண்டு வலைப்பூ நடாத்துகிறேன்.

இவற்றிலிருந்து பிந்திய ஐந்து பதிவுகளைத் (http://feed2js.org/ தள உதவியுடன்) திரட்டித் தொகுத்திருக்கிறேன். நேரமுள்ள வேளை விரும்பியோர் வருகை தந்து பார்வையிட முடியும். மேலும், நானோ அறிவிற் சிறியன்; பெருமையாகச் சின்னப்பொடியன் என்று சொல்லியவாறு இருக்க முடியாதே! ஆகையால், நான் படிக்கத் தேடிப் பதிவிறக்கிய மின்நூல்களையும் பிறருக்குப் படிக்க உதவும் மின்நூல்களையும் மின்சேமிப்பகங்களில் களஞ்சியப்படுத்தி உள்ளேன். அவற்றைப் பதிவிறக்க உதவும் முகவரிகளைத் (URL) தொகுத்திருக்கிறேன்.

இன்று ஆயிரத்திற்குச் சற்றுக் குறைவாக இருந்தாலும் எதிர்காலத்தில் இலட்சக் கணக்கான மின்நூல்களைத் திரட்டித் தொகுக்கவுள்ளேன். 1995 இல் கணினி படித்துப் பின் விரிவுரையாளராகவும் நிகழ்நிரலாக்குனராகவும் இருந்தாலும் தற்போது நிறுவனமொன்றின் முகாமையாளராகவுள்ளேன். அதற்காகக் கணினிக் கல்வியைக் கைவிடலாமா? அதற்கும் யாழ் மென்பொருள் தீர்வுகள் (Yarlsoft Solutions) என்ற தளத்தைப் பேணுகிறேன். அதனூடாகத் தமிழ் மென்பொருள்கள் வெளியிடவுள்ளேன்.

இவ்வாறான வெளியீடுகளின் திரட்டியாக "யாழ்பாவாணனின் இணையவழிப் பணிகள் (Yarlpavanan's Network Duties)" என்ற தளத்தை ஆக்கியுள்ளேன். இதுவரை ஒழுங்குபடுத்திய எல்லா முயற்சிகளும் இனிச் செயற்படவுள்ளது. அதன் அறுவடைகளை இத்தளத்தில் பதிவுசெய்யவுள்ளேன். இத்தளத்தை எனது வலைப்பூக்களில் இணைத்துமுள்ளேன். இங்கு வருகை தருவதன் மூலம் பிந்திய பதிவுகள், பிந்திய தகவல் என்பன அறிய முடியும். அதற்குக் கீழுள்ள படத்தைச் சொடுக்கிப் பாருங்கள்.


12 comments:

  1. வாழ்த்துக்கள்! உங்கள் தமிழ் சேவை தொடரட்டும்!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      Delete
  2. உங்கள் தமிழ்பணிக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      Delete
  3. தங்களின் பணி சிறக்க வாழ்த்துக்கள் ஐயா,

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      Delete

  4. வணக்கம்!

    உங்கள் பணிதொடா்க! ஒப்பில் புகழ்பெறுக!
    தங்கத் தமிழைத் தாித்து

    கவிஞர் கி. பாரதிதாசன்
    தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      Delete
  5. மிகவும் மகிழ்ச்சி... மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் ஐயா...

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      Delete
  6. உங்களின் வலைப்பூக்கள் என்றும் மல்லிகை,ரோஜா, என மேலும் பல பூக்களைத்தொடர்ந்து தமிழ்த்தாயின் தோட்டத்தில் பூக்க வாழ்த்துகள் அண்ணா!!!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி

      Delete

தங்கள் கருத்துகளை வரவேற்கிறேன்.
உங்கள் யாழ்பாவாணன்.