Thursday 23 April 2015

நீங்கள் படைப்பாளிகளா?

படைப்பாளிகளே!
படைப்புகளை எப்படி ஆக்குவீர்?
அதற்கான
சூழ்நிலை எப்படி அமைந்துவிடுகிறது?
படைப்பாளி ஒருவரின்
படைப்பாக்க முயற்சிக்கு ஏற்ற
சூழ்நிலை தான் - அந்த
படைப்பின் வெற்றியைத் தீர்மானிக்கின்றது!

கதையோ கவிதையோ வா வாவென்று
எழுதக் குந்தினால்
ஒழுங்காய் எழுத வராது
கதையோ கவிதையோ
உள்ளத்திலே கருவுற்று எழுத வரும் வேளை
எழுதிப்பார்த்தீர்களா? - அவ்வேளை
எழுதிய படைப்பே - நீங்கள்
எதிர்பார்க்காத அளவுக்கு
சிறப்பாக அமைந்திருப்பதை உணருவீர்களே!

எழுதியதை வெளியீடு செய்வது என்பது
இலகுவான ஒன்றல்ல - அதுவும்
புதியவர்கள் வெளியீடு செய்வது என்றால்
எத்தனை சிக்கல்கள்?
அத்தனைக்கும் முகம்கொடுத்து
வெளியிட்ட பின்னர் - அதனை
வாசகர் கையிற்குக் கொண்டுபோய்
சேர்த்த பின்னரே வெற்றி என்பேன்!

இதெல்லாம்
அறிஞர் கரந்தை ஜெயக்குமார் எழுதிய
"மகளுக்காக" என்ற பதிவைப் படித்தால்
புரிந்துகொள்ள முடியும் என்பேன்!
நீங்கள் படைப்பாளிகளா? - அப்ப
படைப்பாக்கம், வெளியீடு பற்றி
எண்ணிப் பார்த்ததுண்டா? - அப்ப
கீழ்வரும் இணைப்பைச் சொடுக்கி
http://karanthaijayakumar.blogspot.com/2015/04/blog-post_22.html
அறிஞர் கரந்தை ஜெயக்குமாரின்
"மகளுக்காக" என்ற பதிவைப் படித்த பின்
என் கருத்தில்
தவறிருந்தால் சொல்லுங்களேன்!

Tuesday 14 April 2015

எல்லோருக்கும் சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள்!


(படம்: கூகிள் தேடலில்...)
எனது ஏழு வலைத் தளங்களின்
(நடைபேசியில் http://tik.ee/kasig1)
http://eluththugal.blogspot.com/
http://yppubs.blogspot.com/
http://paapunaya.blogspot.com/
https://mhcd7.wordpress.com/
http://yarlpavanan.wordpress.com/
https://ial2.wordpress.com/ 
(கட்டியமைக்கிறேன், விரைவில் அறிமுகம் செய்வேன்)
http://www.yarlsoft.com/
(கட்டியமைக்கிறேன், விரைவில் அறிமுகம் செய்வேன்)
வாசகர் எல்லோருக்கும்
தங்கள் குடும்பத்தாருக்கும்
என் இனிய
சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள்!

Friday 3 April 2015

மின்நூல் - தாலியுடன் தனிமரம் போலத் தவிக்கின்றேன்

என் இனிய பதிவுலக உறவுகளே!

எனது எண்ணங்களை வெளியிட வலைப்பூக்களை நடத்துவதோடு மின்நூல்களை வெளியிட யாழ்பாவாணன் வெளியீட்டகமூம் கணினித் தீர்வுகளை வெளியிட யாழ் மென்பொருள் தீர்வுகள் என்றும் இறங்கி நானே முழுமையான பணியை வெளிக்கொணர முடியாத வேளை அறிஞர் நேசனின் வேண்டுதலை ஏற்று அவரது மின்நூலை வெளியிட வேண்டியதாயிற்று. நேரம் கிடைக்கின்ற வேளை இவ்வாறு பிற அறிஞர்களின் மின்நூல்களை வெளியிடும் எண்ணம் எனக்குண்டு.

பிற அறிஞர்களின் மின்நூல்களை வெளியிடும் போது அவர்கள் சொல்ல வரும் செய்தி, அவர்களது எழுத்தாளுமை, அவர்களது மக்களாயப் (சமூகப்) பொறுப்புணர்வு, அவர்களது மக்களாய (சமூக), நாட்டு முன்னேற்ற எண்ணங்கள் எனப் பலவற்றை நான் எண்ணிப்பார்க்க வேண்டியிருக்கிறது. அறிஞர் நேசனின் மின்நூலை வெளியிடும் போதும் இவற்றையே பொருட்படுத்தினேன்.

அறிஞர் நேசனை நேரில் கண்டதுமில்லை. ஸ்கைப், வைபர் எதிலும் முகம் பார்த்துக் கதைத்ததுமில்லை. அவரது எழுத்தை நம்பியே இம்மின்நூலை வெளியிடுகிறேன். அவரைப் பற்றியோ அவரது மின்நூலைப் பற்றியோ நானே அடுக்கிச் சென்றால் அழகிருக்காது. அவரது மின்நூலைப் படித்தால் அழகாக அத்தனையும் நீங்களே அறிய வாய்ப்புண்டு.

யாழ்பாவாணன் வெளியீட்டகமூடாகத் தனிமரம் வலைப்பூ நடாத்தும் அறிஞர் நேசனின் "தாலியுடன் தனிமரம் போலத் தவிக்கின்றேன்" என்ற மின்நூலை வெளியிட்டு, உங்கள் பார்வைக்கு முன்வைக்கின்றேன். அதனைப் படித்த பின் அறிஞர் நேசனை ஊக்கப்படுத்துவதோடு நின்றுவிடாமல் எனது வெளியீட்டு முயற்சி பற்றிய தங்கள் எண்ணங்களையும் பகிர முன்வாருங்கள்.

இதோ அவரது மின்நூலைப் பதிவிறக்கத் தேவையான இணைப்பு
http://www.thanimaram.org/2015/04/blog-post_2.html

எனது வெளியீட்டு முயற்சியோடு அறிஞர் நேசனின் "தாலியுடன் தனிமரம் போலத் தவிக்கின்றேன்" என்ற மின்நூல் வெளியிடு பற்றியும் அறிஞர்களாகிய நீங்கள் உங்கள் வலை ஊடகங்களில் உங்களது திறனாய்வை (விமர்சனத்தை) வெளியிடலாம். தவறுகள் ஏதுமிருப்பின் தப்பாமல் சுட்டுங்கள். கிட்டவுள்ளோர் என் தலைக்குக் கல்லெறியலாம். தூரவுள்ளோர் என் தலைக்குச் சொல்லெறியலாம். யாழ்பாவாணன் வெளியீட்டகம் வெளிக்கொணரும் வெளியீடுகள் வாசகர் பக்கம் செல்லவோ செல்லாமல் இருக்கவோ உங்களது திறனாய்வு (விமர்சனம்) உதவும் என நம்புகிறேன்.