Saturday 5 April 2014

Kaviyakavi: நன்றி சொல்ல வார்த்தை இல்லை

அறிஞர் இனியா அவர்களின் தளத்தைப் (http://kaviyakavi.blogspot.com/) பார்த்த போது,  "நன்றி சொல்ல வார்த்தை இல்லை" என்ற பதிவை நானும் எனது வாசகருடன் பகிர எண்ணினேன். "தமிழ் வளர்க்க எண்ணும் ரூபனும், பாண்டியனும் இணைந்து நடாத்திய போட்டியில், அவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்காகவே இப் போட்டியில் நான் பங்குபற்றி இருந்தேன்." என்று அறிஞர் இனியா அவர்கள் தெரிவித்திருப்பதை நானும் வரவேற்கிறேன். நானும் அதே நோக்கிலேயே பங்கு பற்றினேன்.

உறவுகளே! வெற்றி பெறவேண்டுமெனப் போட்டிகளில் கலந்து கொள்வதை விட, போட்டிகளில் கலந்து கொள்வதற்காக முயற்சி எடுப்பதோ பங்கெடுப்பதோ வெற்றி தான். எனவே, தீபாவளி, தைப்பொங்கல், சித்திரைப் புத்தாண்டென அறிஞர்கள் நடாத்தும் போட்டிகளில் கலந்து கொள்ள வேண்டுமென இப்பதிவைப் பகிருகிறேன். போட்டி நடத்துவதில் எத்தனை சிக்கல் இருக்கும் என்பதை யாவரும் அறிவர். ஆயினும், அப்போட்டிகளின் வெற்றி என்பது பங்கெடுப்போரின் எண்ணிக்கையிலே தங்கியிருக்கிறது.

உறவுகளே! அறிஞர்கள் நடாத்தும் போட்டிகள் ஊடாகச் சிறந்த படைப்பாளிகளை இனம் காண முடிந்தாலும் சிறந்த தமிழ்ப் படைப்புகளை அடையாளம் காணமுடியுமே! எனவே, எமது தமிழை அழியாது பேண எல்லோரும் போட்டிகளில் பங்கெடுக்க முன்நிற்க வேண்டும். மேலும், படைப்பாளிகள் எல்லோரும் இப்படி இணையும் போது உலகெங்கும் தமிழைப் பரப்பிப் பேண முடியுமே!

"எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்நன்றி கொன்ற மகற்கு.                 (110)
விளக்கம்:
எந்ந நன்மையை அழித்தவர்க்கும் தப்புதற்கு வழி உண்டாகும்: ஆயின், ஒருவர் செய்த உதவியை மறந்து அழித்தவனுக்கு உய்வே கிடையாது." என்றவாறு http://thirukural4u.blogspot.com/2009/05/11.html என்ற தளத்தில் நன்றி பற்றிக் குறிப்பிட்டிருப்பதைப் பொறுக்கி கீழுள்ள அறிஞர் இனியா அவர்களின் "நன்றி சொல்ல வார்த்தை இல்லை" என்ற பதிவைத் தங்களுடன் பகிருவதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.

Kaviyakavi: நன்றி சொல்ல வார்த்தை இல்லை

2 comments:

  1. எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
    செய்நன்றி கொன்ற மகற்கு.
    உண்மை தான் கவிஞரே! போட்டிகள் தமிழ் வளர்க்க மட்டுமல்ல, நல்ல பதிவுக்களை அடையாளம் காட்டுவது மட்டுமல்லாது எம்மையே எமக்கு இனம் காட்டி எமக்குள் நம்பிக்கையையும் விதைத்துச் செல்லுகிறது. எனவே அனைவரும் நிச்சயம் பங்கு பற்ற வேண்டும். என்பதே எனது விருப்பமும்.
    கூடித் தமிழ் வளர்ப்போம்.என் பதிவை வரவேற்று, அதை பகிர்ந்து, எனக்கு அறியத் தந்தமைக்கும் என் மனமார்ந்த நன்றிகள் ! போட்டியில் வெற்றி பெற்றமைக்கும் மேலும் போட்டிகளில் வெற்றி பெறவும் வாழ்த்துக்கள்....!
    வாழ்க வளமுடன்....!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்தை உளநிறைவோடு ஏற்றுக்கொள்கிறேன்.
      மிக்க நன்றி.

      Delete

தங்கள் கருத்துகளை வரவேற்கிறேன்.
உங்கள் யாழ்பாவாணன்.