Thursday 28 August 2014

தீபாவளிக் கவிதைப் போட்டியின் முடிவுகள் வரும்போது...

தீபாவளிக் கவிதைப் போட்டி அறிவிப்பை
01/08/2014 இல் பதிவர் ரூபன் பதிவுசெய்தார்.
http://tamilkkavitaikalcom.blogspot.com/2014/08/2014.html
உலகெங்கும் 12000 இற்கு மேல்
பதிவர்கள் இருக்கின்ற செய்தி அறிந்தேன்
அவர்கள் அத்தனை பேரும் போட்டியில்
பங்கெடுப்பார்கள் என நம்பியே
எனது எண்ணங்களை இப்படிப் பகிர்ந்தேன்...
01/08/2014 இல்
தீபாவளி (2014) நாளில் மாபெரும் கவிதைப் போர்!
http://eluththugal.blogspot.com/2014/08/2014.html
03/08/2014 இல்
போட்டியென்று வந்துவிட்டால் பாயும்புலி!
http://wp.me/pTOfc-b1
08/08/2014 இல்
பாபுனையும் ஆற்றல் இருப்பின் போட்டிக்கு வாரும்!
http://paapunaya.blogspot.com/2014/08/blog-post.html
23/08/2014 இல்
பாரும் பாப்புனைதலுக்கான போர்க்களம்
http://paapunaya.blogspot.com/2014/08/blog-post_23.html
போட்டியின் முடிவு நாள் - அது
இந்திய நேரப்படி 01/09/2014 இரவு 12 மணி
இறுதி நேரம் வரை காத்திருக்காமல்
பதிவுகளை முன்கூட்டியே அனுப்பியோர்
போட்டியின் முடிவுகள் எப்படி இருக்குமென
எண்ணிப் பார்க்கையிலே
எத்தனை ஆயிரம் பேர்
போட்டியில் பங்கெடுத்தார்களென
நடுவர்கள் தெரிவிக்க இருப்பதை
நானும் அறியக் காத்திருக்கிறேன்!
தீபாவளிக் கவிதைப் போட்டியின்
முடிவுகள் வரும் போது - நானும்
நகைச்சுவைப் பதிவர்களை வெளிக்கொணர
ஐந்தடிக் குறும்பா (லிமரிக்) உடன்
நான்கடி உரையாடல் (ஸ்கிரிப்) நகைச்சுவை
இல்லாவிட்டால் பாரும்
சிறுகதைப் பதிவர்களை வெளிக்கொணர
75-100 சொல்களைக் கொண்ட கடுகுக்கதை
தைப்பொங்கல் நாள் போட்டி நடத்த
எல்லோரையும் தயார்ப்படுத்த எண்ணியிருக்கேன்!
ஆனால், அதற்கு முன்
நண்பர்கள் எல்லோருக்கும் சொல்லி
முடிவு நாளுக்கு முன்னதாகவே
பல்லாயிரம் பதிவர்களை அழைத்து
தீபாவளிக் கவிதைப் போட்டியில்
பங்கெடுக்கச் சொல்லிவிடுங்கோ!
போட்டிகள் யாவும்
வலைப்பூக்களில் தமிழைப் பேணவும்
உலகெங்கும்
தமிழை வாழ வைக்கவுமே!

16 comments:

  1. வணக்கம்
    அண்ணா.

    உலகம் தழுவிய கவிதைப் போட்டி பற்றி பல தளங்களில் விளம்பரங்கள் வெளியாகியுள்ளது. அதிலும்தங்களின் பக்கம் வித்தியாசமான தலைப்பில் விளம்பரப்படுத்தியுள்ளீர்கள் தங்களின் விட முயற்சியை பாராட்டுகிறேன்.

    பொங்கல் தினத்திற்கும் ஒரு போட்டியா.. கேட்கவே மகிழ்ச்சியாக உள்ளது.. நடத்தலாம்.....த.ம 1வது வாக்கு
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. போட்டியாளர்களைப் பெருக்குவோம்.

