Saturday 28 March 2015

கற்பழிப்புச் செய்திகளும் ஊடகங்களும்


கற்பு + அழிப்பு = கற்பழிப்பு என்று யாவரும் அறிந்ததே! கற்பு என்பது அறம் அல்லது ஒழுக்கம் என்று எல்லோரும் சொல்லுவார்கள். இதனடிப்படையில் ஊடகங்களும் தம்விருப்பிற்கு ஏற்றாற் போல கற்பழிப்புச் செய்திகளை வெளியிடுகின்றன.

கற்பு என்பது பெண்ணுக்கு மட்டும் உரியதல்ல; ஆணுக்கும் உரியதே! ஊடகங்கள் இதனை மறந்து விடுவதாகப் பலரும் பேசுவதுண்டு. இயற்கையும் பெண்ணுக்குப் பாதிப்பைத் தருவதால் ஊடகங்களை எதிர்க்க எவருமில்லை என்ற பேச்சு உலாவுகின்றது. ஊர்திகள் மோதுண்டால் மோதிய ஊர்திக்குத் தீமூட்டும் நம்மாளுகள்; பெண்ணைச் செய்தி ஆக்கும் ஊடகங்களையோ பெண்ணின் கற்பை அழிக்கும் ஆண்களையோ தீமூட்ட முன்வராமை தான் இந்நிலை தொடரக் காரணம்.

என் நிலை என்ன வென்றால் ஊர்திக்குத் தீமூட்டும் நம்மாளுகளின் செயலைப் பெரிதாகப் பரப்பும் ஊடகங்கள்; பெண்ணின் கற்பை அழிக்கும் கற்பில்லாத ஆண்களைச் செய்தியாக்கவோ கற்பில்லாத ஆண்களின் செயலைப் பெரிதாகப் பரப்ப முன்வராமை தான் இந்நிலை தொடரக் காரணம். இந்நிலை தொடருவதால் தான் பல பெண்கள் தற்கொலை செய்துகொள்கின்றனர்.

அப்படியாயின், கற்பழிப்புச் செய்திகளை எழுதுவது எப்படி?

நள்ளிரவில் நடுவழியே முள்ளூர் ஆண் கல்லூர் பெண்ணின் கற்பை அழித்துவிட்டான். இந்நிகழ்வை இப்படியும் சிலர் எழுதலாம்.

அரைகுறை ஆடை அணிந்து சென்ற பெண்ணைக் கண்ட ஆண் அவளைக் கெடுத்துவிட்டான்.

நடுவழியே தனியே சென்ற பெண்ணை ஆண்கள் சிலர் கெடுத்துவிட்டனர்.

மது அருந்திய ஆணை நம்பி நடுவழியே சென்ற பெண், அவனாலே கெடுக்கப்பட்டாள்.

இவ்வாறு எழுதுவோர் பெண்ணின் அடையாளத்தைத் தெரிந்து கொள்ள உதவும் தரவுகளையும் எழுதுவர். இப்படி எழுதுவதால் பெண்ணின் பக்கம் தான் முழுப்பிழை என்றாகிவிடுகிறது. இதனால் ஆண்கள் சுத்தமானவர்கள், பெண்களே தவறுக்குக் காரணம் என்றாகிவிடுகிறது.

இவற்றை இப்படி மாற்றி எழுதினால் எப்படி இருக்குமென்று பாருங்களேன்.

இளமை முற்றிய ஆணோ நடுவழியே அழகு முற்றிய பெண்ணைக் கண்டதும் கெடுத்துவிட்டான்.

ஆண்கள் சிலர் நடுவழியே தனியே சென்ற ஏதுமறியாப் (அப்பாவி) பெண்ணைக் கெடுத்து விலங்குகளாயினர்.

பக்கத்து வீட்டாளை நம்பிப் பணியிடத்திலிருந்து வீடு திரும்பிய பெண் அவனாலேயே கெடுக்கப்பட்டாள். பக்கத்து வீட்டாளைக் காவற்றுறை வலைவீசித் தேடுகின்றனராம்.

