Monday 19 January 2015

பரிசு பெற்ற பதிவுகள் மின்நூலாக வெளிவரும்!

உலகத் தமிழ் வலைப்பதிவர்களே!
வலைப்பூக்கள் வழியே ரூபன் குழுவினர் அடுத்தடுத்து இலக்கியப் போட்டிகளை நடாத்துவது யாவரும் அறிந்ததே! இவ்வாறான போட்டிகளில் முதல் பத்துப் பதிவுகள் தெரிவு செய்யப்படுவது வழக்கம். 2015 தைப்பொங்கல் நாளை முன்னிட்டுச் சிறுகதைப் போட்டியும் நடாத்துகிறார்களே!

யாழ்பாவாணன் வெளீயீட்டகம் ஆகிய நாம் ஒவ்வொரு போட்டியிலும் தெரிவு செய்யப்பட்ட முதல் பத்துப் பதிவுகளை ரூபன் குழுவினருடன் இணைந்து ஒவ்வொரு மின்நூலாக வெளியிட எண்ணியுள்ளோம். அவற்றை மின்நூலகமாக (Cloud Drive இல்) பேணி உலகெங்கும் பரப்ப எண்ணியுள்ளோம். ஒவ்வொரு மின்நூலிலும் உங்கள் பதிவு இடம் பெற வேண்டுமாயின் ரூபன் குழுவினர் நடாத்தும் ஒவ்வொரு போட்டியிலும் பங்குபற்றி முதல் பத்து இடத்திற்குள் தங்கள் பதிவு இடம் பெற்றிருக்க வேண்டும்.

கடந்த இரண்டு ஆண்டுகளில் நடாத்திய போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுடன் நீங்களும் இணைந்து 2015 தைப்பொங்கல் நாளை முன்னிட்டு நடாத்தப்படும் சிறுகதைப் போட்டிகளில் பங்கெடுக்க முன்வாருங்கள். மேலதிகத் தகவலைப் பெறக் கீழ்காணும் படத்தைச் சொடுக்குக.

உலகம் தழுவிய மாபெரும் சிறுகதைப் போட்டி

இப்போட்டிகள் யாவும் வருவாய் நோக்கமின்றி பொதுப்பணியாகவே (சேவையாகவே) நடாத்தப்படுகிறது. இதன் இலக்கு சிறந்த பதிவர்களை அடையாளப்படுத்தவும் தமிழை உலகெங்கும் பரப்பவுமே! உலகெங்கும் வாழும் வலைப்பதிவர்கள் ஒன்றிணைந்து இப்பொதுப்பணி வெற்றி பெற உழைப்போம் வாருங்கள்.


12 comments:

  1. போட்டியில் கலந்து கொள்ளும் நண்பர்களுக்கு எமது வாழ்த்துகள்....

    கில்லர்ஜி

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      Delete
  2. நானும் போட்டியில் கலந்துகொள்ள ஆவலாக இருகிகறேன் . ஆனால் போட்டி குறித்த சந்தேகங்களை திரு . ரூபன் அவர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பியும் இன்னும் பதில் வரவில்லை அண்ணா !!!

    ReplyDelete
    Replies
    1. விரைவில் பதில் தருவார்.
      தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      Delete
  3. வணக்கம் ஐயா!

    மிக நல்ல முயற்சி! பங்குபற்றுபவர்களுக்கு நல்ல ஊக்குசக்தியாகத் திகழும்!

    போட்டியில் கலந்து சிறப்பிக்கும் அனைவருக்கும் அரிய தொண்டினைப் புரிந்துவரும் உங்களுக்கும் சகோதரர் ரூபனுக்கும் உளமார்ந்த நல் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      Delete
  4. அசத்தல்...

    முயற்சி சிறக்கும்... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      Delete
  5. வாழ்த்துக்கள்! சீரிய பணி சிறக்கட்டும்!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      Delete
  6. ரூபன் மற்றும் உங்கள் ஆர்வத்திற்கும் சேவைக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      Delete

தங்கள் கருத்துகளை வரவேற்கிறேன்.
உங்கள் யாழ்பாவாணன்.