      ரூபன் குழுவினர் தொடர்ந்து போட்டி வைப்பார்கள் என்ற நம்பிக்கை இருக்கே... அதை வைச்சே பொங்கல் தினத்திற்கும் ஒரு போட்டி என்று எழுதினேன்.

      மிக்க நன்றி.

      Delete
  2. நல்லமுயற்சி வாழ்த்துக்கள் நண்பரே...

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      Delete
  3. வணக்கம் ஐயா!

    தமிழ்மொழி வளர்ச்சியில் தங்களின் பரந்த நோக்குக் கண்டு மிக்க மகிழ்ச்சி!

    முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள் ஐயா!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      Delete
  4. கூடித் தமிழ் வளர்ப்போம் கோணாமல் !
    தங்கள் எண்ணம் இனிதே நிறைவேற என் மனமார்ந்த வாழ்த்துக்கள் சகோ !
    தங்களை நினைத்து பெருமை கொள்கிறேன்.!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      Delete
  5. நானும் போட்டியில் பங்கெடுக்கலாம் என்று பார்த்தால் கவித வர மாட்டேன்கிறதே... இதுக்குத்தான் அதிர்ஷ்டம் இருக்கனும் என்கிறதோ..........

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      Delete
  6. வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி ஐயா !
    வண்ணப் படத்திற்கான கவிதையும் வெளியிட்டுள்ளேன்
    மகிழ்வோடு காண வாருங்கள் ஐயா .இதோ ..
    http://rupika-rupika.blogspot.com/2014/08/2014-2.html

    ReplyDelete
    Replies
    1. எங்கள் உணற்சி நரம்புகளைத் தட்டி எழுப்பும்
      தங்கள் உயிருள்ள பாவரிகளைப் படித்தேன்!

      http://tamilkkavitaikalcom.blogspot.com/2014/08/2014.html என்ற இணைப்பில்
      போட்டிக்கான "கவிதை எழுத வேண்டிய ஓவியம்" என
      வேறொரு வண்ணப்படம் காணப்படுகிறதே!

      Delete
  7. உண்ணும் உணவிலும் உயித்தெளுமோ
    எண்ணும் எண்ணமெலாம் தமிழெனவே !
    கண்ணும் கருத்துமாய் நிகழ்த்தும்பணி
    மண்ணும் போற்றிட வாழ்க நன்றே !

    வாழ்த்துக்கள் யாழ்பாவாணன் ஐயா !
    வாழ்த்துக்கள் அன்புச் சகோதரன் ரூபன் !

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      Delete
  8. வருகைக்கும் மனமார்ந்த பாராட்டிற்கும் மிக்க நன்றி ஐயா !
    ஒரு படம் போட்டிக் குழுவினரால் தரப்பட்டது மற்றுமொரு
    படத்தை நாமே தேர்வு செய்து அதற்குப் பொருந்தும் வகையில்
    கவிதையை வடிக்கும்படி அறிவித்திருந்தனர். அந்த வகையில்
    என் முதற் கவிதை வரிகள் இவை ..
    http://rupika-rupika.blogspot.com/2014/08/2014.html

    அடுத்தபடியாக சுய தேர்வின் அடிப்படையில் வந்த படம் இது
    இதற்கான கவிதை வரிகள் இவை !
    http://rupika-rupika.blogspot.com/2014/08/2014-2.html

    மீண்டும் ஒரு முறை தங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் ஐயா .

    ReplyDelete
    Replies
    1. தாங்கள் பெரிய உள்ளம் படைத்தவர்
      தங்கள் படைப்பின் பார்வை நன்று
      சின்னப் பொடியன் நான் பார்த்ததில்
      சின்னதாகப் படங்களில் குழம்பி விட்டேன்
      என்னை மன்னிக்கவும் - எனது
      வாசகர்களுக்கும் தங்கள் படைப்பின் சிறப்பையே
      படித்துப் பயன்பெறலாமெனப் பகிருகிறேன்!

      Delete

தங்கள் கருத்துகளை வரவேற்கிறேன்.
உங்கள் யாழ்பாவாணன்.