Thursday 9 July 2015

ஒரு வெளியீட்டிற்காக...

நகைச்சுவையெனக் கூகிளில் தேடிய வேளை கீழ்வரும் படம் என் கண்ணில் சிக்கியது. அதைக் கொஞ்சம் படித்த வேளை, அதனை நம்மாளுங்க பார்க்க வைக்க எண்ணினேன். விளைவு தொடர்ந்து படியுங்க.
படத்தின் உரிமம் : வேடந்தாங்கல் (http://sakthistudycentre.blogspot.com/2013/08/free-hospital.html)

படத்தைப் பாருங்க...
இலங்கை என்றால் கொழும்பு காலிமுகத்திடல் கடற்கரை என நினைவூட்டுக.
இந்தியா-தமிழ்நாடு என்றால் சென்ன மெரீனாக் கடற்கரை என நினைவூட்டுக.

அடுத்துப் படத்திலுள்ள பேச்சைப் படியுங்க...
பெண் பிள்ளை உடனே கிளம்பணும் என்கிறாள்
ஆண் பிள்ளை அப்பா, அம்மா தேடுவாங்களா என்கிறான்
மீண்டும் பெண் பிள்ளை பள்ளிக்கூடத்தால மகனும் மகளும் வந்து தேடுவாங்களே என்கிறாள்

அடுத்துப் படத்திலுள்ள ஆள்களை அடையாளப் படுத்துங்க...
இளமை பேசும் இருவரில் எவரையும் அடையாளம் காணமுடியவில்லையா?

அப்ப உள்ளத்தில் எண்ணிப் பாருங்க...
இரண்டு பிள்ளைக்கு அப்பன்காரங்க: நான் வேலைக்குப் போனதும் என் பெண்டாட்டி இப்படித்தானோ...?

வேலையில்லாதவரைக் கட்டிய பெண்டில்மார்: எந்த மாட்டையும் கன்றுகளையும் மேய்க்கப் போனாரோ...?

தெருச் செய்தி: கடற்கரையில் காதல் பண்ணும் இளசுகளை விட இளசுகள் போன்ற பெரிசுகளே அதிகமாம்...

படம் பார் பேச்சைப் படி
ஆளைப் பிடி என்று
கூகிளில் தேடிய படத்தை வைத்து
காதல் மாசடைகிறது
குடும்பம் உடைந்து போகிறது
இந்த நொடிப்பொழுதில்
நம்மாளுங்க இப்படித்தானுங்க என்று
ஒரு வெளியீட்டிற்காக...
இரண்டு பிள்ளைக்கு அப்பன்காரங்களும் 
வேலையில்லாதவரைக் கட்டிய பெண்டில்மாரும் 
உள்ளத்தில் எண்ணியதையும் தந்து
தெருச் செய்தியாக நாட்டுநடப்பையும்
சொல்லி முடித்திருக்கிறேன்! - இனி
உங்கள் எண்ணங்களை வெளியிடுங்களேன்!


16 comments:

  1. உலகம் போற போக்கைப் பாரு...தங்கமே ஜில்லாலே....

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      Delete
  2. Replies
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      Delete
  3. அங்கேயும் காதல் இருப்பதில்லை...!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      Delete
  4. ....யாரங்கே....இதுக்கு காரணம் யார் ...என்று கண்டுபிடியுங்கள்.

    ReplyDelete
    Replies
    1. காவற்றுறையும் கண்காணிக்கிறது
      இதுவரை எவரையும்
      கண்டுபிடித்தாகத் தெரியவில்லை!

      Delete
  5. உலகம் கெட்டுப்போனதை உணர்த்துகிறது கார்டூன்!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      Delete
  6. காலம் கெட்டத்தான் போய்விட்டது ஐயா

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      Delete
  7. எல்லா காதலும் வாழ்க :)

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      Delete
  8. காலம் கலியுகம்....என்பது இதைத்தானோ...

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      Delete

தங்கள் கருத்துகளை வரவேற்கிறேன்.
உங்கள் யாழ்பாவாணன்.