Sunday, 1 March 2015

அ... ஆ... ஆள்களின் செய்தீகள்


"அ-மனிதர்கள்!" என்றதும்
"அ" இற்குப் பொருள் தேடியே
படிக்கின்ற வேளை...
"ஆ" என்று ஆட்டுவித்த - அந்தந்த
நிகழ்வுகளைப் படம் பிடித்துக் காட்டிய
அருமையான பதிவை - நானும்
படித்தமையால் பகிர்கிறேன் - நீங்களும்
படிக்க மறந்துவிடாதீர்கள்...
.
1990 இல் பாவலர் முத்துநிலவன் எழுதிய
பாவொன்றே பதிவின் கருப்பொருள்

இலங்கையிலே செத்ததுவும் மனிதர், அஸ்ஸாம்
      எரிந்ததிலே செத்ததுவும் மனிதர், பஞ்சாப்
கலங்கையிலே செத்ததுவும் மனிதர், டெல்லிக்
      கலவரத்தில் செத்ததுவும் மனிதர், காஷ்மீர்
குலுங்கையிலே செத்ததுவும் மனிதர், பாபர்
      கோவிலிலே செத்ததுவும் மனிதர், அறிவு
மழுங்கையிலே செத்ததெல்லாம் சிவந்த ரத்த
      மனிதர்கள்! மனிதர்கள்! மனிதர் கள்தான்!

கருப்பொருள் புரிந்தால்
ஒருகணம் எண்ணிப்பாருங்கள்
வரலாறு நம்மாளுகளை திருத்தும்
என்பது பொய்யாகி
நம்மாளுகள் வரலாற்றைத் திருத்தும்
இழிசெயலை எண்ணிப்பாருங்கள்
அதற்கு முன்
"அ-மனிதர்கள்!" பதிவைப் படிக்க
கீழ்வரும் இணைப்பைச் சொடுக்குங்கள்!
http://valarumkavithai.blogspot.com/2015/02/blog-post_28.html

"வரலாறு என்பது
அழிக்க முடியாத ஒன்றே - அந்த
வரலாற்றையே அழிக்க முடிந்தால்  - அந்த
புதிய வரலாறே - அதற்கு
முன்னைய வரலாற்றின் சான்று!" என்று
"அ-மனிதர்கள்!" எவரையாவது கண்டால்
காதிற்கு எட்டும்படி சொல்லிவையுங்கள்!

6 comments:

  1. அருமையான பதிவு நண்பரே...

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      Delete
  2. அற்புதமானபதிவு அண்ணே ! நானும் அப்படிப்பட்ட அ மனிதர்களைப்பார்த்தால் சொல்லுவேன் .

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      Delete
  3. பாவலர் முத்து நிலவன் தளத்திலும் படித்தேன்! பகிர்ந்தமைக்கு நன்றி!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      Delete

தங்கள் கருத்துகளை வரவேற்கிறேன்.
உங்கள் யாழ்பாவாணன்.