எண்ணியதெல்லாம் எழுது - அது
எந்த இலக்கியம் என்று கேளாமலே...
அட, இலக்கியம் என்றால்
என்ன என்று கேட்கிறீரோ...
வாழ்ந்த, வாழும்
நம்மாளுகளின் வாழ்வை
படம் பிடித்துக் காட்டுவதே
இலக்கியம் என்கிறார்களே...
எழுது எழுது எழுது
எழுதப் புகுந்தால்
வாசிப்பது, எவர் என்று கேட்கிறீரோ...
அடடே, உன் எழுத்தால்
வாசிப்பவர் உள்ளத்தை
மகிழ்வடையச் செய்வாய் எனின்
மகிழ்வடைவதற்காக வாசிக்கும்
எல்லோரும்
உன் எழுத்தை வாசிப்பார்களே...
எழுதிய பதிவை
எவர் வெளியிட வருவாரா...
உனது சொந்தப் பதிவாயின்
எல்லோரும் உதவுவார்களே...
எழுதத் தூண்டுபவை
எவை என்று கேட்கிறீரோ...
மக்கள் வாழ்க்கையை படி
பழைய, புதிய
இலக்கியவாதிகளின் நூலைப் படி
நல்ல திரைப்படத்தைப் பார்
இதற்கு மேலும் - உன்
தேடலைப் பெருக்கினால் போதாதா?
எழுதுவதால் மகிழ்வடையப் பார்
உன் எழுத்தைப் பார்த்து
மகிழ்வோரின் விருப்பறிந்து எழுது...
உன் உள்ளத்தில் எழும்
நல்லெண்ணங்களையோ
படித்தறிவையோ
பட்டறிவையோ
மதியுரையையோ
வழிகாட்டலையோ
நாட்டு மக்களுக்குத் தெரிவிக்க
எழுத்தாசிரியர் ஆகலாமே!
எண்ணியதெல்லாம் எழுது
அதனால்
நாட்டு மக்கள் - தங்கள்
அறிவைப் பெருக்குவார்களே!
பலரது கற்பனைக் கண்ணை திறக்கும் உங்களின் பதிவு !
ReplyDeleteதங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
Deleteமிக்க நன்றி.
எளிமையான ,செழுமையான கவிதை !! உற்சாகத்தை ஊற்றாய் பெருக்கெடுக்க வைக்கிறது !!!
ReplyDeleteதங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
Deleteமிக்க நன்றி.
மக்கள் வாழ்க்கையை படி
ReplyDeleteபழைய, புதிய
இலக்கியவாதிகளின் நூலைப் படி
நல்ல திரைப்படத்தைப் பார்----தங்களின் எழுத்துப்படியே நான் பின்பற்றி வருகிறேன்.
தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
Deleteமிக்க நன்றி.
அழகாகச் சொன்னீர்கள் நண்பரே.
ReplyDeletehttp://www.gunathamizh.com/2011/09/blog-post_17.html
தங்கள் இடுகையோடு தொடர்புடைய - எழுதுவதெல்லாம் எழுத்தல்ல - என்ற இடுகையை வாசிக்கத் தங்களை அன்புடன் அழைக்கிறேன்.
தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்.
Deleteஎனது பதிவை விட
தங்கள் பதிவு
பதிவர்களுக்கு
அதிக தன்னம்பிக்கை தருமென
நம்புகின்றேன்!
நானும்
தங்கள் பதிவை விரும்புகிறேன்!
அருமையாகச்சொன்னீர்கள்! எழுத எழுத எழுத்து வசமாகும்! நல்ல கவிதை! நன்றி!
ReplyDeleteதங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
Deleteமிக்க நன்றி.
ஒவ்வொரு வரிகளும் எழுதுபவனுக்கு தன்னம்பிக்கை தருகிறது நண்பரே...
ReplyDeleteகவிதைப்போட்டிக்கு அனுப்பிய எமது கவிதைக்கு வாருங்கள்.
வணக்கம் ஐயா!
ReplyDeleteஎழுத்தை அறிந்து எழுதிட ஓங்கும்
பழுக்குமே பைந்தமிழும் பார்த்து!
அருமை! நல்ல கவிதை! சிறந்த சிந்தனை!
வாழ்த்துக்கள் ஐயா!
தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
Deleteமிக்க நன்றி.
Nanru
ReplyDeleteVetha.Elangathilakam