Thursday 10 July 2014

ஊடகங்களும் எழுத்துப் பிழைகளும்


அன்று;
நான் பிறக்கும் முன்
எனது யாழ்ப்பாணத்தில்
ஒர் எழுத்துப் பிழைக்கு
ஒரு "25 சதம்" வழங்கியது
ஒரு பத்திரிகை நிறுவனம்!
வாசிப்பதும்
பிழை பிடிப்பதும்
அறிவைப் பெருக்குவதும்
பணம் ஈட்டுவதும்
அன்றைய
வாசகரிடமும் இருந்ததே!
இன்றைய பத்திரிகைகள்
எழுத்துப் பிழைகளால்
நிரம்பி இருந்தாலும்
வாசகரும் பொருட்படுத்துவதில்லை
பத்திரிகை ஆசிரியரும் கவனிப்பதில்லை
எங்கட பிள்ளைகள் தான்
முட்டாள் ஆகின்றனரே!
நாளேடுகள் (பத்திரிகை), ஏழல் ஏடுகள்,
சிறப்பு ஏடுகள் (நூல்கள்) எல்லாம்
எழுத்துப் பிழைகளோடு தான்
கடைத் தெருக்களில் தொங்குகின்றன
சில தொங்கினாலும்
திறந்து படிக்க இயலாதவாறு
கண்ணாடித் தாள்களால் மூடப்பட்டிருக்கும்
விரும்பியோர்
வேண்டிப் படிக்கலாம் என்று தான்!
வானொலி, தொலைக்காட்சி எல்லாம்
எழுத்துப் பிழை, உச்சரிப்புப் பிழை உடன்
நிகழ்ச்சி நடத்துறாங்க
கண்டுக்க யாருமில்லையா?
விரும்பியோர்
கேட்கலாம்; பார்க்கலாம் என்றா
நடத்துறாங்க!
ஆயிரத்திற்கும் மேலான - தமிழ்
வலைப்பூக்கள் (Blogs) உள்ளனவாம்
உண்மையில் எத்தனையோ
எழுத்துப் பிழைகளோடு தான்
உலாவி வருகின்றனவாம்
உலாவும் கருத்துபதிவரும்
கண்டு கொள்ளாமையால்
எழுத்துப் பிழைகள் மலிந்த
வலைப்பூக்கள் உலாவ வழியாயிற்றோ!
நல்ல ஊடகங்களின் சிறப்பு
எழுத்துப் பிழைகளற்ற வெளியீடே...
வெளியீட்டின் பின் எண்ணி
எழுத்துப் பிழைகள் சீராகாது
வெளியீட்டின் முன் பண்ணி
எழுத்துப் பிழைகள் வாராது
ஊடகக்காரர் தான் பாருங்கோ
எங்கட பிள்ளைகள் முட்டாளாகாமல்
பார்த்துக் கொள்ள வேண்டுமே!



8 comments:

  1. உண்மையை ஒளிவுமறைவின்றி உள்ளபடியே சொல்லும் உங்கள் பதிவும் பகிர்வும் தொடர வாழ்த்துக்கள்!
    நன்றி அய்யா!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      Delete
  2. அவரவர் உணர்ந்து மாற்ற வேண்டும் ஐயா...

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      Delete
  3. சமீபத்தில் தொலைக் காட்சி ஒன்றில் ...குண்டி வெடித்து பத்து பேர் பலி என்று போட்டதைப் பார்த்ததும் அதிர்ச்சியாகி போனேன் அய்யா !நீங்கள் சொல்வது சரிதான் ,இப்படி பலியாகும் முன்னர் திருத்த வேண்டாமா ?

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      Delete
  4. எழுத்துப் பிழைகள் மலிந்துவிட்டது உண்மைதான்! அவரவர்கள் பொறுப்புணர்ந்து செயல்பட்டால் பிழைகள் தவிர்க்கலாம்! நல்லதொரு பதிவு! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      Delete

தங்கள் கருத்துகளை வரவேற்கிறேன்.
உங்கள் யாழ்பாவாணன்.