இப்படி, எப்படி எழுதினாலும் கூட கற்பழிப்பு நிகழ்வுகளைத் தடுக்க முடிவதில்லையே!

எடுத்துக்காட்டாக நள்ளிரவில் நடுவழியே முள்ளூர் ஆண் கல்லூர் பெண்ணின் கற்பை அழித்துவிட்டான் என்றதும் கல்லூர் மக்கள் கல்லெறிந்தே முள்ளூர் ஆணைக் கொல்ல முயன்றனர். அவ்வழியே வந்த காவற்றுறை நிலைமையைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தது.

பள்ளிக்கூட ஆசிரியை மாணவன் ஒருவரை வீட்டிற்கு அழைத்துக் கற்றுக்கொடுப்பதாகக் கூறித் தன் பாலியல் பசிபோக்கப் பாவித்தவேளை கண்ணுற்ற அயலண்டை ஆள்கள் ஆசிரியையை மரத்தில் கட்டிவைத்து ஊரைக்கூட்டி நோகடித்தனர். அவ்வழியே வந்த காவற்றுறை நிலைமையைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தது.

இவ்வாறு கற்பழிப்பு நிகழ்வுகளைத் தடுக்கவல்ல அல்லது கற்பழிப்பு நிகழ்வுகள் தொடராமல் இருக்க உதவும் வகையில் ஊடகங்கள் கற்பழிப்புச் செய்திகளை வெளியிடலாமே!

இது பற்றிப் பெண் ஊடகவியலாளர் ஒருவர் தன்பக்கக் கருத்துகளை எப்படி எழுதுவார். ஊடகவியல் அறிஞர் மு.வி.நந்தினி அவர்களின் "கற்பழிப்பு நியூஸ் எழுதுவது எப்படி?" என்ற பதிவைப் படித்தால் உங்களுக்குப் புரியும் என்று நம்புகிறேன். கீழுள்ள இணைப்பைச் சொடுக்கிப் படித்துப் பாருங்கள்.

http://mvnandhini.com/2015/03/27/%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5/

12 comments:

  1. பெண்ணியத்தை பற்றி பேசும் பதிவு
    நான்காவது தூண் என்று சொல்லப் படும் இதழ்கள்
    இது போன்ற தலைப்பு செய்திகள் இடுவதில் வணிக நோக்கமாக இருப்பதாகவே
    படுகிறது அய்யா!
    இருப்பினும் கற்பழிப்பு என்பதற்கு மாற்றாக "பாலியல் பலாத்காரம்" என்ற் சொற்றொடர் தற்போது பயன்படுத்தப்பட்டு வருவது பரவாயில்லை அய்யா!
    லின்க் படித்தேன் நன்றான விளக்கம்.
    நட்புடன்,
    புதுவை வேலு

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      Delete
  2. இணைப்பிற்கு நன்றி ஐயா....

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      Delete
  3. நன்றி அண்ணா . நான் சென்று பார்க்கிறேன் .

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      Delete
  4. சமூக பயனுள்ள பதிவு நண்பரே...
    தமிழ் மணம் ஓட்டு போட முடியவில்லையே...

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      Delete
  5. இல்லாதது கற்பு... அந்த இல்லாத கற்பை கூட ஒருத்தருக்கு மட்டுமே உரியது என பொதுவில் வைத்துவிட்டனர்.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      Delete
  6. மிக நல்ல பதிவு நண்பரே!
    முவிநந்தினியின் கேள்வி நியாயமானதே! மிகச் சரியே! எங்களுக்கு ஒரு பதிவிற்கு வழி வகுத்துவிட்டது...மிக்க நன்றி!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      Delete

தங்கள் கருத்துகளை வரவேற்கிறேன்.
உங்கள் யாழ்பாவாணன்.